ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஜியோ 5ஜி... அறிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்..!

ஜியோ 5ஜி... அறிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்..!

5ஜி

5ஜி

Jio 5G: 5ஜி சேவையை இண்டெர்னெட் டேட்டாவிற்காக மட்டும் பயன்படுத்தாமல் ஜியோ வாய்ஸ் கால் சேவையாகவும் பயன்படுத்துவதால் ஆடியோ கிலாரிட்டி அதிகமாக இருக்கும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  சென்னையில் ஜியோ 5ஜி சேவை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜியோ 5ஜியின் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து அறிந்துகொள்ளலாம்.

  அக்டோபர் 1-ஆம் தேதி இந்திய மொபைல் காங்கிரஸ் 2022 நிகழ்வில் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய நகரங்களில் 5G சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதையடுத்து,  அக்டோபர் 5 முதல் மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய 4 நகரங்களில் தொடங்கப்பட்டது.

  இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் நத்வரா , சென்னை ஆகிய நகரங்களில் இன்று ஜியோ 5ஜி சேவையை  ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி தொடங்கி வைத்தார். 5ஜி சேவையை பெற பயனர்கள் தங்கள் சிம் கார்டை மாற்ற தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது இருக்கும் மொபைல் ஃபோனிலேயே 5ஜி சேவையை பயன்படுத்த மொபைல் தயாரிப்பாளர்களுடன் இணைந்து ஜியோ நிறுவனம் பணியாற்றி வருகிறது.

  5ஜி சேவையை பொறுத்தவரை பிற நிறுவனங்களில் இருந்து ஜியோ மேம்பட்டுள்ளது. பொதுவாக 4ஜி தொழில்நுட்ப கட்டமைப்பில் 5ஜி சேவையை பயன்படுத்துவதால் சிறு தாமதம் இருக்கும் ஆனால் ஜியோ நிறுவனம் 5ஜிக்கென தனி கட்டமைப்பை கொண்டுள்ளதால் மிக வேகமாக இருக்கும்.

  இதையும் படிங்க: சென்னை உள்ளிட்ட நகரங்களில் இன்று முதல் ஜியோ 5ஜி சேவை - ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் தலைவர் ஆகாஷ் அம்பானி தொடங்கி வைத்தார்!

  5ஜி சேவையை இண்டெர்னெட் டேட்டாவிற்காக மட்டும் பயன்படுத்தாமல் ஜியோ வாய்ஸ் கால் சேவையாகவும் பயன்படுத்துவதால் ஆடியோ கிலாரிட்டி அதிகமாக இருக்கும்.

  பிராட்பேண்ட், ஐஒடி, இண்டெர்னெட் ரேடியோ என பல்வேறு வகையான இண்டெர்னெட் சேவைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதால் வேகம் குறையலாம். ஆனால் ஜியோவில் நெட்வொர்க் ஸ்லைசிங் முறை பின்பற்றப்படுவதால் அனைத்து சேவைகளையும் ஒரே நேரத்தில் அதிகபட்ச வேகத்திலேயே பயன்படுத்தலாம்.

  மேலும், தரமான 5ஜி சேவையை வழங்கும் விதமாக உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான நோக்கியாவுடன் ஜியோ நிறுவனம் கரம் கோர்த்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது

  Published by:Murugesh M
  First published:

  Tags: 5G technology, Jio