ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

யுவிகா திட்டத்திற்காக 150 பள்ளி மாணவர்களை தேர்வுசெய்த இஸ்ரோ; பயிற்சி மையங்களின் முழு லிஸ்ட் இதோ!

யுவிகா திட்டத்திற்காக 150 பள்ளி மாணவர்களை தேர்வுசெய்த இஸ்ரோ; பயிற்சி மையங்களின் முழு லிஸ்ட் இதோ!

கோப்புப் படம்

கோப்புப் படம்

ISRO | அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் புதிய போக்குகள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே யுவிகா-வின் குறிக்கோள் ஆகும்.

யுவிகா (YUVIKA), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ரெசிடென்டல் ட்ரெயினிங் திட்டம் (Residential training programme) ஆகும். இதற்காக இஸ்ரோ, நாடு முழுவதும் இருந்து சுமார் 1 லட்சம் பள்ளி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. மே 16ம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி முடிவடையும் இந்த திட்டத்திற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சுமார் 150 பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.

“சுமார் 1 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். இறுதியாக, 150 மாணவர்கள் அவர்களின் கல்வி மதிப்பெண்கள் மற்றும் பிற இணை பாடத்திட்ட நடவடிக்கைகளில் பெற்ற சாதனைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்” என்று இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் புதிய போக்குகள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே யுவிகா-வின் குறிக்கோள் ஆகும். மேலும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் ஆராய்ச்சி அல்லது தொழிலைத் தொடர அதிக மாணவர்களை யுவிகா திட்டம் ஊக்குவிக்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.

இஸ்ரோவின் கூற்றுப்படி, இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, வகுப்பறை விரிவுரைகள், ஸ்கை கேஸிங், ரோபோட்டிக் அசெம்பிளி, லேப் / ஃபேசிலிட்டி டூர்ஸ் மற்றும் ‘கான்சாட்’ பரிசோதனைகள் போன்றவைகளின் கீழ் மாணவர்கள் இஸ்ரோவின் முக்கிய விஞ்ஞானிகளுடன் இணையும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

மேலும் இந்த திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட அனைத்து மாணவர்களும் எஸ்டிஎஸ்சி எஸ்எச்ஏஆர் - ஸ்ரீஹரிகோட்டா, இந்தியாவின் விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள், உடன் இஸ்ரோவின் தலைவர் ஆன எஸ் சோமநாத்தை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பையும் இவர்கள் பெறுவார்கள்.

இஸ்ரோவின் யுவிகா திட்டத்திற்கான பயிற்சி மையங்கள் அதன் ஐந்து மையங்களில் நடைபெறுகிறது:

1. அகமதாபாத்தில் உள்ள ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் சென்டர்

2. பெங்களூரில் உள்ள யு ஆர் ராவ் சாட்டிலைட் சென்டர்

3. திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்

4. ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர்

5. ஷில்லாங்கில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் சென்டர்

கடந்த திங்களன்று, யுவிகா திட்டத்திற்கான நிகழ்ச்சியை இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் தொடங்கி வைத்தார். அப்போது ​​அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைச் சந்திக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாணவர்களை சோமநாத் ஊக்குவித்தார். பொறியியல், வானியற்பியல், பொருள் அறிவியல், கணிதம், வேதியியல் மற்றும் கணினி அறிவியல் போன்ற பல விருப்பங்கள் மற்றும் துறைகள் பற்றியும் அவர் பேசினார்.

Also see... TN TET Exam 2022 | தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் ஜூலை இறுதிக்குள் நடைபெற வாய்ப்பு!

இவை அனைத்தும் மாணவர்கள் தத்தம் கையில் எடுக்க வேண்டிய விண்வெளி தொழில்நுட்பத்தின் இன்றியமையாத கூறுகள் ஆகும் என்றும் குறிப்பிட்டார். மேலும் இஸ்ரோ தலைவர், மாணவர்களை இஸ்ரோவின் “தூதர்களாக” ஆகுமாறும் கேட்டுக்கொண்டார். அதாவது தங்கள் பெறும் அனுபவத்தை அவர்களின் வகுப்பு தோழர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்களுக்கு பரப்பும்படி கேட்டுக்கொண்டார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: ISRO