ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ’ககன்யான் பாராசூட்' சோதனை வெற்றி!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ’ககன்யான் பாராசூட்' சோதனை வெற்றி!

ககன்யான்

ககன்யான்

மனிதர்களை ஏந்தி வரும் ‘க்ரூ மாட்யூல்’ மாஸ்ஸுக்கு சமமான 5-டன் டம்மி மாஸ், 2.5 கிலோமீட்டர் உயரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, இந்திய விமானப்படையின் IL-76 விமானத்தைப் பயன்படுத்தி அங்கிருந்து அவிழ்த்து விடப்பட்டது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சோதனை செய்த பின்னர் , இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ககன்யான் பணியின் ஒரு பெரிய சோதனையை செய்துள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் முயற்சியாக ககன்யான் தரையிறங்கும் பாராஷூட் சோதனை நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது.

பாராசூட் அடிப்படையிலான டிசெலரேஷன் சிஸ்டத்தின் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.

விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் உள்ள பாபினா ஃபீல்ட் ஃபயர் ரேஞ்சில் (BFFR) அதன் பணியாளர் தொகுதியின் "ஒருங்கிணைந்த முதன்மை பாராசூட் ஏர் டிராப் சோதனை (IMAT)" ஐ நடத்தியது. இந்த சோதனை இந்தியாவின் திட்டங்களைப் பொறுத்தவரை இந்நிகழ்வு மிகவும் குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டுக்குள் பூமியிலிருந்து முதல் விண்வெளிப் பயணத்தை தொடங்க இருக்கும் நிலையில் இந்த சோதனை வெற்றி மனிதர்களை பத்திரமாக பூமிக்கு அழைத்து வரும் என்பது நிச்சயமாகியுள்ளது.

இதையும் படிங்க: நாகலாந்து ஹார்ன்பில் திருவிழா.. ரூ10,000 இருந்தா போதும் சூப்பரா ஒரு ட்ரிப் அடிக்கலாம்!

மனிதர்களை ஏந்தி வரும் ‘க்ரூ மாட்யூல்’ மாஸ்ஸுக்கு சமமான 5-டன் டம்மி மாஸ், 2.5 கிலோமீட்டர் உயரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, இந்திய விமானப்படையின் IL-76 விமானத்தைப் பயன்படுத்தி அங்கிருந்து விடுவிக்கப்பட்டது. இரண்டு சிறிய பைரோ அடிப்படையிலான மோட்டார்-பயன்படுத்தப்பட்ட பாராசூட்கள் திறந்து தரை இறங்கின.

ககன்யான் க்ரூ தொகுதி அமைப்பு மொத்தம் 10 பாராசூட்களைக் கொண்டுள்ளது. விமானத்தில், 2 பிரதான பாராசூட் வரிசைகள், வேகத்தை நிலைப்படுத்தவும் குறைக்கவும் 2 ட்ரோக் பாராசூட்கள் பயன்படுத்தப்படுவதாக இஸ்ரோ கூறியது

இதையும் படிங்க: கார் அளவுக்கு பெரிதான டைனோசர் காலத்திய ஆமை பற்றி தெரியுமா?

ஒவ்வொரு பாராசூட்டின் செயல்திறன் சிறிய பாராசூட்டுகளுக்கான ரயில் டிராக் ராக்கெட் ஸ்லெட் (RTRS) சோதனைகள் மற்றும் பிரதான பாராசூட்களுக்கான விமானம்/ ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி சிக்கலான சோதனை முறைகள் மூலம் பல்வேறு மதிப்பீடு முறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன..

சனிக்கிழமையன்று நடந்த சோதனையானது, பாராஷூட் தோல்வியடையும் நிலைகளில் அதை எப்படி செயல்படுத்துவது என்ற பன்முக கோணத்தில் சோதிக்கப்பட்டது. ககன்யானின் பாகங்கள் எல்லாம் தனி தனியாக இந்தியாவின் பல்வேறு இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Gaganyan, ISRO