• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • கேஷ்பேக் மற்றும் இலவச டேட்டா கூப்பன்களை வழங்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள்!

கேஷ்பேக் மற்றும் இலவச டேட்டா கூப்பன்களை வழங்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள்!

ஜியோ மற்றும் ஏர்டெல்

ஜியோ மற்றும் ஏர்டெல்

ஏர்டெல் வழங்கும் ரூ.289 ப்ரீபெய்ட் பிளான் 28 நாள் வாலிடிட்டியில் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 எஸ்எம்எஸ்களுடன் ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

  • Share this:
ஜியோ கடந்த செப்டம்பர் மாதம் சில ப்ரீபெய்ட் திட்டங்களில் கேஷ்பேக் சலுகையை அறிமுகப்படுத்தியது. ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியான தகவலின்படி, கேஷ்பேக் சலுகையின் வாலிடிட்டி இன்னும் இருப்பதாக தெரிவித்துள்ளது. மை ஜியோ ஆப் அல்லது ஜியோவின் இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வதன் மூலம் இந்தத் கேஷ்பேக் ஆஃபர்களை பெறலாம்.

ஜியோவின் கேஷ்பேக் ஆஃபர் ரூ.249, ரூ.555 மற்றும் ரூ.599 விலையுள்ள பிளான்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அறிவித்துள்ளது. இந்த ரீசார்ஜ் பிளான்களில் முறையே ரூ.50, ரூ.111 மற்றும் ரூ.120 கேஷ்பேக்கை ஜியோ நெட்ஒர்க் வழங்குகிறது, அதன்படி, இந்த பிளான்களை ரூ.199, ரூ.444 மற்றும் ரூ. 479 என்ற விலையில் பெறலாம். மேற்கண்ட மூன்று திட்டங்களில் தங்கள் ப்ரீபெய்டு எண்களை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 20 சதவீத கேஷ்பேக் கிடைக்கும்.

மேலும் ஜியோ மார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல், ஜியோ ரீசார்ஜ் மற்றும் பிற சேவைகள் மூலம் கேஷ்பேக்கைப் பெற முடியும். ஜியோ வழங்கும் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டமானது அன்லிமிடெட் கால்ஸ், ஒரு நாளைக்கு 2GB வரை டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. அதேபோல ரூ.555 திட்டம் 84 நாள் வாலிடிட்டியுடன் ஒரு நாளைக்கு ரூ.1.5GB மற்றும் ரூ.249 திட்டத்தில் உள்ள அதே நன்மைகளை வழங்குகிறது.

இதனை தொடர்ந்து ரூ.599 திட்டமானது 84 நாட்கள் வாலிடிட்டியுடன் ஒரு நாளைக்கு 2GB நன்மையை வழங்குகிறது. ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் போன்ற பிற நிலையான நன்மைகளை வழங்குகிறது. இந்த மூன்று திட்டங்களும் JioTV, JioCinema, JioSecurity, JioNews மற்றும் JioCloud ஆகியவற்றிற்கான பயன்பாட்டுச் சந்தாக்களுடன் வருகின்றன.

ஜியோவுக்கு அடுத்தப்படியாக வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டாவுடன் டேட்டா கூப்பன்களை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை Airtel நெட்ஒர்க் வழங்குகிறது. தகுதியை பூர்த்தி செய்யும் ஏர்டெலின் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா கூப்பன்கள் வழங்கப்படும். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் தங்கள் ஏர்டெல் எண்ணில் டேட்டா கூப்பன்களை வென்றால், ஆக்டிவேஷனுக்கும் க்ளைம் செய்வதற்கும் ஆப்ஸின் 'மை கூப்பன்கள்' பிரிவில் கிடைக்கும் கூப்பன்கள் மூலம் செய்யலாம்.

இது அவர்களுக்கு SMS மூலம் தெரிவிக்கப்படும். தினசரி வெற்றியாளர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை என்று ஏர்டெல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் சலுகை காலம் முழுவதும் ஒரு பயனரை ஒருமுறை மட்டுமே வெற்றியாளராக தீர்மானிக்க முடியும். எனவே ஒருமுறை நீங்கள் கூப்பன்களை வென்றால் மீண்டும் அந்த கூப்பன்களை வெல்லும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காது. சரி எந்தெந்த ப்ரீபெய்டு பிளான்களுக்கு இந்த கூப்பன்கள் கிடைக்கும் என்பதை பின்வருமாறு காணலாம்.

ஏர்டெல் வழங்கும் ரூ.289 ப்ரீபெய்ட் பிளான் 28 நாள் வாலிடிட்டியில் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 எஸ்எம்எஸ்களுடன் ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் இலவச HelloTunes உடன் Airtel XStream சேவைகளையும் வழங்குகிறது. இதனுடன் கிடைக்கும் 2 இலவச டேட்டா கூப்பன்களும் 1GB டேட்டாவை வழங்கும். இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

Also read... ஒன்ப்ளஸ் நார்ட் 2 Pac-Man இந்தியாவில் அறிமுகம் - விலை, சிறப்பம்சங்கள் குறித்த விவரம்!

அடுத்தபடியாக ஏர்டெல் வழங்கும் ரூ.599 திட்டமானது Disney+ HotStarக்கான இலவச வருடாந்திர மொபைல் சந்தாவுடன் வருகிறது. ப்ரீபெய்ட் திட்டமானது 28 நாள் வாலிடிட்டிக்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 SMS உடன் ஒரு நாளைக்கு 3GB டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் இலவச HelloTunes உடன் Airtel XStream சேவைகளையும் வழங்குகிறது. இந்தத் திட்டமானது 56 நாட்களுக்குச் செல்லுபடியாகும் 1GB டேட்டாவின் 4 கூப்பன்களை வழங்கும்.

இதுதவிர இலவச டேட்டா கூப்பன்களின் கீழ் 1GB அளவிலான 2 கூப்பன்களை வழங்கும் தகுதியான பிற பட்டியலிடப்பட்ட ரீசார்ஜ் பிளான்களில் ரூ.249, ரூ.279, ரூ.289, ரூ.298, ரூ.349 மற்றும் ரூ.398 ஆகியவையும் அடங்கும். அதேபோல இலவச ரீசார்ஜ் கூப்பன்கள் ரூ.399, ரூ.449 மற்றும் ரூ.558 ஆகிய ப்ரீபெய்ட் பிளான்களிலும் கிடைக்கின்றன. இந்தத் திட்டங்கள் ஒவ்வொன்றும் 1 ஜிபி டேட்டாவின் 4 கூப்பன்களை வழங்குகின்றன. அவை அனைத்தும் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதுமட்டுமல்லாமல், ரூ.598 மற்றும் ரூ.698 ஆகிய ப்ரீபெய்ட் பிளான்கள் ஒவ்வொன்றும் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் 1ஜிபி டேட்டாவின் 6 கூப்பன்களை வழங்குகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: