ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

நிலவின் மேற்பரப்பை படம்பிடித்து அனுப்பிய சந்திரயான் 2.... இஸ்ரோ வெளியிட்டுள்ள புதிய புகைப்படம்

நிலவின் மேற்பரப்பை படம்பிடித்து அனுப்பிய சந்திரயான் 2.... இஸ்ரோ வெளியிட்டுள்ள புதிய புகைப்படம்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  நிலவின் மேற்பரப்பில் உள்ள கிராடர் பள்ளக் குழியை சந்திரயான்-2 விண்கலம் எடுத்த முப்பரிமாண புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

  நிலவைச் சுற்றி ஆய்வு செய்து வரும் சந்திராயன் 2 விண்கலம் நிலவின் புகைப்படங்களை அவ்வப்போது அனுப்பி வருகிறது. இந்நிலையில், சந்திரயான் -2 விண்கலத்தால் எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பில் உள்ள கிராடர் பள்ளங்களின் புதிய 3-டி புகைப்படத்தை இஸ்ரோ நேற்று வெளியிட்டது.

  டெரைய்ன் மேப்பிங் கேமரா -2 முழுமையான நிலவின் மேற்பரப்பின் டிஜிட்டல் மேம்பட்ட மாதிரியை தயாரிப்பதற்காக, 100 கி.மீ சுற்றுப்பாதையில் இருந்து 5 மீ பரப்பை மும்மடங்கு தெளிவுத்திறன் கொண்ட ஸ்டீரியோ படங்களை வழங்கியுள்ளது. டெரைய்ன் மேப்பிங் கேமரா இரண்டிலிருந்து வரும் மும்மடங்கு தெளிவான படங்களை, டிஜிட்டல் மேம்பட்ட மாதிரிகளாக மாற்றும்போது, நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளம், எரிமலைக் குழிகள், எதிர்கால வாழ்விடத்திற்கான சாத்தியமான இடங்கள் குறித்து அறிய முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

  Published by:Prabhu Venkat
  First published:

  Tags: Chandrayaan 2, ISRO