இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வரும் ஆண்டுகளில் பல மில்லியன் டாலர் சந்தையாக மாற உள்ள விண்வெளி சுற்றுலா திறனை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
லோ எர்த் ஆர்பிட் (LEO) எனப்படும் கீழடுக்கு வான்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உதவும் கலன்களை சோதித்து வருவதன் மூலம் விண்வெளி சுற்றுலாவை நோக்கி உள்நாட்டு திறன்களை மேம்படுத்தும் பணியில் விண்வெளி நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இஸ்ரோ தற்போது உலகின் 61 நாடுகளுடன் இணைந்து விண்வெளி ஆய்வுகளின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
கடல் மாசுவை சுத்தம் செய்ய மைக்ரோ பிளாஸ்டிக்கை உண்ணும் ரோபோ மீன்... சீன விஞ்ஞானிகள் அசத்தல்
விண்வெளி சுற்றுலா சந்தை கடந்த இரண்டு ஆண்டுகளில் தனியார் விண்வெளி நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. எலோன் மஸ்க் நிறுவிய SpaceX விண்வெளி சுற்றுலா சந்தையில் முன்னணியில் உள்ளது. அதன் டிராகன் விண்கலம் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் சுற்றுலா விமானங்களில் மக்களை அழைத்துச் செல்கிறது. அதோடு, ஜெஃப் பெசோஸ் தலைமையிலான ப்ளூ ஆரிஜின் அதன் நியூ ஷெப்பர்ட் விண்கலம் மேற்கு டெக்சாஸில் இருந்து பயணிகளுடன் விண்வெளிக்கு சுருக்கமான 10 நிமிட பயணதிற்காக ஏவப்படுகிறது.
இஸ்ரோ தனது முதல் மனித விண்வெளிப் பயணத்தை ககன்யான் மிஷனுடன் நடத்தத் திட்டமிட்டுள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ககன்யான் குழுமமானது, இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று பூமிக்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்பும் முதல் உள்நாட்டு விண்கலமாகும்.
நிலவுக்கும் செவ்வாய்க்கும் புல்லட் ரயில்விடும் ஜப்பான் !
இஸ்ரோ இந்த ஆண்டு மே மாதம் தன் முதல் விண்வெளிப் பயணத்திற்கு சக்தி அளிக்கும் பூஸ்டர்களின் தீ சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. நான்கு இந்திய விமானப்படை அதிகாரிகள் பணிக்காக தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஏவுகணை வாகன உந்துவிசை நிலைகளின் தரைத் தகுதிச் சோதனைகளும் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக முன்னேறி வருகின்றன.
இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPAce) விண்வெளி சுற்றுலாவை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தனியார் துறையின் தீவிர பங்களிப்பை ஊக்குவிக்க முயல்கிறது. இஸ்ரோ மையங்களில் உள்ள தொழில்நுட்ப வசதிகள் மற்றும் நிபுணத்துவத்தை தனியார் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வழிமுறைகளை இன்-ஸ்பேஸ் கொண்டு வரும் என்று அறிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Elon Musk, Gaganyan, Indian space research organisation, Space, Spacecraft, Tourism