Home /News /technology /

இந்தியாவில் 5ஜி சேவை தொடக்கம் எப்போது.? சென்னை ஐஐடியில் வெற்றிகரமான ஆரம்பம்!

இந்தியாவில் 5ஜி சேவை தொடக்கம் எப்போது.? சென்னை ஐஐடியில் வெற்றிகரமான ஆரம்பம்!

(Image: News18)

(Image: News18)

5G Network in India | 5ஜி வாய்ஸ் கால் மூலமாக எச்.டி. குரல் மற்றும் மேம்படுத்தப்பட்ட வீடியோ கால்களின் தரம் மற்றும் பிற தகவல் தொடர்பு சேவைகள் கிடைக்கப்பெறும்.

இந்தியாவில் விரைவில் 5ஜி சேவையை தொடங்குவதற்கான வேலைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. மத்திய அரசு விரைவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தை முடித்த பிறகு இந்த ஆண்டின் பிற்பகுதியில் சேவையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்க உள்ளதால், அதற்கான ஆரம்ப கட்ட சோதனைகள், உபகரணங்களுக்கான விரிவாக்கங்கள் குறித்த ஆய்வில் மத்திய அரசு களமிறங்கியுள்ளது.

கடந்த 19ஆம் தேதி சென்னை ஐ.ஐ.டி.யில் அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து வசதிக்காக ஹைப்பர்லூப்பை உருவாக்கிய மாணவர்களுடன் மத்திய ரயில்வே, தகவல், தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துரையாடினார்.

பின்னர் 8 ஐ.ஐ.டி நிறுவனங்களின் கூட்டுமுயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள 5G நெட்வொர்க் சேவையையும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டு, தொழில் முனைவோர்களின் புதிய கண்டுபிடிப்புகளை பாராட்டினார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "ஆத்மநிர்பார் 5ஜி. ஐஐடி மெட்ராஸில் 5ஜி சேவைக்கான சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. முழு எண்ட்-டு-எண்ட் நெட்வொர்க் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் தொலைநோக்கு பார்வையை உணர்த்தும் விதமாக, 5ஜி தொழில்நுட்ப சேவையின் முதற்கட்டமாக வீடியோ கால் சேவையை பரிசோதித்து பார்த்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இன்று மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கு மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. 5G என்பது ஐந்தாம் தலைமுறை செல்லுலார் தொழில்நுட்பமாகும். இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டதும், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற 5ஜி சாதனங்களில் அழைப்பை இயக்க 4ஜி (VoLTE) க்கு பயன்படுத்தப்படும் நெட்வொர்க் உள்கட்டமைப்பும் பயன்படுத்தப்பட உள்ளது.

Also Read : ஆபத்து!! உடனே கூகுள் குரோம் அப்டேட் பண்ணுங்க... மத்திய அரசு எச்சரிக்கை!

5ஜி வாய்ஸ் கால் அழைப்பின் நன்மைகள் என்ன?

5ஜி வாய்ஸ் கால் மூலமாக எச்.டி. குரல் மற்றும் மேம்படுத்தப்பட்ட வீடியோ கால்களின் தரம் மற்றும் பிற தகவல் தொடர்பு சேவைகள் கிடைக்கப்பெறும். மேலும் சேவையை வழங்கும் நெட்வோர்க்குகளுக்கும் புதிய வருவாய் கட்டமைப்பு, திருப்திகரமான வாடிக்கையாளர்கள், மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்குதல் போன்ற பல விஷயங்கள் அடங்கியுள்ளது.

Also Read : ரூ.30,000 பட்ஜெட்டில் சிறந்த 10 ஸ்மார்ட்போன்கள்!

இந்தியாவிற்கு 5ஜி சேவை எப்போது வரும்?

சமீபத்திய அறிக்கையின்படி, நோக்கியா, எரிக்சன் மற்றும் சாம்சங் போன்ற 5ஜி உபகரண தயாரிப்பாளர்கள் இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்குவதற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தயாராகி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் 2023 க்குள் முதல் 50 இந்திய நகரங்களில் 5ஜி சேவையை வழங்க போதுமான அளவு வசதிகளை தொலைத்தொடர்பு கியர் தயாரிப்பாளர்கள் பெற்றுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் இன்னும் நிலுவையில் உள்ளது, அது நிறைவடைந்த பிறகே மற்ற பணிகள் தொடங்கும். ஜூன் அல்லது ஜூலையில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அதன் பிறகு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் 5ஜி சேவையை இந்தியாவிற்குள் செயல்படுத்துவார்கள் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : MyGov ஹெல்ப் டெஸ்க் வழியே பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸை இந்திய வாட்ஸ்அப் யூஸர்கள் இனி அணுகலாம்!

4ஜி-யை விட 5ஜி சேவைக்கான செலவு அதிகமா?

இந்தியாவில் விரைவில் தொடங்கப்பட உள்ள 5ஜி சேவைக்கான ரீசார்ஜ் திட்டங்கள் அல்லது அதன் விலைகள் குறித்து எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், ஏற்கனவே நாம் பயன்படுத்தி வரும் 4ஜி சேவைக்கான கட்டணத்திற்கு நிகராகவே 5ஜி சேவைக்கான கட்டணங்களும் இருக்கும் என கூறப்படுகிறது. ஏர்டெல்லின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ரந்தீப் செகோன் சமீபத்தில் ஒரு இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், ஏர்டெல்லின் 5G விலைகள் தற்போது நடைமுறையில் உள்ள 4G திட்டங்களைப் போலவே இருக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: 5G technology, Chennai IIT, India

அடுத்த செய்தி