முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / இந்தியாவில் மேலும் 20 நகரங்களில் அதிவேக ஜியோ 5ஜி அறிமுகம்..! - எந்தெந்த ஊர்களில் தெரியுமா?

இந்தியாவில் மேலும் 20 நகரங்களில் அதிவேக ஜியோ 5ஜி அறிமுகம்..! - எந்தெந்த ஊர்களில் தெரியுமா?

ஜியோ 5ஜி

ஜியோ 5ஜி

இந்தியாவில் மேலும் 20 நகரங்களில் அதிவேக 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதனுடன் மொத்தம் 277 நகரங்களில் அதிவேக 5ஜி இணைய சேவையை வழங்கும் ஒரே நிறுவனமாக ஜியோ விளங்குகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் அதிவேக 5ஜி சேவையை அதிக நகரங்களில் முதல் முறையாக வழங்கும் ஒரே தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ நிறுவனம் விளங்குகிறது. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் தங்களின் அதிவேக 5ஜி சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜியோ நிறுவனம் செயல்படுகிறது. அந்த வகையில், தற்போது மேலும் 20 நகரங்களுக்கு ஜியோ 5 ஜி சேவையை தொடங்கியுள்ளனர்.

இதனுடன் இந்தியாவில் மொத்தம் 277 நகரங்களில் முதன்மையாக 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி வழங்கும் ஒரே நிறுவனமாக ஜியோ திகழ்கிறது. இன்று (21.02.2023) அசாம் மாநிலத்தில் போங்கைகான், வடக்கு லக்கிம்பூர், சிவசாகர், டின்சுகியா ஆகிய நகரங்களில், பீகார் மாநிலத்தில் பாகல்பூர், கதிஹார் ஆகிய நகரங்களில், கோவாவில் மோர்முகாவ், டையூ (தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ) யூனியன் பிரதேச பகுதிகளில், குஜராத் மாநிலத்தில் காந்திதம், ஜார்கண்ட் மாநிலத்தில் பொகாரோ ஸ்டீல் சிட்டி, தியோகர், ஹசாரிபாக் ஆகிய நகரங்களில், கர்நாடகா மாநிலத்தில் ராய்ச்சூர் நகரம், மத்திய பிரதேசத்தில் சத்னா நகரம், மகாராஷ்டிராவில் சந்திராபூர், இச்சல்கரஞ்சி நகரங்களில், மணிப்பூரில் தௌபால் நகரம் மற்றும் உத்தர பிரதேசத்தில் பைசாபாத், ஃபிரோசாபாத், முசாபர்நகர் ஆகிய நகரங்களில் என்று 11 மாநிலங்களில் இன்று முதல் ஜியோவில் ட்ரூ 5 ஜி அதிவேக இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜியோ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், மேலும் ஜியோவில் 5 ஜி சேவையை விரிவுப்படுத்துவதில் ஜியோ நிறுவனம் மகிழ்ச்சி கொள்வதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, புதிதாக ஜியோ 5 ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள நகரங்கள் நாட்டின் முக்கிய கல்வி நகரங்களாக உள்ளது.

Also Read : இனி இன்ஸ்டா, ஃபேஸ்புக்கில் ப்ளூ டிக் பெறப் பணம் செலுத்த வேண்டும் - அதிரடியாக அறிவித்த மார்க் சக்கர்பெர்க்..!

ஜியோ 5ஜி சேவையின் மூலம் இந்த நகரங்களில் கல்வி, ஆட்டொமொபைல், செயற்கை நுண்ணறிவு, விளையாட்டு, சுகாதாரம், விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் தொழில்கள் போன்றவை மேம்பட்டு வளர்ச்சியடைய உதவும் என்று தெரிவித்துள்ளார்.

700 MHz,3500 MHz மற்றும் 26 GHz பேண்ட்களில் ஜியோ 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கு 700 MHz பேண்டில் sub-GHz spectrum வழங்கும் ஒரே நிறுவனமாக ஜியோ செயல்படுகிறது.

First published:

Tags: Jio, Jio 5G, Reliance Jio