ஜியோ எஃபெக்ட்... டேட்டா & வாய்ஸ் கால் குறைந்த விலையில் வழங்கும் வோடாஃபோன்...!

ரூ.169 ஃபேக் இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் வழங்கப்படுகிறது. ஏர்டெல் நிறுவனமும் ரூ.169 விலையில் பிரீபெயிட் ஃபேக் வழங்குகிறது. இச்சலுகையில் வோடபோன் வழங்குவதை போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது.

news18
Updated: February 5, 2019, 3:29 PM IST
ஜியோ எஃபெக்ட்... டேட்டா & வாய்ஸ் கால் குறைந்த விலையில் வழங்கும் வோடாஃபோன்...!
வோடாஃபோன்
news18
Updated: February 5, 2019, 3:29 PM IST
ரூ.169 விலை கொண்ட ஃபேக்கில் 1 ஜி.பி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கிவரும் வோடாஃபோன் தற்போது ரூ.119 விலையில் புதிய ஃபேக் ஒன்றை அறிவித்துள்ளது.

ஜியோ வருகைக்குப் பின்னர் ஏர்டெல், வோடாஃபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களது டேட்டா கட்டணத்தை வெகுவாக குறைத்துள்ளன. ஜியோ போட்டியை சமாளிக்க அந்நிறுவனங்கள் புதிய சலுகைகளையும் அறிவித்து வருகின்றன.

ஏற்கனவே, ரூ.169 விலை கொண்ட ஃபேக்கில் 1 ஜி.பி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கிவரும் வோடாஃபோன் தற்போது ரூ.119 விலையில் புதிய ஃபேக் ஒன்றை அறிவித்துள்ளது. எனினும், இந்த புதிய ஃபேக் குறிப்பிட்ட வட்டாரங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.119 ஃபேக்கில் பயனர்களுக்கு தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.169 ஃபேக்கில் இருக்கும் தினமும் 100 இலவச எஸ்.எம்.எஸ் மட்டும் இந்த ரூ.119 ஃபேக்கில் இல்லை.

ரூ.169 ஃபேக் இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் வழங்கப்படுகிறது. ஏர்டெல் நிறுவனமும் ரூ.169 விலையில் பிரீபெயிட் ஃபேக் வழங்குகிறது. இச்சலுகையில் வோடபோன் வழங்குவதை போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது.

எனினும், ஜியோ ரூ.149 விலையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Also See...

First published: February 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...