பிரபஞ்சத்தின் விடியலைக் காணும் முயற்சியாக நாசாவால் அனுப்பப்பட்ட உலகின் மிகப் பெரிய சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியான James Webb Space Telescope கடந்த திங்களன்று பூமியிலிருந்து ஒரு மில்லியன் மைல் தொலைவில் அதன் இறுதி இலக்கை அடைந்து உள்ளது. இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் ஒரு மில்லியன் மைல் தொலைவில் உள்ள அதன் காஸ்மிக் பார்க்கிங் இடத்தை சென்றடைந்து உள்ளது. இது பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்க்கும் பணிக்கு ஒரு படி நெருக்கமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது நாசா.
கொடுக்கப்பட்ட கமாண்டின் பேரில், ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் அதன் ராக்கெட் த்ரஸ்டர்களை ஏறக்குறைய 5 நிமிடங்களுக்கு டெசிக்கினேட்டட் லொக்கேஷனில் (designated location) சூரியனைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் ஏவியது. மேலும் இந்த நடவடிக்கை திட்டமிட்டபடி நடந்ததாக நாசா உறுதிப்படுத்தி உள்ளது. கிழக்கு நேரப்படி (Eastern Time) பிற்பகல் 2:00 மணியளவில் (1900 GMT) கிட்டத்தட்ட பாதி வானத்தை அணுகக்கூடிய இரண்டாவது லாக்ரேஞ்ச் புள்ளி என்று அழைக்கப்படும் இடத்தை அடைய அப்சர்வேட்ரி (observatory) தனது ராக்கெட் த்ரஸ்டர்களை ஐந்து நிமிடங்களுக்கு ஏவியது.
இந்த நுட்பமான எரிப்பு James Webb Space Telescope-ன் ஒட்டுமொத்த வேகத்தில் ஒரு மணி நேரத்திற்கு 3.6 மைல்கள் (வினாடிக்கு 1.6 மீட்டர்) சேர்த்தது. நாசா நிர்வாகி பில் நெல்சன் (Bill Nelson) ஒரு அறிக்கையில் "Webb, welcome home!" என்று தெரிவித்துள்ளார். கோடையில் அதன் அறிவியல் பணியை இந்த டெலஸ்கோப் தொடங்கும். இதில் பிக் பேங்கிற்குப் பிறகு உருவான முதல் தலைமுறை விண்மீன் திரள்கள் வரை 13.5 பில்லியன் ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்க அதன் உயர் தெளிவுத்திறன் அகச்சிவப்பு கருவிகளைப் பயன்படுத்த உள்ளது.
மேலும் L2-ல் இது சூரியனைச் சுற்றி நகரும் போது Webb-ன் சூரியக் கவசம் பூமியின் வரிசையில் இருக்கும், வெப்பம் மற்றும் ஒளியில் இருந்து அதன் உணர்திறன் கருவிகளைப் பாதுகாக்க அனுமதிக்கிறது. இதனிடையே பில் நெல்சன் தனது அறிக்கையில் "பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிக்கொணர ஒரு படி நெருக்கமாக இருக்கிறோம். இந்த கோடையில் Webb-ன் மூலம் கிடைக்க போகும் பிரபஞ்சத்தின் முதல் புதிய காட்சிகளைப் பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை.மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்!" என தெரிவித்துள்ளார்.
இந்த தொலைநோக்கி விண்மீன்களை தவிர, வேப் வேற்றுகிரக உலகங்களின் வளிமண்டலங்களை வாழ்வின் சாத்தியமான அறிகுறிகளை ஸ்கேன் செய்யும் என்றும் நாசா தெரிவித்து உள்ளது. எக்ஸோப்ளானெட்டுகள் எனப்படும் தொலைதூரக் கோள்களின் தோற்றம், பரிணாமம் மற்றும் வாழக்கூடிய தன்மை ஆகியவற்றைக் கண்டறிவதற்கான ஆய்வும் இதன் நோக்கத்தில் அடங்கும்.
கடந்த டிசம்பர் 25-ஆம் தேதி ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் (JWST) பிரெஞ்சு கயானாவின் கௌரோவில் உள்ள கயானா விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் ‘ஏரியன் 5’ ராக்கெட்டின் மூலம் இது விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏவப்பட்ட 1 1/2 வாரங்களுக்குப் பிறகு ஜனவரி தொடக்கத்தில் டென்னிஸ் மைதானத்தைப் போன்ற பெரிய சூரியக் கவசமானது தொலைநோக்கியில் விரிந்தது.
6.4 மீ (21 அடி) குறுக்கே உள்ள கோல்டு கோட்டட் மிரர் சில நாட்களுக்குப் பிறகு அன்ஃபோல்ட் செய்யப்பட்டது. சூரியன் மற்றும் பூமியின் ஈர்ப்பு விசைகள் சமநிலையில் இருக்கும் இரண்டாவது லாக்ரேஞ்ச் புள்ளி என்று அழைக்கப்படும் இடத்தில், த்ரஸ்டர் சூரியனைச் சுற்றி வந்தது. 7 டன் எடையுள்ள விண்கலம் அதன் infrared detectors-களை முடிந்தவரை குளிர்ச்சியாக வைத்திருக்க எப்போதும் பூமியின் இரவு பக்கத்தை எதிர்கொள்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.