நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை உட்பட இந்தியா முழுவதும் உள்ள 236 நகரங்களில் ட்ரூ 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக மேலும் 21 நகரங்களுக்கு ட்ரூ 5ஜி சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் 257 நகரங்களில் தற்போது ஜியோ 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 5G சேவைகளை செயல்படுத்துவதில் முன்னோடியாக உள்ள ரிலையன்ஸ் நிறுவனம், இன்று ஒரே நாளில் 7 மாநிலங்களில் உள்ள 21 நகரங்களில் 5G சேவைகளை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் குஜராத், ஹிமாச்சல் பிரதேஷ், மத்திய பிரதேஷ், மஹாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள 21 நகரங்கள் உள்ளன. இதன் மூலம், 257 நகரங்களில் உள்ள ஜியோ பயனர்கள் இதுவரை Jio True 5G சேவைகளை பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "5G சேவைகள் அறிமுகமாகியுள்ள நகரங்களில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள், வெல்கம் ஆஃபருக்கு அழைக்கப்பட்டு, அன்லிமிடெட் டேட்டாவை 1 GBPS+ வேகத்தில் அனுபவிக்க, கூடுதல் கட்டணமின்றி, இன்று முதல் வழங்கப்படுகிறது.
இந்த 2023 ஆம் புத்தாண்டில் அனைத்து jio பயனரும், ட்ரூ 5ஜி தொழில்நுட்பத்தின் சேவைகளை அனுபவிக்கும் வகையில், 5G சேவைகள் வழங்குவதை விரைவுபடுத்தியுள்ளதாக, ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஆண்டு இறுதியான டிசம்பர் மாதத்திற்குள், இந்தியா முழுவதும் 5G சேவைகள் விரிவுபடுத்தப்படும். ஜியோவின் சேவைகளை விரிவுபடுத்த உறுதுணையாக இருந்த ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், கோவா, ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு நன்றி என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 5G technology, Jio, Jio 5G