Home /News /technology /

உங்களிடம் இருக்கும் 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி சேவைகள் பயன்படுத்த முடியுமா?

உங்களிடம் இருக்கும் 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி சேவைகள் பயன்படுத்த முடியுமா?

உங்கள் போனில் 5ஜி பயன்படுத்தமுடியுமா?

உங்கள் போனில் 5ஜி பயன்படுத்தமுடியுமா?

நாளுக்கு நாள் மாற்றம் அடைந்து வரும் அலைவரிசை பயன்பாட்டிற்கு ஏற்ப உங்கள் போனில் வசதிகள் உள்ளனவா?

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    தொழில்நுட்பம் எந்த அளவுக்கு தொடர்ந்து முன்னேறி வருகிறது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இணையம் தகவல் தொடர்பு சார்ந்த வளர்ச்சியாகும். ஒரு மாதத்திற்கு 100 MB இன்டர்நெட் பயன்பாடு என்ற காலம் மாறி, ஒரு நாளைக்கு GB கணக்கில் குறைந்தபட்சம் இன்டர்நெட் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு தொழில்நுட்ப சேவைகள் வளர்ந்துள்ளன.

    அதே போல, நெட்வொர்க் நிறுவனங்களும் மாறி வரும் தேவைகளுக்கு ஏற்ப சேவைகளை வழங்கி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பிராசஸ் செய்யப்பட்டு வந்த அதிவேக நெட்வொர்க் சேவையான 5ஜி ஏலம் நிறைவடைந்து, இன்னும் சில நாட்களில் அமல்படுத்தப்பட இருக்கிறது.

    5ஜி சேவைகள் பயன்பாட்டுக்கு வரும் முன்னரே, அதற்கான மொபைல் போன்கள் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகி விட்டன. பெரும்பாலான முன்னணி மொபைல் பிராண்டுகள், 5G சப்போர்ட் உள்ள ஸ்மார்ட்ஃபோன்களை வழங்கி வருகின்றன. ஆனால், இந்தியாவில் விரைவில் அறிமுகமாக இருக்கும் 5G சேவைகளை உங்களிடம் இருக்கும் 5ஜி ஸ்மார்ட்போனில் பயன்படுத்த முடியுமா?

    5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களுமே கலந்து கொண்டது. 5G ஸ்பெக்ட்ரம் மொத்தமாக 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. எல்லா நெட்வொர்க் நிறுவனமும் ஒரு குறிப்பிட்ட 5G அலைவரிசையை ஏலம் எடுத்துள்ளது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    * ஜியோ நெட்வொர்க் 86,000 கோடி ரூபாய்க்கு 5G யின் பிரீமியம் அலைவரிசையான 700MHZ ஐ ஏலம் எடுத்துள்ளது
    * ஏர்டெல் நிறுவனம் 43,000 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது
    * மொத்தம் 12 அலைவரிசையில், ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட அலைவரிசைகளை (bandwidth) ஏலத்தில் எடுத்தன.

    இதுவரை, ரியல்மி, சியோமி சாம்சங், மோட்டோ, நத்திங் உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த ஆண்டு முதலே 5G போன்களை விற்பனை செய்து வருகின்றன. தற்போது, ஒன் ப்ளஸ் நிறுவனமும் 5G ஸ்மார்ட்ஃபோன்களை பண்டிகை கால அறிமுகமாக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

    5G சேவை எவ்வளவு விரைவாக மற்றும் எவ்வளவு தொலைவு வரை கிடைக்கிறது என்று வெவ்வேறு அலைவரிசையில் 5G இயங்குகிறது.n28, n5, n8 ஆகிய மூன்று அலைவரிசையுமே குறைவான ஸ்பெக்ட்ரம் கொண்டவையாகும். இது 5Gன் வேகத்தை விட கொஞ்சம் குறைவாக இருக்கும், ஆனால் 4G வேகத்தை விட அதிகமாக இருக்கும்.

    n3, n1, n41, n78, n77 ஆகிய ஐந்து அலைவரிசை, மிதமான வேகம் கொண்ட ஸ்பெக்ட்ரம். இதன் மூலம் 5G சேவைகள் வேகமாகவும், அதிக இடத்துக்கும் கவரேஜும் கிடைக்கும்.

    mmWave என்ற அலைவரிசை 5G சேவைகளில் ப்ரீமியம் வகையாகும். இது அதிவேக மற்றும் உயர் தரமான ஸ்பெக்ட்ரம், ஆனால் இந்த சேவை குறைவான பகுதிகளில் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    நீங்கள் வசிக்கும் இடம், உங்கள் 5G ஸ்மார்ட்போனில் குறிப்பிடப்பட்டிருக்கும் 5G அலைவரிசை விவரங்களை வைத்து, இந்தியாவில் உள்ள 5G சேவையை பயன்படுத்த முடியுமா முடியாதா என்பதை வரையறுக்க முடியும்.

    உங்கள் 5G ஸ்மார்ட்ஃபோன், 5G சிப்செட்டுடன் இணைக்கப்பட்டிருந்தால், இந்தியாவில் ஏலம் விடப்பட்ட அனைத்து அலைவரிசைகளையும் பயன்படுத்த முடியும். குறிப்பாக, மேல் வரிசைப்படுத்தப்பட்ட அலைவரிசைகளில் உங்கள் 5G போனுக்கு நல்ல கவரேஜ் கிடைக்கும்.

    ஆனால், உங்கள் 5G போனில் என்ன பேண்ட்விட்த்தை பயன்படுத்த முடியும் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். ஏனென்றால், ஒரு சில அலைவரிசைகள் ஒரு சில இடங்களில் மட்டுமே முழுமையான கவரேஜ் வழங்குகிறது. உதாரணமாக, நீங்கள் நகரத்துக்கு வெளியே, இரண்டாம் நிலை நகரங்களில் வசித்தால், உங்களுக்கு 5G கவரேஜ் முழுமையாகக் கிடைக்காது. நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஓரிரு பேண்டுகள் நன்றாக கவரேஜ் கிடைக்கும்.

    உங்கள் ஃபோனில் எந்த 5G பேண்டைப் பயன்படுத்த முடியும் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். நீங்கள் வாங்கிய 5G போனின் பாக்ஸில், அதைப் பற்றிய விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் அல்லது நீங்கள் பயன்படுத்தும் மொபைல் என்ன பிராண்டோ, அதன் அதிகாரபூர்வமான வலைத்தளத்துக்கு சென்று, உங்கள் போன் மாடலில் எந்த 5G அலைவரிசை பயன்படுத்த முடியும் என்பதை பார்க்கலாம்.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: 5G technology, Mobile Data

    அடுத்த செய்தி