ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

Reliance Jio Recharge: மீண்டும் ஜியோ ரூ.98 பிளான் - என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?

Reliance Jio Recharge: மீண்டும் ஜியோ ரூ.98 பிளான் - என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?

ஜியோ

ஜியோ

அனைத்து சேவைகளுக்கும் ஆன்லைன் வசதி தேவைப்படுவதால், மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

ஜியோ நிறுவனம் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த 98 ரூபாய் ரீச்சார்ஜ் திட்டத்தை புதிய மாற்றங்களுடன் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோன ஊரங்கு காரணமாக டெலிகாம் நிறுவனங்கள் காட்டில் அடைமழை பெய்து வருகிறது. அனைத்து சேவைகளுக்கும் ஆன்லைன் வசதி தேவைப்படுவதால், மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர்களிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை மூலதனமாக்கிக் கொள்ள அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளையும், இலவசங்களையும் அள்ளி வீசி வருகின்றன.

கவர்ச்சியான அறிவிப்புகள் மற்றும் இலவச சேவைகள், அனைத்து தரப்பு மக்களும் அணுகக்கூடிய மலிவு விலை திட்டங்களை போட்டிப்போட்டு அறிமுகப்படுத்துகின்றன. அந்தவகையில், இந்திய டெலிகாம் சந்தையில் குறுகிய ஆண்டுகளில் அதீத வளர்ச்சியை சந்தித்துள்ள ஜியோ நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேரக்கூடிய 98 ரூபாய் ரீச்சார்ஜ் திட்டத்தை புதிய வடிவில் கொண்டுவந்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த அந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.

தற்போது வேலிடிட்டி, இலவச சேவை, இண்டர்நெட் அளவு ஆகியவற்றில் ஒரு சில மாற்றங்களுடன் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. நடைமுறையில் இருக்கும் அனைத்து நெட்வொர்குகளின் திட்டத்தை விட மிக குறைந்த விலை ப்ளானாக உள்ளது. 98 ரூபாய் திட்டமானது 14 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. அன்லிமிட்டெட் வாய்ஸ் அழைப்புகள்,ஜியோ நிறுவன செயலிகளான ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய ஆப்களையும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தியாவில் உள்ள அனைத்து பகுதி மக்களும் 98 ரூபாய் ஜியோ திட்டத்தை ரீச்சார்ஜ் செய்து கொள்ள முடியும். அனைவருக்கும் ஒரே மாதிரியான சலுகைகள் கிடைக்கும். இது தொடர்பாக ஜியோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் இருக்கும் அனைத்து நெட்வொர்க் திட்டங்களைவிட மிகவும் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரே திட்டம் தங்களுடைய 98 ரூபாய் திட்டம் எனக் கூறியுள்ளது. 14 நாட்கள் வேலிடிட்டியுடன், அன்லிமிட்டெட் கால், நாள்தோறும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 இலவச எஸ்.எம்.எஸ்கள், ஜியோ நிறுவனத்தின் செயலிகளான ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய ஆப்களையும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

Also read... Instant Pan Card: உடனடி இ-பான் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்?

கொரோனா காலத்தில் ஆபத்தை எதிர்கொண்டிருக்கும் மக்களுக்கு, ஜியோ நிறுவனத்தின் மிக குறுகிய கால மற்றும் மலிவான ரீச்சார்ஜ் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஜியோ மொபைல் போன் யூசர்களுக்கு பிரத்யேகமாக 300 நிமிடங்கள் அவுட்கோயிங் கால்களை அந்நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா லாக்டவுனில் ரீச்சார்ஜ் செய்ய முடியாமல் தவிக்கும் மக்கள் பயன்பெறுவதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படதாகவும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்தது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Jio