ஜியோ நாட்டின் முன்னணி டெலிகாம் நெட்வொர்க் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. தடையற்ற நெட்வொர்க் இணைப்பு மற்றும் மலிவு பேக்கேஜ்கள் மூலம் ரிலையன்ஸ் ஜியோ அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. பிற நெட்வொர்க் நிறுவனங்களை போலவே காலர் ட்யூன் செட் செய்து கொள்வது போன்ற பல கூடுதல் அம்சங்களை ஜியோவும் வழங்குகிறது.
இந்தியாவின் பல மாநில மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்ய பல மொழிகளில் காலர் ட்யூன்களை ஜியோ வழங்குகிறது. நீங்கள் ஜியோ வாடிக்கையாளராக இருந்தால் காலர் ட்யூனை செட் செய்ய பல வழிகள் உள்ளன. MyJio app, IVR அல்லது SMS மூலம் நீங்கள் உங்களுக்கு பிடித்த காலர் ட்யூனை செட் செய்து கொள்ளலாம். தவிர பிற ஜியோ வாடிக்கையாளர்களிடமிருந்து அவர்களது JioTune-ஐ காப்பி செய்யவும் ரிலையன்ஸ் உங்களை அனுமதிக்கிறது. JioTunes அல்லது Jio caller tune அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் இலவசம் மற்றும் விரும்பும் போது மாற்றி கொள்ளலாம்.
MyJio App மூலம் காலர் ட்யூன் செட் செய்து எப்படி?
* முதலில், நீங்கள் பயன்படுத்தும் ஃபோனை பொறுத்து, Google Play அல்லது App Store-லிருந்து MyJio App-ஐ டவுன்லோட் செய்யவும்
* இன்ஸ்டால் செய்தவுடன் அதிலிருக்கும் JioTunes ஆப்ஷனுக்கு செல்லவும்.
* உங்களுக்கு விருப்பமான பாடலை சர்ச் செய்து அதன் ப்ரிவ்யூ-வை கேட்கவும்
* உங்களுக்கு பிடித்திருந்தால் அந்த பாடலை செட் செய்ய Set as JioTune பட்டனைத் தேர்ந்தெடுக்கலாம்
* நீங்கள் செலக்ட் செய்த பாடல் ஜியோ கலர் ட்யூனாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆக்டிவ் செய்யப்பட்டதும் உறுதிப்படுத்தல் SMS-ஐ பெறுவீர்கள்.
IVR மூலம் ஜியோ காலர் ட்யூனை செட் செய்வது எப்படி?
* உங்களது ஜியோ நெட்வொர்க் மூலம் 56789 என்ற நம்பருக்கு டயல் செய்யவும்
* இப்போது டாப் சாங் லிஸ்ட்டில் இருந்து உங்களுக்கு விருப்பமான பாடலைதேர்ந்தெடுக்கவும்
* லிஸ்ட்டில் வரும் பாடலின் எண்ணை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
* அந்த பாடல் உங்கள் ஜியோ காலர் ட்யூனாக செட் செய்யப்படுவதை உறுதிப்படுத்த ஒரு SMS வரும். அதற்கு 30 நிமிடங்களுக்குள் 'Y' என்று பதிலளிக்கவும்
* நீங்கள் விரும்பும் பாடலை உறுதி செய்ததும் அது உங்கள் ஜியோ காலர் ட்யூனாக செட்டாகும்.
Also read... 30,000 ரூபாய்க்குள் சிறந்த ஸ்மார்ட்போன் வாங்கணுமா? இதோ இந்த 6-ல் இருந்து ஒன்றை தேர்வு செஞ்சுக்கங்க!
SMS மூலம் ஜியோ காலர் ட்யூன் செட் செய்வது எப்படி?
* முதலில் நீங்கள் காலர் ட்யூனை அமைக்க விரும்பும் ஜியோ எண்ணில் பாடல்/படம்/ஆல்பத்தின் முதல் மூன்று வார்த்தைகளை 56789-க்கு SMS அனுப்ப வேண்டும்
* இப்போது நீங்கள் விரும்பும் பாடலை உங்கள் காலர் ட்யூனாக எவ்வாறு செட் செய்வது என்பது குறித்த சாங் லிஸ்ட் மற்றும் வழிமுறைகள் அடங்கிய SMS-ஐ பெறுவீர்கள்
* இப்போது இந்த SMS-க்கு "JT" என 56789 என்ற நம்பருக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும் மற்றும் உங்கள் ஃபோனிற்கு அனுப்பப்பட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்
* பின் நீங்கள் விரும்பும் பாடலை உறுதிப்படுதியவுடன் அது உங்கள் ஜியோ காலர் ட்யூனாக செட்டாகும்.
JioSaavn வழியே காலர் ட்யூன் செட் செய்வது எப்படி?
* முதலில் JioSaavn app-ஐ Google Play அல்லது Apple App Store-லிருந்து டவுன்லோட் செய்யுங்கள்
* இப்போது JioSaavn அக்கவுண்ட்டை புதிதாக உருவாக்கவும் அலல்து ஏற்கனவே இருப்பின் உள்நுழையவும்
* நீங்கள் ஜியோ காலர் ட்யூனாக அமைக்க விரும்பும் பாடலை தேடவும்
* விரும்பும் ஆல்பம் அல்லது பாடல் தலைப்புக்கு கீழே உள்ள "Set the Jio Tune" பட்டனை தேர்ந்தெடுக்கவும்
* நீங்கள் தேர்வு செய்த பாடல் ஜியோ டியூனாக செட்டானதை உறுதிப்படுத்தும் SMS-ஐ பெறுவீர்கள்
மற்றொரு யூஸரின் JioTune-ஐ காப்பி செய்வது எப்படி?
* மற்றொரு ஜியோ யூஸரின் ட்யூனைக் கேட்கும் போது நீங்கள் அவர் காலை எடுப்பதற்குள் நீங்கள் ஸ்டார் (*) பட்டனை அழுத்த வேண்டும்
* நீங்கள் அந்த பாடலை உங்கள் JioTune-ஆக செட் செய்ய விரும்புகிறீர்களா என்பதை உறுதிப்படுத்த SMS ஒன்றை பெறுவீர்கள்
* இந்த SMS-ற்கு 30 நிமிடங்களுக்குள் 'Y' எனப் பதிலளிக்கவும்
* பின் உங்கள் ஜியோ காலர் ட்யூனை உறுதிப்படுத்தும் வகையில் மற்றொரு SMS-ஐ பெறுவீர்கள்
JioTune-ஐ எப்படி ஸ்டாப் செய்வது?
JioTune-ஐ ஸ்டாப் செய்ய 56789 என்ற நம்பருக்கு "Stop" என SMS செய்யலாம். MyJio ஆப் அல்லது JioSaavn ஆப்ஸ் மூலமாகவும் நீங்கள் ஜியோ கலர் ட்யூனை நிறுத்தலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.