இந்தியா - சீனாவுக்கு இடையே பிரச்னைக்குரிய பகுதியாக இருந்துவரும் லடாக்கின் பாங்காங் ஏரியை ஒட்டியுள்ள கிராமம் வரையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தன்னுடைய 4 ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்த ரிலையன்ஸ் ஜியோவின் அறிக்கையில், ‘லடாக்கிலுள்ள பாங்காங் ஏரி அருகிலுள்ள ஸ்பேங்மிக் கிராமம் வரையில் ஜியோ தன்னுடைய 4 ஜி வாய்ஸ் கால் மற்றும் இணைய சேவையை விரிவுபடுத்தியுள்ளது. பிரபலமான சுற்றுலாத்தளமாக இருந்துவரும் பான்காங் ஏரி சுற்றிய பகுதிகளுக்கு 4 ஜி சேவை வழங்கும் முதல் நிறுவனமாக ஜியோ இடம் பிடித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
லடாக்கின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜம்யங் டிசெரிங் நம்கியால் ஜியோ 4 ஜி மொபைல் டவரை தொடங்கிவைத்தார். 4 ஜி தொலைதொடர்பு சேவை தேவை என்பது இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது என்று நம்கியால் தெரிவித்துள்ளார். ஜியோவின் சேவை இந்தப் பகுதியின் பொருளாதாரத்தை முன்நகர்த்தும், அதேநேரத்தில் சுற்றுலாப் பயணிகள், ராணுவத்தினருக்கும் சிறந்த இணையசேவையையும் கொடுக்கும்’ என்று தெரிவித்தார்.
ஜியோவின் அறிக்கையில், ‘லடாக் பகுதிகளில் ஜியோ நிறுவனம் தன்னுடைய நெட்வொர்க்கைத் தொடர்ந்து விரிவுபடுத்தும். சமூகத்தை முன்னேற்றும் வகையில் எல்லாருக்கும் தொலைதொடர்பு சேவையை கிடைக்கச் செய்யும். கடுமையான வானிலை சூழல் இருந்தாலும், மிகக் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் ஜியோ நிறுவனம் லடாக் பகுதியிலுள்ள தொலைதூர பகுதிகளுக்கும் தொலைதொடர்பு சேவையை உறுதி செய்யும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.