முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / நாடு முழுவதும் கூடுதலாக 34 நகரங்களில் 5ஜி சேவை... ஜியோ நிறுவனம் அறிவிப்பு

நாடு முழுவதும் கூடுதலாக 34 நகரங்களில் 5ஜி சேவை... ஜியோ நிறுவனம் அறிவிப்பு

ஜியோ 5ஜி சேவை

ஜியோ 5ஜி சேவை

நாடு முழுவதும் கூடுதலாக 34 நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்படும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜியோ இந்தியாவில் இணையப் புரட்சியை ஏற்படுத்திவருகிறது. தரமான 4 ஜி இணைய சேவையை வழங்கியதன் மூலம் இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக ஜியோ உருவெடுத்தது. தற்போது, ஜியோ நிறுவனம் அதன் பயனாளர்களுக்கு 5 ஜி சேவையை வழங்கிவருகிறது. இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஜியோ 5 சேவை வழங்கும் எல்லையை அதிகப்படுத்திவருகிறது.

நாடு முழுவதும் இன்றுமுதல் ஜியோ நிறுவனம் கூடுதலாக 34 நகரங்களுக்கு 5 ஜி சேவையை வழங்கவுள்ளது. அதில், தமிழ்நாட்டில் எட்டு நகரங்களில் 5 ஜி சேவை வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக 30 நகரங்களில் 5 ஜி சேவை வழங்கப்படவுள்ளது. அதன்மூலம் இந்தியாவில் மொத்தமாக 365 நகரங்களில் தரமான 5 ஜி சேவையை ஜியோ நிறுவனம் வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே, சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், வேலூர், ஓசூர், திருப்பூர், ஈரோடு, தருமபுரி, தூத்துகுடி, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, கோவில்பட்டி, பொள்ளாச்சி, புதுச்சேரியில் 5 ஜி சேவை வழங்கப்பட்டு வந்தது.

மகளிர் ஐபிஎல் : விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வி… முதல் வெற்றியை இன்று பெறுமா பெங்களூரு அணி?

இன்றுமுதல், ஆம்புர், சிதம்பரம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகாசி, திருச்செங்கோடு, விழுப்புரம் ஆகிய நகரங்களில் 5 ஜி சேவை வழங்கப்படவுள்ளது. இந்த நகரங்களிலுள்ள ஜியோ பயனாளர்கள் கூடுதல் கட்டணமின்றி ஒரு ஜி.பிக்கும் கூடுதலான வேகத்தில் இணைய சேவையைப் பெற முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Jio, Jio 5G