ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜியோ இந்தியாவில் இணையப் புரட்சியை ஏற்படுத்திவருகிறது. தரமான 4 ஜி இணைய சேவையை வழங்கியதன் மூலம் இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக ஜியோ உருவெடுத்தது. தற்போது, ஜியோ நிறுவனம் அதன் பயனாளர்களுக்கு 5 ஜி சேவையை வழங்கிவருகிறது. இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஜியோ 5 சேவை வழங்கும் எல்லையை அதிகப்படுத்திவருகிறது.
இன்றுமுதல் ஜியோ நிறுவனம் கூடுதலாக 27 நகரங்களுக்கு 5 ஜி சேவையை வழங்கவுள்ளது. அதில், தமிழ்நாட்டில் இரண்டு நகரங்களில் 5 ஜி சேவை வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக 22 நகரங்களில் 5 ஜி சேவை வழங்கப்படவுள்ளது. அதன்மூலம் இந்தியாவில் மொத்தமாக 331 நகரங்களில் தரமான 5 ஜி சேவையை ஜியோ நிறுவனம் வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே, சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், வேலூர், ஓசூர், திருப்பூர், ஈரோடு, தருமபுரி, தூத்துகுடி, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருநெல்வேலியில் 5 ஜி சேவை வழங்கப்பட்டு வந்தது. தற்போது, கூடுதலாக கோவில்பட்டி, பொள்ளாச்சி, புதுச்சேரியில் 5 ஜி சேவை வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு தவிர்த்து, ஆந்திரப் பிரதேசம், சத்திஸ்கர், ஜம்மு காஷ்மார், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களிலும் ஜியோ 5 ஜி சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
என்னுடைய முதலாளியே என் மனைவியும் மகளும்தான்... அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நெகிழ்ச்சி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jio 5G