ஜியோ நிறுவனம் தனது ப்ரிபெய்ட் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஏர்டெல், வோடபோன் ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ப்ரிபெய்ட் கட்டணத்தை உயர்த்தியதை தொடர்ந்து இந்தியாவின் முதன்மை தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோவும் தனது கட்டணத்தை உயர்த்தியது. மற்ற இரு நிறுவனங்களின் கட்டணத்துடன் ஒப்பிடும்போது ஜியோவின் கட்டணம் குறைவாகவே உள்ளது.
கடந்த உயர்வு அமலுக்கு வர இன்னும் இரு நாட்கள் உள்ளது. எனவே, இந்த நாட்களில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் 20 சதவீதம் வரை கட்டண உயர்வை தவிர்க்க முடியும். ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு சிறந்த மல்டி ரீசார்ஜ் அல்லது முன்கூட்டியே ரீசார்ஜ் வசதியை வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ மல்டி ரீசார்ஜ், எப்படி செய்வது மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன
முதலில், ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்களில் எத்தனை முன்கூட்டிய அல்லது பல ரீசார்ஜ்களை நீங்கள் செய்யலாம் என்பதற்கு வரம்பு இல்லை என்பதை நினைவில் கொள்ளவும். ஜியோ நிறுவனம் அதன் இணையதளத்தில் பயனர்கள் வரம்பற்ற முன்கூட்டிய ரீசார்ஜ்களை (advance recharge) செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏர்டெல், வோடஃபோனைவிட குறைவான கட்டணம்.. ஜியோ ரீசார்ஜ் முழு விவரம்
ஜியோ வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் எத்தகைய ரீசார்ஜ்களையும் செய்யலாம். எடுத்துக்காட்டாக, ஒரு பயனர் தற்போது ரூ.555 திட்டத்தில் இருந்தால், 1.5ஜிபி தினசரி டேட்டா, 100 எஸ்எம்எஸ்/நாள் மற்றும் அன்லிமிடெட் அழைப்பு ஆகியவற்றுடன் 84 நாட்கள் சேவை வேலிடிட்டியை பெறமுடியும். மேலும் அவரது திட்டம் டிசம்பர் 10 ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்றால் அந்த பயனர் ரூ. 555 திட்டம் அல்லது அவர் விருப்பப்படி வேறு ஏதேனும் வரம்பற்ற திட்டத்துடன் ரீசார்ஜ் செய்யலாம்.
அனைத்து வரம்பற்ற டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்களுடன் ஜியோ பயனர்கள் முன்கூட்டியே ரீசார்ஜ் செய்யலாம். அவர்கள் முதலில் ரூ. 555 திட்டத்துடன் ரீசார்ஜ் செய்யலாம், பின்னர் ரூ. 598 திட்டத்திற்கு மாற்றலாம். இது முற்றிலும் மாறுபட்ட பலன்களை வழங்குகிறது, பின்னர் மீண்டும் ரூ. 249 என்ற மூன்றாவது திட்டத்தில் முன்கூட்டியே ரீசார்ஜ் செய்யலாம் மற்றும் பல.
மேலும் படிங்க: Jio Prepaid Recharge கட்டணம் உயர்வு
இந்த முறைகள் பயனர்கள் 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள் என எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும் முன்னதாகவே ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். ஆனால், அத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு பதிலாக வருடாந்திர திட்டத்துடன் ரீசார்ஜ் செய்வது புத்திசாலித்தனமான விஷயம். ஏனெனில் அது பயனர்களுக்கு உடனடியாக நிறைய பணத்தை மிச்சப்படுத்தும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.