ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

லொக்கேஷன் டேட்டா அணுக யூஸர்களின் ஒப்புதலை பெறுவது கட்டாயம்.. UPI ஆப்ஸ்களுக்கு NPCI அதிரடி உத்தரவு.!

லொக்கேஷன் டேட்டா அணுக யூஸர்களின் ஒப்புதலை பெறுவது கட்டாயம்.. UPI ஆப்ஸ்களுக்கு NPCI அதிரடி உத்தரவு.!

UPI

UPI

UPI Apps | UPI App-ற்கான இருப்பிடம் அல்லது புவியியல் விவரங்களை பகிர்வதற்கான ஒப்புதலை வாடிக்கையாளர் திரும்பப் பெற்ற பிறகும், குறிப்பிட்ட ஆப்ஸ் UPI சேவைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அனைத்து யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) அடிப்படையிலான அப்ளிகேஷன்களும் தங்கள் யூஸர்களிடமிருந்து லொக்கேஷன் அல்லது ஜியோகிராஃபிக் கோஆர்டினேட்ஸ் (geographic coordinates) உள்ளிட்ட தகவல்களை சேகரிக்க அவர்களின் ஒப்புதலை பெறுவது கட்டாயம் என நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) உத்தரவிட்டுள்ளது.

தவிர லொக்கேஷனை ஷேர் செய்வதற்கான ஒப்புதலை எனேபிள் செய்ய அல்லது டிசேபிள் செய்வதற்கான ஆப்ஷன்களையும் யூஸர்களுக்கு கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என்றும் NPCI கூறியுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில் "வாடிக்கையாளர் சேவைகளைப் பெறும் போது முதலில் லொக்கேஷனை ஷேர் செய்து கொள்ள ஒப்புதல் அளித்திருந்தாலும் கூட, பின்னர் அந்த ஒப்புதலை திரும்பப் பெற விரும்பினால், அதற்கான நடைமுறைகள் எந்த சிக்கலும் இல்லாமல் இருக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. முந்தைய வழிகாட்டுதல்களின் நீட்டிப்பாக, அனைத்து UPI ஆப்ஸ்களும் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்களை NPCI அறிவித்துள்ளது.

மேலும் UPI App-ற்கான இருப்பிடம் அல்லது புவியியல் விவரங்களை பகிர்வதற்கான ஒப்புதலை வாடிக்கையாளர் திரும்பப் பெற்ற பிறகும், குறிப்பிட்ட ஆப்ஸ் UPI சேவைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க வேண்டும். அதாவது UPI ஆப்ஸுடன் லொக்கேஷனை சரி செய்ய யூஸர் ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டு, பின் அந்த ஒப்புதலை திரும்பப் பெற விரும்பினால், யூஸருக்கு UPI சேவைகளை மறுக்காமல் வழங்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. NPCI-ன் இந்த புதிய உத்தரவு மூலம் Google Pay மற்றும் PhonePe போன்ற UPI ஆப்ஸ்கள் லொக்கேஷன் டேட்டாவை ஷேர் செய்யாத யூஸர்களுக்கு UPI சேவைகளை இனி மறுக்க முடியாது. மேலும் லொக்கேஷன் டேட்டாக்களுக்கு முன்பு அனுமதி வழங்கிய யூஸர்கள், இப்போது தாங்கள் வழங்கிய அனுமதிகளை திரும்ப பெற அனுமதிக்கப்படுவார்கள்.

குறிப்பிட்ட ஆப்ஸ்களுக்கு லொக்கேஷன் / ஜியோகிராஃபிக் கோஆர்டினேட்ஸ் தகவல்களை கைப்பற்ற யூஸர்கள் ஒப்புதல் அளித்த அனைத்து நிகழ்வுகளுக்கும், சேகரிக்கப்பட்ட தகவல்கள் UPI-க்கு சரியாக அனுப்பப்பட வேண்டும். இது போன்ற சமயங்களில் தவறான லொக்கேஷன் கோஆர்டினேட்ஸ் அனுப்பினால், NPCI-லிருந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய விதிகளை அனைத்து UPI ஆப்ஸ்களும் வரும் டிசம்பர் 1, 2022-க்குள் பின்பற்ற வேண்டும். மேலும் இவை தனிநபர்களுக்கு இடையேயான உள்நாட்டு UPI பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. NPCI-க்கு சொந்தமான UPI தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த நடவடிக்கை சிறந்த வெளிப்படைத்தன்மை மற்றும் யூஸர்களின் தனியுரிமையை பராமரிக்கும் செயலாக இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Also Read : Tokenization Security - கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பாதுகாக்குமா.?

இந்தியாவில் 26 கோடிக்கும் அதிகமான தனிப்பட்ட யூஸர்கள் மற்றும் 5 கோடி வணிகர்களுடன் UPI ஆனது மிகவும் பிரபலமான மற்றும் எளிமையான பேமென்ட் முறையாக மாறியுள்ளது. மே 2022 -ல் மட்டும், சுமார் 594 கோடி பரிவர்த்தனைகள் ரூ.10.4 லட்சம் கோடி UPI மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Google pay, Online Transaction, Phonepe, UPI