நாட்டிலேயே முதல் முறையாகத் தமிழகத்தின் கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை உள்ளிட்டு மொத்தம் இதுவரை 225 நகரங்களில் ட்ரூ 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று மட்டும் 34 நகரங்களில் சேவையை விரிவுபடுத்தி இப்பகுதிகளில் 5ஜி சேவையை வழங்கும் ஒரே தொலைத்தொடர்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவில் 5G சேவைகளைச் செயல்படுத்துவதில் முன்னோடியாக உள்ள ரிலையன்ஸ் நிறுவனம், இதுவரை மொத்தம் 225 நகரங்களுக்கு ஜியோவின் 5 ஜி சேவை வழங்கிவருகிறது. இதில் தமிழகத்தில், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், வேலூர், ஓசூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, தூத்துக்குடி, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம், நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் பாண்டிச்சேரி ஆகியவை அடங்கும்.
மேலும் இப்பகுதிகளில் 5ஜி இணையச் சேவையை முதல் மற்றும் முதன்மையாக வழங்கும் ஒரே நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ செயல்படுகிறது.
இது தொடர்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "5G சேவைகள் அறிமுகமாகியுள்ள நகரங்களில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள், வெல்கம் ஆஃபருக்கு அழைக்கப்பட்டு, அன்லிமிடெட் டேட்டாவை 1 GBPS+ வேகத்தில் கூடுதல் கட்டணமின்றி இன்று முதல் அனுபவிக்கச் சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : chatgpt போலவே செயல்படக்கூடிய வேறுபல செயற்கை நுண்ணறிவு தளங்கள்..!
ஜியோ 5ஜி சேவையைத் தொடங்கி வெறும் 120 நாட்களே ஆன நிலையில் 225 நகரங்களில் சேவை தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த ஆண்டு இறுதியான டிசம்பர் மாதத்திற்குள், இந்தியா முழுவதும் 5G சேவைகள் விரிவுபடுத்தப்படும். ஜியோவின் சேவைகளை விரிவுபடுத்த உறுதுணையாக இருந்த மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 5G technology, Jio, Jio 5G, Reliance Jio, Tamilnadu