ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

50 இந்திய நகரங்களில் 5ஜி சேவை..! அசத்தும் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள்..!

50 இந்திய நகரங்களில் 5ஜி சேவை..! அசத்தும் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள்..!

5ஜி சேவை

5ஜி சேவை

தற்போது வழங்கப்பட்டு வரும் 4ஜி சேவையை தொடர்ந்து, இலவசமாக மிக விரைவான 5ஜி சேவை தங்களது பயனர்களுக்கு கிடைக்கும் என்று இரண்டு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் மிக அதிவிரைவு தொலைத்தொடர்பு சேவையான 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் இந்தியாவின் முதன்மையான செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் ஐடியா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டன.  5ஜி அலைக்கற்றை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதையடுத்து, அந்த நிறுவனங்கள் இந்தியா முழுமைக்கும் உள்ள தனது பயனர்களுக்கு 5ஜி சேவையை வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

முன்னணி செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களான ஜியோ ரிலையன்ஸ், ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பயனர்களுக்கு மிக விரைவான 5ஜி சேவையை எந்தவித உபரி கட்டணமும் இல்லாமல், இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளன. தீபாவளியன்று ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவை வழங்கும் நடவடிக்கையை முதற்கட்டமாக தொடங்கியது. அதைத்தொடர்ந்து குஜராத்தில் உள்ள 33 மாவட்டங்களின் தலைநகரங்கள் முழுமைக்கும் 5ஜி சேவை வழங்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இன்னும் ஒரு மாத காலத்திற்குள், அதாவது 2022 நிறைவு பெறுவதற்குள் குஜராத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களும் 5ஜி சேவை பெறும் நகரங்களாக மாறிவிடும்.அதேபோல் ஏர்டெல் நிறுவனமும் இந்தியா முழுவதும் உள்ள தனது பயனர்களுக்கு 5ஜி சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. இதையடுத்து இந்தியா முழுமைக்கும் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இணைந்து சுமார் 50 நகரங்களில் தற்போது 5ஜி சேவையை வழங்கி வருகின்றன.

Read More : ஓரே ஒரு ரீசார்ஜில் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ்கால், இலவச ஒடிடி சேவை... ஜியோ, ஏர்டெல் அசத்தல் பிளான்ஸ்

இந்த 5ஜி  சேவையானது மிக விரிவான இன்டர்நெட் சர்ஃபிங் வசதியை பயனர்களுக்கு வழங்குகிறது.  அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி இந்த முயற்சிகளை இரண்டு முன்னணி செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களும் தொடங்கின. இதையடுத்து நவம்பர் 26 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியா முழுவதும் 50 முன்னணி நகரங்களில் 5ஜி சேவை தடையின்றி கிடக்கப்பெற்று வருவதாக டெல்காம் சர்வீசஸ் பிரொவைடர்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் ஜியோ நிறுவனம் சார்பில் டெல்லி,மும்பை, வாரணாசி, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், சென்னை, புனே,  குருகிராம், நொய்டா, காசியாபாத், பரிதாபாத் மற்றும் குஜராத்தில் உள்ள 33 மாவட்டங்களின் தலைநகரங்களில் 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இதே போல் இந்தியாவின் மற்றொரு முன்னணி செல்போன் சேவை வழங்கும் நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் மூலம் டெல்லி, சிலுகுரி, பெங்களூரு, ஹைதராபாத், வாரணாசி, மும்பை, நாக்பூர், சென்னை, குருகிராம், பட்னா உள்ளிட்ட நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது. 5ஜி சேவையை பெறுவதற்கு ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் பயனர்கள் கூடுதலாக எந்த கட்டணமும் கட்ட தேவையில்லை.

தற்போது வழங்கப்பட்டு வரும் 4ஜி சேவையை தொடர்ந்து, இலவசமாக மிக விரைவான 5ஜி சேவை தங்களது பயனர்களுக்கு கிடைக்கும் என்று இரண்டு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. மேலும் வரும் 2024 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து நகர மற்றும் கிராம பகுதிகளிலும் 5ஜி சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியா விரைவில் முழுமையாக 5ஜி சேவை கிடைக்கப்பெறும் நாடாகா மாறிவிடும்

First published:

Tags: 5G technology, Airtel, Jio, Technology