இந்திய ஐ.டி.துறையில் 30 லட்சம் பேர் வேலை இழப்பா? நாஸ்காம் விளக்கம்!

கோப்புப் படம்

தொழில்நுட்பத்தின் பரிணாமம் மற்றும் அதிகரிக்கும் ஆட்டோமேஷன் மூலம், பாரம்பரிய தகவல் தொழில்நுட்ப வேலைகளின் தன்மை ஒட்டுமொத்தமாக புதிய வேலைகளை உருவாக்க வழிவகுக்கும் என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது.

  • Share this:
இந்திய ஐ.டி.துறையில் அடுத்த ஆண்டுக்குள் 30 லட்சம் பேர் வேலையை இழப்பார்கள் என்று தகவல் வெளியான நிலையில்,  இதனை தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின்  கூட்டமைப்பான நாஸ்காம் மறுத்துள்ளது.

இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 2022ஆம் ஆண்டுக்குள் ஆர்.பி.ஏ எனப்படும் ரோபோ செயல்முறை ஆட்டோமேசன் காரணமாக 30 லட்சம் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கக் கூடும் என்றும் இதன் மூலம் ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலர் பணத்தை நிறுவனங்கள் மிச்சப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பாங்க் ஆப் அமெரிக்கா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.  இது ஐ.டி. துறையில் பணியாற்றுவோர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த தகவல் தவறானது என்று தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் தெரிவித்துள்ளது.

அதாவது, ஆர்.பி.ஏ. காரணமாக 2022ம் ஆண்டுக்குள் ஐ.டி. நிறுவனங்களில் 30 சதவீத பணிவாய்ப்புக் குறையும் என ஆய்வில் கூறப்பட்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து விளக்கமளித்துள்ள நாஸ்காம், “தொழில்நுட்பத்தின் பரிணாமம் மற்றும் அதிகரிக்கும் ஆட்டோமேஷன் மூலம், பாரம்பரிய தகவல் தொழில்நுட்ப வேலைகளின் தன்மை ஒட்டுமொத்தமாக புதிய வேலைகளை உருவாக்க வழிவகுக்கும். திறமையானவர்களுக்கு ஐ.டி. துறை தொடர்ந்து வேலை வழங்கி வருவதாகவும் இந்த நிதியாண்டில் 1,38,000 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்றும் நாஸ்காம் தெரிவித்துள்ளது.  டிஜிட்டல் திறனின்  2 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்களின் திறமையை ஐ.டி. துறை மேம்படுத்துள்ளது என்றும் புதிதாக 40 ஆயிரம் பேரை வேலைக்கு எடுத்துள்ளதாகவும் நாஸ்காம் கூறியுள்ளது.

தற்போது ஐடி மற்றும் பிபிஎம் துறையின் வருவாய் 194 பில்லியன் டாலர்களாக உள்ள நிலையில், 2025ஆம் ஆண்டில் இது 300-350 பில்லியன் டாலராக உயரும் என்றும் நாஸ்காம் தெரிவித்துள்ளது.  கடந்த மூன்று ஆண்டுகளாக இயந்திரமயாமக்கல் மற்றும் ஆர்.பி.ஏ. முதிர்ச்சியடைந்து வருவதாகவும்  பிபிஎம் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக இது காரணமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Published by:Murugesh M
First published: