இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியான நடக்க உதவும் செயற்கை ஸ்மார்ட் மூட்டுகளை உருவாக்கியுள்ளது. விண்வெளி ஆய்வில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பத்தில் இருந்து உருவாக்கப்பட்ட இவை, விரைவில் வணிக பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது.
முன்னதாக ஒரு கால் இல்லாதவர்கள் எடை அதிகமான செயலாற்ற செயற்கைக்கால் பொருத்தி நடக்க வேண்டி இருந்தது. அதன் அதீத எடையே நடப்பவர்க்கு சிரமத்தை கொடுத்து வந்தது. அதற்கு நம் நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் இஸ்ரோவில் பணியாற்றியபோது ராக்கெட் தயாரிக்கும் மெல்லிய வலுவான இலகுரக புரோஸ்டெடிக்ஸ் பயன்படுத்தி இலகுரக செயற்கைக் கால்களை உருவாக்கினார்.
இன்று வரை அந்த கால்கள்தான் பலருக்கும் பெரிய துணைவனாக நின்று அந்த மக்களையும் நிற்க வைக்கிறது. இப்போது அதன் வளர்ச்சியாக நுண்செயலி பயன்படுத்தும் செயற்கை கால்களை இஸ்ரோ தயாரித்துள்ளது.
உலகில் மொத்தம் 20,000,000,000,000,000 எறும்புகள் உள்ளதாம்.. உங்களுக்கு தெரியுமா?
புதிதாக அறிவிக்கப்பட்ட தொழில்நுட்பமானது நுண்செயலி-கட்டுப்படுத்தப்பட்ட முழங்கால்கள் (MPKs) என அழைக்கப்படுகிறது, இது நுண்செயலிகளைப் பயன்படுத்தாத செயலற்ற மூட்டுகளால் வழங்கப்படும் திறன்களை விட, ஊனமுற்றோருக்கு அதிக திறன்களை வழங்குகிறது.
ஏறக்குறைய 1.6 கிலோகிராம் எடை கொண்ட இந்த இயந்திரம் நடக்க சிரமப்படும் ஒருவருக்கு குறைந்தபட்ச ஆதரவுடன் சுமார் 100 மீட்டர் தூரம் நடக்க உதவுகிறது.
ஸ்மார்ட் MPKகள் இஸ்ரோவின் கிளை நிறுவனமான விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC), இஸ்ரோவால் லோகோமோட்டர் குறைபாடுகளுக்கான தேசிய நிறுவனம் (NILD), மாற்றுத்திறனாளிகளுக்கான தீன்தயாள் உபாத்யாயா தேசிய நிறுவனம் மற்றும் இந்தியாவின் செயற்கை மூட்டு உற்பத்திக் கழகம் (ALIMCO) ஆகியவற்றுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்படுகின்றன.
நுண்செயலி, ஹைட்ராலிக் டம்பர், லோட் & முழங்கால் கோண உணரிகள், கூட்டு முழங்கால்-கேஸ், லி-அயன் பேட்டரி, மற்றும் இடைமுக கூறுகள் ஆகியவற்றை ஸ்மார்ட் மூட்டுகள் கொண்டுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நாய் வயிற்றில் பிறந்த ஓநாய்.. சீன விஞ்ஞானிகள் சாதனை..
இது சென்சார் தரவின் அடிப்படையில் நடையின் நிலையைக் கண்டறியும். கட்டுப்பாட்டு மென்பொருள் கணினியின் விறைப்பை மாற்றுவதன் மூலம் விரும்பிய நடையை அடைவதற்குத் தேவையான நிகழ்நேரத் தணிப்பை இந்த இயந்திரம் மதிப்பிடுகிறது.
தற்போது கிடைக்கும் செயற்கை மூட்டுகளின் விலை ரூ.10-60 லட்சமாக உள்ளது. புதிய தொழில்நுட்ப இயந்திரத்தின் விலை அதில் பத்தில் ஒரு பங்கு, அதாவது சுமார் ரூ.4-5 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ISRO