இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிறுவனத்தின் பிஎஸ்எல்வி-சி54/ஈஓஎஸ்-06 விண்கலம் 9 செயற்கைகோளுடன் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது.
விண்கலத்தில் பூட்டானின் செயற்கைகோள், எட்டு நானோ இந்தியாவின் ஓசன்சாட்-3 உட்பட மொத்தம் 9 செயற்கைகோள்களை ஸ்ரீஹரிக்கோட்டா சதிஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது போலார் சேட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிளின் எனப்படும் பிஎஸ்எல்வி ஏவும் கருவியின் 56வது பயணமாக இருக்க போகிறது. மற்றும் 6 பிஎஸ்ஓஎம்-எக்ஸ்எல்கள் கொண்ட மேம்படுத்தப்பட்ட பிஎஸ்எல்வி பதிப்பின் 24வது விமானமாக இது அமையும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
44.4 மீட்டர் ராக்கெட் 321 டன் எடையுடன் ஏவப்படும். இன்றைய ஏவுதல் திட்டத்தின்படி, அதன் முதன்மை செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்-6 ஆகும், இது ஓஷன்சாட்-3 என்றும் அழைக்கப்படுகிறது. இந்த செயற்கைக்கோளை முதலில் ஆர்பிட்-1ல் விடுவிக்கும்.அதன் பின்னர் தனது பாதையை மாற்றிக்கொண்டு மற்ற செயற்கைக்கோள்களை அதன் குறிப்பிட்ட இடங்களில் விடுவிக்கும் என்று தெரிகிறது.
சனிக்கிழமை இன்று காலை 11.56 மணிக்கு நடக்கும் இதன் ஏவுதல் காட்சியைக் காண விரும்பினால் இஸ்ரோவின் யூட்டியுப் பக்கத்தில் நேரலையைக் காணலாம்…
மேலும் எட்டு நானோ செயற்கைக்கோள்களில் பூட்டானை சேர்ந்த பூட்டான்சாட், Pixxel நிறுவனத்தின் 'ஆனந்த்', துருவா ஸ்பேஸில் இருந்து தைபோல்ட் இரண்டு செயற்கைகோள்கள, மற்றும் ஆஸ்ட்ரோகாஸ்ட் , அமெரிக்க நிறுவனங்களின் 4 நானோ செயற்கைகோள்கள் இதில் அடங்கும்.
மேலும் Spacetech எனும் பெங்களூருவை சேந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் Pixxel அதன் மூன்றாவது ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் செயற்கைக்கோளை - ஆனந்தை ஏவவுள்ளது.
இதையும் படிங்க: WATCH - செவ்வாய் கிரகம் டூ பூமி.. மண் மாதிரிகளை பக்காவாக பார்சல் செய்யும் நாசா.. வீடியோ!
ஆனந்த் ஒரு ஹைப்பர்ஸ்பெக்ட்ரல் 5 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள மைக்ரோசாட்லைட். இது 150 க்கும் மேற்பட்ட அலைநீளங்களைக் கொண்டது, இது மற்ற செயற்கைக்கோள்களை விட பூமியின் படங்களை மிக விரிவாகப் பிடிக்க உதவும். செயற்கைக்கோளில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் காட்டுத் தீயை வரைபடமாக்கவும், மண்ணின் அழுத்தம் மற்றும் எண்ணெய் படலங்களை அடையாளம் காணவும் பயன்படுத்தப்படலாம் என்று Pixxel இன் அறிக்கை தெரிவித்துள்ளது.
ஐதராபாத்தை தளமாகக் கொண்ட துருவா ஸ்பேஸ் உருவாக்கிய ஆஸ்ட்ரோகாஸ்ட், ஒரு 3U விண்கலமாகும். இது இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT)க்கான தொழில்நுட்ப விளக்கக் செயற்கைக்கோள் ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ISRO, Sriharikota