• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • தமிழ்நாடு முழுவதிலும் கூடுதலாக 20MHz அலைக்கற்றை - ஜியோ அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதிலும் கூடுதலாக 20MHz அலைக்கற்றை - ஜியோ அறிவிப்பு

செல்போன் டவர் மாதிரிப் படம்

செல்போன் டவர் மாதிரிப் படம்

தமிழ்நாடு முழுவதிலும் கூடுதலாக 20MHz அலைகற்றையை ஜியோ நிறுவனம் செயல்படுத்தவுள்ளது.

  • Share this:
    ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய அரசின் தொலைத் தொடர்பு துறையால் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்ட அலைக்கற்றை ஏல செயல் நடவடிக்கையின்போது இந்தியாவிலுள்ள அனைத்து 22 சர்கிள்களிலும் அலைக்கற்றையைப் பயன்படுத்துவதற்கான உரிமையை தான் வெற்றிகரமாக பெற்றிருப்பதாக மார்ச் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் அறிவித்திருந்தது.

    இந்நிறுவனம், 850MHZ, 1800MHZ மற்றும் 2300MHZ பேண்டுகளில் இந்த அலைக்கற்றைகளை பெற்றிருந்தது. தமிழ்நாட்டில் கூடுதலாக, 850MHZ பேண்டில் 5 MHZ, 1800MHz பேண்டில் 5MHz மற்றும் 2300Mhz பேண்டில் 10 MHz அலைக்கற்றைகளை ஜியோ நிறுவனம் ஏலத்தில் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இப்போது, தமிழ்நாடு முழுவதிலும் அமைந்துள்ள 22,000 தொலைத்தொடர்பு அமைவிடங்கள் அனைத்திலும் மேற்குறிப்பிட்ட மூன்று அலைக்கற்றைகளிலும் கூடுதலாக பெறப்பட்டிருக்கும் அலைக்கற்றைகளின் பயன்பாட்டு நடவடிக்கையை ஜியோ தொடங்கியிருக்கிறது. மிகப்பெரிய அளவிலான இந்த அலைக்கற்றை அளவு அதிகரிப்பு, தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த ஜியோ சந்தாதாரர்களுக்கு தொலைத்தொடர்பு வலையமைப்பு அனுபவத்தை மேலும் பன்மடங்கு மேம்படுத்துவதற்கு நிச்சயமாக உதவும். தற்போதுள்ள பெருந்தொற்று சூழல், கட்டுப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பொதுமுடக்கத்தை கருத்தில்கொண்டு பார்க்கையில், கூடுதல் அலைக்கற்றை சேர்க்கப்பட்டிருப்பது உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கையாக இருக்கிறது. வீட்டிலிருந்து பணியாற்றும் பணியாளர்களுக்கு, ஆன்லைனில் மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்கவும், வீட்டிலிருந்தே பிசினஸ் நடவடிக்கைகளை தொழில்முனைவோர்கள் மேற்கொள்ளவும் இது உதவும். வீடுகளில் பாதுகாப்பாக இருந்துகொண்ட தங்களது அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் சிரமமின்றி எளிதாக டிஜிட்டல் முறையில் மேற்கொள்வதை இது எளிதாக்கும். மேம்படுத்தப்பட்டிருக்கும் இந்த இணைப்பு வசதியும், அனுபவமும், கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தளராமல் செயலாற்றிக்கொண்டிருக்கின்ற மருத்துவத்துறை பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இது உதவியாக இருக்கும். டிராய் அமைப்பின் சமீபத்திய தரவின்படி, தமிழ்நாட்டில் ஏறக்குறைய 2.5 கோடி சந்தாதாரரையும், வாடிக்கையாளர் சந்தையில் 30.3 சதவீத பங்கையும் ஜியோ கொண்டிருக்கிறது.

    சமீபத்தில் நடைபெற அலைக்கற்றை ஏலத்தில் 57,123 கோடி ரூபாய் மதிப்பில் 20 ஆண்டுகள் கால அளவிற்கு 488.35MHZ என்ற மொத்த அலைக்கற்றையை 22 சர்க்கிள்களில் ரிலையன்ஸ் ஜியோ பெற்றது. இதன்மூலம் தனது மொத்த அலைக்கற்றை அளவை 1717MHZ ஆக, அதாவது 55சதவீத அளவிற்கு மிக கணிசமாக ஜியோ உயர்த்திருயிருக்கிறது. டிஜிட்டல் சேவைகளைப் பெறுபவர்களாக இன்னும் கூடுதலாக 300 மில்லியன் பயனாளர்களை சேர்த்துக் கொள்வதற்கும் மற்றும் 5ஜி சேவைகளுக்கான மாற்றத்தை நோக்கி வலுவாகப் பயணிப்பதற்கும் இந்த மேம்பாட்டு நடவடிக்கை ரிலையன்ஸ் ஜியோவிற்கு பெரிதும் உதவும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: