சந்திரயான் 2 குறித்து புதிய தகவல்..... இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்

சந்திரயான் 2 ஆர்பிட்டரின் ஆயுட்காலம் ஏழரை ஆண்டுகள் என புதிய தகவலை இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்

news18
Updated: September 8, 2019, 7:20 AM IST
சந்திரயான் 2 குறித்து புதிய தகவல்..... இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்
இஸ்ரோ தலைவர் சிவன் (கோப்புப் படம்)
news18
Updated: September 8, 2019, 7:20 AM IST
சந்திரனை நெருங்கியதும் தகவல் தொடர்பு நின்று போன லேண்டர் விக்ரமுடன் தொடர்பை ஏற்படுத்த அடுத்த 14 நாட்கள் தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் 2 குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில், சந்திரயான் 2 ஆர்பிட்டரின் ஆயுட்காலம் ஏழரை ஆண்டுகள் என புதிய தகவலை கூறியுள்ளார். முதலில் ஓராண்டுக்கு மட்டுமே ஆயுட்காலம் திட்டமிட்டிருந்தோம். சந்திரயான் 2 ஆர்பிட்டரில் எரிபொருள் கூடுதலாக உள்ளது. அதனால் அது ஏழரை ஆண்டுகள் செயல்படும் மேலும் இதில் மிக நவீன கேமரா உள்ளது. இந்த கேமரா ஏழு ஆண்டுகள் வலம் வந்து நிலவு முழுவதையும் தெளிவாக படம்பிடிக்கவல்லது என்று கூறினார்

மேலும் சந்திரனின் தரைக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் தொடர்பு துண்டிக்கப்பட்ட லேண்டர் விக்ரமை தொடர்புகொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள லேண்டருடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்த அடுத்த 14 நாட்கள் முயற்சிப்போம்.இணைப்பு கிடைத்தால் அதன் பிறகு வழக்கமான ஆய்வுப் பணிகள் மகிழ்ச்சியுடன் தொடங்கப்படும் என்றார்.


மேலும் சந்திரயான் 2 பொருத்தவரை கிட்டத்தட்ட 100 சதவீத வெற்றி கிடைத்திருக்கிறது. 30 கிலோ மீட்டரில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம் வரை சென்றோம். கடைசி கட்டத்தில் மட்டுமே சிக்கல் ஏற்பட்டது. இதை 95 சதவீத வெற்றி எனலாம். மொத்தத்தில் கிட்டத்தட்ட 100 சதவீத வெற்றியை எட்டிவிட்டோம் என்று கூறலாம் சந்திரயான் 2 சிக்கலால் பணிகள் பாதிக்கப்படவில்லை. பிரதமரின் நம்பிக்கையான வார்த்தைகளால் அடுத்த கட்ட ஏவுதல்களுக்கு இஸ்ரோ தயாராகி வருகிறது என்றார் சிவன்

Also watch

First published: September 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...