Home /News /technology /

பிராட்பேண்ட் சேவையில் ஜியோ அசத்தல் சாதனை!

பிராட்பேண்ட் சேவையில் ஜியோ அசத்தல் சாதனை!

ஜியோ

ஜியோ

ரிலையன்ஸ் ஜியோவின் ஃபிக்ஸட் லைன் பிராட்பேண்ட் வாடிக்கையாளர் எண்ணிக்கை ஆனது கடந்த அக்டோபரில் 4.16 மில்லியனில் ஆக இருந்தது.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ "ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தில்" பின்னுக்கு தள்ளியுள்ளது. ஜியோவை போன்ற ஒரு நிறுவனம் பிஎஸ்என்எல் போன்ற ஒரு நிறுவனத்தை பின்னுக்கு தள்ளுவதெல்லாம் ஒரு விஷயமா என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான்! இருந்தாலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 20 ஆண்டு வெற்றியை வெறும் 2 ஆண்டுகளில் ஜியோ பறித்துள்ளது தான் இங்கே சுவாரசியம்.

அதாவது ஜியோ நிறுவனம் அதன் ஃபிக்ஸட் லைன் பிராட்பேண்ட் சேவைகளை வணிக ரீதியாக அறிமுகம் செய்து சுமார் இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகும் நிலைப்பாட்டில், குறிப்பிட்ட சேவையில் 20 ஆண்டுக்கும் மேலாக நீடித்து வரும் பிஎஸ்என்எல்-ஐ வீழ்த்தி - இந்த பிரிவின் கீழ் சிறந்த சேவைகளை வழங்கும் ஆப்ரேட்டராக - ஜியோ மேலோங்கியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் ஃபிக்ஸட் லைன் பிராட்பேண்ட் வாடிக்கையாளர் எண்ணிக்கை ஆனது கடந்த அக்டோபரில் 4.16 மில்லியனில் ஆக இருந்தது. அது கடந்த நவம்பரில் 4.34 மில்லியனாக அதிகரித்துள்ளது. மறுகையில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை கடந்த அக்டோபர் மாதத்தில் 4.72 மில்லியனாக இருந்து நவம்பரில் 4.2 மில்லியனாக குறைந்துள்ளது. மற்றொரு டாப் டெலிகாம் ஆபரேட்டர் ஆன பார்தி ஏர்டெல், அதன் ஃபிக்ஸட் லைன் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் - கடந்த நவம்பர் மாதத்தில் - 4.08 மில்லியனை கொண்டு இருந்தது.

நினைவூட்டும் வண்ணம், ஜியோ அதன் ஃபிக்ஸட் லைன் பிராட்பேண்ட் சேவையான ஜியோஃபைர் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் தான் வணிகரீதியாக வெளிவரத் தொடங்கியது. புதியவராக இருந்தாலும் கூட ஜியோவின் வருகையால், 2019 செப்டம்பரில் 8.69 மில்லியன் வயர்டு பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த பிஎஸ்என்எல்-இன் வாடிக்கையாளர் தளம் 2021 நவம்பரில் பாதியாகக் குறைந்தது. மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல்லின் வயர்டு பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2019 செப்டம்பரில் 2.41 மில்லியனில் இருந்தது, அது 2021 நவம்பரில் 4.08 மில்லியனாக, அதாவது 70 சதவீதம் அதிகரித்து 4.08 மில்லியனாக மாறியது.

Also read... அமேசான் வாட்ச் பார்ட்டி: வீட்டில் இருந்தபடியே நண்பர்களுடன் சேர்ந்து மூவி ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி?

ஒட்டுமொத்தமாக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) சமீபத்திய "சந்தாதாரர்களின் எண்ணிக்கை" பற்றிய அறிக்கையின்படி, நாட்டில் பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் அக்டோபர் மாதத்தில் 798.95 மில்லியனிலிருந்து நவம்பரில் 801.6 மில்லியனாக வளர்ந்துள்ளனர். "நவம்பர் மாத இறுதியில் மொத்த பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில், டாப் 5 சேவை வழங்குநர்கள் 98.68 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டிருந்தனர்" என்றும் டிராய் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில், முதல் இடத்தை பிடித்த முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் மொத்த பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஆனது 432.96 மில்லியனாக இருந்தது. அதைத் தொடர்ந்து பார்தி ஏர்டெல் நிறுவனம் 210.10 மில்லியன் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை தன்வசம் கொண்டிருந்தது. அடுத்த இடத்தில் விஐஎல் நிறுவனமானது 122.40 மில்லியன் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது, பின்னர் தான் அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் வருகிறது, இது 23.62 மில்லியன் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது, ஐந்தாவது இடத்தில் ஏட்ரியா கன்வர்ஜென்ஸ் பிராட்பேண்ட் ஆனது 1.98 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: BSNL, Jio

அடுத்த செய்தி