Home /News /technology /

‘ஹெச்பி ஸ்மார்ட் சிம் லேப்டாப்’ உடன் 100 ஜிபி டேட்டா இலவசம்.. ஜியோவின் அசத்தல் ஆஃபர்!

இந்த ஜியோ சலுகையை தகுதியான ஹெச்பி ஸ்மார்ட் சிம் லேப்டாப்களை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் அல்லது ரிலையன்ஸ் டிஜிட்டல் மூலமோ ஆன்லைனில் வாங்கும் போது பெறலாம்.

    தகுதியான ஹெச்பி ஸ்மார்ட் சிம் லேப்டாப்களுடன் கூடுதல் கட்டணமின்றி 100ஜிபி டேட்டாவுடன் ஜியோ டிஜிட்டல் லைப்-ன் பலன்களை பயனர்கள் அனுபவிக்க உதவும் வகையிலான ஸ்மார்ட் LTE லேப்டாப் சலுகையை ஜியோ அறிவித்துள்ளது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட ஹெச்பி லேப்டாப்களின் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். மேலும், புதிய தகுதியான ஹெச்பி LTE லேப்டாப்புடன் புதிய ஜியோ சிம்மிற்கு சந்தா செலுத்தும் போது 100ஜிபி டேட்டாவை (ரூ.1500 மதிப்புள்ள) 365 நாட்களுக்கு ஜியோ வழங்குகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சலுகையை பெற HP 14ef1003tu மற்றும் HP 14ef1002tu ஆகிய 2 ஹெச்பி லேப்டாப் மாடல்கள் மட்டுமே தகுதியானது ஆகும்.

    இந்த ஜியோ சலுகையை தகுதியான ஹெச்பி ஸ்மார்ட் சிம் லேப்டாப்களை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் அல்லது ரிலையன்ஸ் டிஜிட்டல் மூலமோ ஆன்லைனில் வாங்கும் போது பெறலாம்.

    வாடிக்கையாளர்கள் இதற்கு தகுதியான சாதனத்தை புதிய ஜியோ சிம்மில் கூடுதல் கட்டணமின்றி வாங்கலாம். 100 ஜிபி டேட்டா முடிந்ததும், மீதமுள்ள செல்லுபடியாகும் காலம் வரை இணைய வேகம் 64kbps ஆக குறைந்துவிடும். இந்த சலுகையை எவ்வாறு பெறுவது என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.

    ஆஃப்லைனில் வாங்குவதற்கு

    • ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் புதிய ஹெச்பி ஸ்மார்ட் சிம் லேப்டாப்பை வாங்கவும்

    • புதிய ஜியோ சிம்மை இயக்குமாறு ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் நிர்வாகியிடம் கேளுங்கள் HP Smart LTE 100 GB டேட்டா சலுகை (FRC 505 ஆஃபர் பெயர்)

    • ஆவணப்படுத்தலுக்கு உங்கள் முகவரி மற்றும் அடையாளச் சான்று விவரங்களை வழங்கவும்

    • வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதும் HP ஸ்மார்ட் சிம் லேப்டாப்பில் சிம்மைச் செருகவும்.

    • பயணத்தின்போது அதிவேக இணையத்தை அனுபவிக்கலாம்.

    ஆன்லைனில் வாங்குவதற்கு

    • reliancedigital.in தளத்தில் புதிய ஹெச்பி ஸ்மார்ட் சிம் லேப்டாப்பை ஆன்லைனில் வாங்கவும் அல்லது
    JioMart.comல் பெறலாம்.

    • லேப்டாப் டெலிவரி செய்யப்பட்டவுடன், அருகில் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோருக்கு வாங்கிய 7 நாட்களுக்குள் இன்வாய்ஸ் மற்றும் மடிக்கணினியுடன் செல்லவும்.

    • ஹெச்பி ஸ்மார்ட் சிம்மில் புதிய ஜியோ இணைப்பைச் செயல்படுத்த ஸ்டோர் எக்ஸிகியூட்டிவ்விடம் கேளுங்கள்
    லேப்டாப் 100 ஜிபி டேட்டா சலுகை (FRC 505)

    • ஆவணப்படுத்தலுக்கு உங்கள் முகவரி மற்றும் அடையாளச் சான்று விவரங்களை வழங்கவும்

    • வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதும் ஹெச்பி ஸ்மார்ட் சிம் லேப்டாப்பில் சிம்மைச் செருகவும்.

    • பயணத்தின்போது அதிவேக இணையத்தை அனுபவிக்கலாம்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Jio, JioMart, Reliance Digital

    அடுத்த செய்தி