இந்த ஆண்டு, பல மொபைல் நிறுவனங்கள் பல்வேறு புதிய மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளன. கோவிட் தொற்று காரணமாக கடந்த ஆண்டு இருந்த தேக்க நிலையை விட இந்த ஆண்டு பல்வேறு தொழில்துறைகளும் ஓரளவு வருமானம் ஈட்டியுள்ளன. ஆண்ட்ராய்டு OS ஸ்மார்ட் போன்கள், லேப்டாப்கள் மற்றும் டேப்லட்கள் தொடர்ந்து விற்பனையாகி வருகிறது. அனைவருக்கும் ஏற்ற பட்ஜெட்டில் கிடைக்கின்றன.
எப்போதும் இல்லாத அளவுக்கு ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆண்ட்ராய்டு OS பல வெர்ஷன்கள் தற்போது பயன்படுத்தி வரும் நிலையில், எந்த OS பதிப்பு அதிகபட்ச யூசர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று பார்க்கலாம்.
ஆண்டுக்கு ஒரு முறை என்ற ரீதியில், அல்லது சில மாதங்கள் இடைவெளியில் ஆண்ட்ராய்டு OS இன் புதிய பதிப்புகள் வெளியாகும். ஒவ்வொரு ஆண்ட்ராய்டு OS வெர்ஷனுக்கும் ஒவ்வொரு இனிப்பின் பெயர் வைக்கப்பட்டு வருவதும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆண்ட்ராய்டு 1 தொடங்கி தற்போது 12 வெர்ஷன்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு வெளியான ஆண்ட்ராய்டு 11 வெர்ஷன் அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் வெர்ஷனாக இருக்க வேண்டும். ஆனால், 2019 ஆம் ஆண்டு முதல் கடந்த இரண்டு வருடங்களாக அதிகபட்ச யூசர்கள் விரும்பும், பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு 10 OS என்று ஆண்ட்ராய்டு ஸ்டுடியோ தெரிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு 12 பதிப்பைப் பொறுத்தவரை தற்போது கூகுள் மற்றும் சாம்சங் ஆகிய இரு மொபைல் நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்துவதால், மிகக்குறைந்த அளவிலான யூசர்களை மட்டுமே கொண்டிருக்கும். 2021 இன் அதிகமாக பயன்படுத்தப்பட்டது ஆண்ட்ராய்டு 10 ஆகும். உலகம் முழுவதும் 26.5 % ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் யூசர்கள், ஆண்ட்ராய்டு 10 வெர்ஷன் உள்ள மொபைலை பயன்படுத்துகிறார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 24% யூசர்களோடு, இரண்டாவது இடத்தை ஆண்ட்ராய்டு 11 பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் ஆண்ட்ராய்டு 9 வெர்ஷன் 13.7 % யூசர்களோடு உள்ளது.
ஆண்ட்ராய்டு ஸ்டுடியோ தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. இருப்பினும், மொபைல் நிறுவனங்களும் அந்த அப்டேட்களை உடனடியாக விநியோகிக்க வேண்டும். ஆண்ட்ராய்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் கூகுள், முன்பை விட வேகமாக ஆண்ட்ராய்டு OEMகளை விநியோகிக்கிறது. அதே போல, அதிகமாக விற்பனையாகும் பிராண்டுகளான சாம்சங், ஒன்பிளஸ், சியோமி மற்றும் ஓப்போ ஆகிய நிறுவனங்களும் புதிய அப்டேட்களை விரைவாக டெலிவர் செய்வதாக உறுதியளித்திருக்கிறது.
Also read... ஆப்பிள் நிறுவனத்தின் குறிப்பிட்ட ஐஃபோன் சாதனங்களுக்கு இலவச சர்வீஸ்
ஆண்ட்ராய்டு அப்டேட்கள் எவ்வளவு விரைவாக யூசர்களின் மொபைல்களை அடைந்தாலும், ஆப்பிள் நிறுவனத்தின் iOS தளத்தோடு ஒப்பிடும் போது, டெலிவரி ஆகும் வேகம் மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. ஆப்பிள் iOS அப்டேட் வெளியான அன்றே அனைத்து ஐபோன்களிலும் கிடைக்கும் அளவுக்கு மென்பொருள் கட்டமைப்பு உள்ளது. ஆண்ட்ராய்டு போன்களுக்கும் விரைவில் இவ்வகையான மாற்றங்கள் விரைவில் அப்டேட் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.