Home /News /technology /

செவ்வாய், வெள்ளி கிரகத்தில் தரையிறங்குவதற்கான தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ

செவ்வாய், வெள்ளி கிரகத்தில் தரையிறங்குவதற்கான தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ

இஸ்ரோ

இஸ்ரோ

ஐஏடி கெவ்லர் துணியால் ஆனது, பாலிகுளோரோபிரீன் பூசப்பட்டது. இது துணியால் ஆனது என்பதால், ஐஏடியை 15 லிட்டர் அளவுள்ள கலனில் பேக் செய்ய முடியும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) எதிர்காலத்தில் செவ்வாய் அல்லது வேறு கிரகங்களில் தரையிறக்க பயன்படும் Inflatable Aerodynamic Decelerator (IAD) வேகத்தை குறைக்கும் கருவியை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

இந்த கருவி  வளிமண்டலத்தின் வழியாக இறங்கும் ஒரு பொருளை ஏரோடைனமிகல் முறையில் வேகத்தைக் குறைத்து மெதுவாக தரை இறக்க உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு விண்கலம் வேற்று கிரகங்களுக்கு சென்று  வளிமண்டலத்தில் நுழைந்து பாதுகாப்பாக மேற்பரப்பில் தரை இறக்கும் சோதனைகள் பல நடைபெற்று வருகிறது. வளிமண்டலத்திற்கு வெளியே சென்று மீண்டும் உள்நுழையும் சோதனைகள் வெறிறி அடைந்தது.

அதன் அடுத்தகட்டமாக விண்கலத்தை பத்திரமாக தரை இறக்கும் சோதனை தான் இப்போது நடைபெற்று வருகிறது. தும்பா பூமத்திய ரேகை ஏவுதளத்தில் இருந்து நேற்று ஏவப்பட்ட ஒரு சவுண்டிங் ராக்கெட்டில் இந்தத் தொழில்நுட்ப சோதனை நடத்தப்பட்டது. ராக்கெட் இந்த வேகம் குறைக்கும் கருவியை 84 கிலோமீட்டர் உயரத்திற்கு எடுத்துச் சென்று, அங்கு வளிமண்டலத்தில் இருந்து கீழே விடப்பட்டது.

மீண்டும் நிறுத்தப்பட்ட நாசாவின் ஆர்டெமிஸ் விண்கலம்!

சோதனை:

ஒற்றை-நிலை ரோகிணி-300 (RH300MKIl) ராக்கெட்டின் மூக்கு பகுதியில் இந்த கருவி வைக்கப்பட்டு ஏவப்பட்டது. ஏவப்பட்ட 100 வினாடிகளில், மூக்குப்பகுதி தனியாக பிரிக்கப்படும். அதைத் தொடர்ந்து 110 வினாடிகளில், எரிவாயு பாட்டிலில் சேமிக்கப்பட்ட அழுத்தப்பட்ட நைட்ரஜனை இந்த கருவிக்குள் நிரப்பப்பட்டு பலூன் போன்று மிதக்கும் நிலைக்கு மாற்றப்படுகிறது. 200 வினாடிகளில், நெகிழ்வான நேரியல் வடிவ பிரிப்பு அமைப்பு முறைப்படி மோட்டாரிலிருந்து பிரிக்கப்பட்டு தரை இறக்கப்படுகிறது என்று இஸ்ரோ கூறியுள்ளது.

சோதனையின் போது, ​​ஏரோடைனமிக் இழுவை மூலம் பேலோடின் வேகத்தை ஐஏடிகருவி முறையாகக் குறைத்து, கணிக்கப்பட்ட பாதையைப் பின்பற்றியது. இதுவரை நடத்தப்பட்ட சோதனைப் பணியின் அனைத்து நோக்கங்களும் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

இஸ்ரோவின் தலைவர் எஸ்.சோமநாத் கூறுகையில், “இந்த சோதனை ஊதப்பட்ட ஏரோடைனமிக்ஸ் டெசிலரேட்டர்- வேகம் குறைப்பான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செலவு குறைந்த நிலை மீட்புக்கான வாய்ப்பை உருவாகியுள்ளது’ என தெரிவித்தார்.

 
Published by:Ilakkiya GP
First published:

Tags: ISRO, MARS, Satellite launch, Test

அடுத்த செய்தி