ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

பிபா கால்பந்து: 10 கோடி பார்வையாளர்கள்.. டிஜிட்டல் ஒளிபரப்பில் சாதனை படைத்த ஜியோ சினிமா!

பிபா கால்பந்து: 10 கோடி பார்வையாளர்கள்.. டிஜிட்டல் ஒளிபரப்பில் சாதனை படைத்த ஜியோ சினிமா!

ஜியோ சினிமா தளம்

ஜியோ சினிமா தளம்

உலகக் கோப்பை தொடர் முடிந்துள்ள நிலையில் இறுதிப்போட்டி பார்வையாளர்களையும் சேர்த்து ஜியோ சினிமாவின் மொத்த பார்வையாளர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mumbai, India

2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று நிறைவடைந்தது. உலகின் அதிக மக்களால் பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்வு என்பது உலகக் கோப்பை கால்பந்து போட்டி விளையாட்டு உலகின் திருவிழாவாக கருதப்படுகிறது. 2022 உலகக் கோப்பையை லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி வென்று சாம்பியன் பட்டத்தை சூடியுள்ளது.

உலகக் கோப்பை போட்டிகளை லட்சக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கத்தார் சென்று பார்த்ததை போலலே, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் டிவியிலும், டிஜிட்டல் தளங்களிலும் பார்த்து ரசித்தனர். குறிப்பாக டிஜிட்டல் தொழில்நுட்பம் பன்மடங்கு வளர்ந்துள்ள இந்த யுகத்தில் டிவியை விட டிஜிட்டல் வடிவிலான ஒளிபரப்பு தளங்களுக்குத் தான் மவுசு அதிகரித்துள்ளது.நாட்டின் முன்னணி விளையாட்டு ஒளிபரப்பு நெட்வொர்க் ஆன நெட்வொர்க் 18 குழுமத்தின் Viacom18 ஸ்போர்ட்ஸ் பிபா உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 டிவி சேனலிலும், ஜியோ சினிமா டிஜிட்டல் தளத்திலும் ஒளிபரப்பு செய்தது.

கோல்கள் பற்றிய விபரம், அணிகளின் பலம், பலவீனம், போட்டிகளின் பலகோண காட்சிகள், ரீ பிளே, தரமான ஸ்கோர் விபரங்கள் என அனைத்தும் துல்லியமாக ஒளிபரப்பப்பட்டதால் மேலும் பலரும் ஜியோ சினிமா ஆப்பை விரும்பி டவுண்லோட் செய்து உலகக் கோப்பை போட்டிகளை பார்த்து ரசித்தனர்.

செயலிகள் குறித்து ஆய்வு செய்யும் நிறுவனமான ஆப் ஆனியின் தரவுகளின் படி கடந்த நவம்பர் மாதத்தில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட பொழுதுபோக்கு செயலிகளில் ஜியோ சினமா ஆப் முதலிடத்தைப் பிடித்துள்ளது. நவம்பர் மாத்தில் தரவிறக்கம் செய்யப்பட்ட பொழுதுபோக்கு செயலிகளின் எண்ணிக்கையில் ஜியோ சினிமா ஆப் மட்டும் 29 விழுக்காடு ஆகும்.

இதையும் படிங்க: WATCH - சோகத்தில் தவித்த பிரான்ஸ் வீரர் எம்பாப்பே.. மைதானத்துக்கே வந்து ஆறுதல் கூறிய அதிபர் மேக்ரான்.. வீடியோ!

மேலும், முதல் முறையாக டிவி பார்வையாளர்களை விட அதிக பார்வையாளர்கள் டிஜிட்டல் தளத்தில் உலகக் கோப்பையில் கிடைத்துள்ளனர். BARC அமைப்பின் தரவுகளின்படி, முதல் 48 போட்டிகளிலேயே ஜியோ சினிமாவின் ரீச் 42.2 மில்லியன் அதாவது 4.2 கோடியை தாண்டியுள்ளது. தொடர் முடிந்துள்ள நிலையில் இறுதிப்போட்டி பார்வையாளர்களையும் சேர்த்து இந்த எண்ணிக்கை 10 கோடியை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், வங்காளி ஆகிய மொழிகள் ஜியோ சினிமா 4k தரத்தில் 64 போட்டிகளையும் வழங்கியுள்ளது.

First published:

Tags: FIFA 2022, FIFA World Cup, FIFA World Cup 2022, Jio, Reliance Jio