முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / மிகவும் ஸ்லோவாக இயங்கும் உங்கள் கம்ப்யூட்டரை ஸ்பீடாக்குவதற்கான டிப்ஸ்கள்!

மிகவும் ஸ்லோவாக இயங்கும் உங்கள் கம்ப்யூட்டரை ஸ்பீடாக்குவதற்கான டிப்ஸ்கள்!

 உங்கள் கம்ப்யூட்டரை ஸ்பீடாக்குவதற்கான டிப்ஸ்

உங்கள் கம்ப்யூட்டரை ஸ்பீடாக்குவதற்கான டிப்ஸ்

உங்கள் கம்ப்யூட்டரின் செயல்திறனை அதிகரிக்க ஹார்ட் டிரைவை இன்னும் அதிக ஸ்பேஸ் உடையதாக மாற்றலாம்.

  • 1-MIN READ
  • Last Updated :

கம்ப்யூட்டரில் ஆர்வமுடன் வேலை செய்து கொண்டிருக்கும் போதோ, முக்கியமான டாக்குமெண்ட்ஸ்களை பார்த்து கொண்டிருக்கும் போதோ அல்லது வீடியோக்களை பார்த்து ரசித்து கொண்டிருக்கும் போதோ மிகவும் வெறுப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு கம்ப்யூட்டர் திடீரென ஸ்லோவாக வேலை செய்வது அல்லது ஹேங் ஆவது.

இதற்கு பல்வேறு காரணிகள் இருந்தாலும் பயன்படுத்தாத ப்ரொக்ராம்கள் மற்றும் தேவையற்ற ப்ராசஸ்கள் அதிகமாக இருப்பது உங்கள் கம்ப்யூட்டருக்கு அதிக ஆற்றல் தேவைகளை ஏற்படுத்துகிறது. கம்ப்யூட்டரின் ஸ்பீடை அதிகரிக்கும் முயற்சிகளில் ஹார்ட் டிரைவில் இருக்கும் ஸ்பேஸை அதிகரிக்க செய்வது அல்லது RAM கெப்பாசிட்டியை அதிகரிப்பது உள்ளிட்டவை சாத்தியமான தீர்வுகள். இந்தப் பிரச்சனையை சரி செய்ய இருக்கும் வழிகள் பற்றி பார்க்கலாம்.

RAM கெப்பாசிட்டியை எப்போது அதிகரிக்கலாம்?

உங்கள் கம்ப்யூட்டரின் குறுகிய கால டேட்டா சென்டராக செயல்படுகிறது அதிலிருக்கும் RAM. எனவே அதன் ஸ்பேஸ் அதிகமாக பயன்படுத்தப்பட்டால் கம்ப்யூட்டர் ஸ்லோவாக செயல்படும். RAM கெப்பாசிட்டியை நீங்கள் அதிகரிக்க வேண்டுமா என்பதை முதலில் முடிவு செய்ய Ctrl + Shift + Esc ஐ அழுத்தி task manager-க்கு சென்று அதில் performance கிளிக் செய்து பின்னர் Memory-க்கு செல்லுங்கள்.

உங்கள் கம்ப்யூட்டர் 8 ஜிபி ரேம் கொண்டிருந்தால் பொதுவாக வேகமான பிரவுஸிங் மற்றும் மல்டி டாஸ்கிங் வழங்க போதுமானது. கேம்களை அதிகமாக விளையாடுகிறீர்கள் என்றால் அதற்கேற்ப நீங்கள் உங்கள் RAM-ஐ 16 ஜிபிக்கு அப்கிரேட் செய்து கொள்ளுங்கள். உங்கள் கம்ப்யூட்டர் சப்போர்ட் செய்தால் 32 ஜிபி கூட அப்கிரேட் செய்து கொள்வது நல்லது. லேப்டாப்பை விட பர்சனல் கம்ப்யூட்டரில் இருக்கும் RAM-ஐ மாற்றுவது எளிதான பணியாக இருக்கும்.

கம்ப்யூட்டர் ஸ்பேஸை எப்படி அதிகரிப்பது?

உங்கள் கம்ப்யூட்டரின் செயல்திறனை அதிகரிக்க ஹார்ட் டிரைவை இன்னும் அதிக ஸ்பேஸ் உடையதாக மாற்றலாம். அல்லது நீங்கள் அதிகம் பயன்படுத்தாத அல்லது உங்களுக்கு பயனில்லாத ப்ரொக்ராம்களை கம்ப்யூட்டரில் இருந்தே தூக்கி விடலாம். இதற்காக நீங்கள் Control Panel-க்கு சென்று Add or Remove Programs என்ற ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும். கம்ப்யூட்டரில் உங்களுக்குத் தேவையில்லாத ஏதேனும் ஃப்ரீவேர் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை பார்க்க "first installed" என்ற sort filter உதவியாக இருக்கும். கம்ப்யூட்டரை ஆன் செய்தவுடன் இயங்கும் தேவையற்ற ப்ரோகிராம்களை நீக்கிவிட்டால், கம்ப்யூட்டரின் ஆன் டைமை குறைக்க உதவும்.

வைரஸ்கள் மற்றும் மால்வேர்ஸ் இருக்கிறதா என சரி பாருங்கள்:

வைரஸ்கள் மற்றும் மால்வேர்கள் உங்கள் கம்ப்யூட்டரை மேலும் ஸ்லோவாக்கி விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே வைரஸ்கள் மற்றும் மால்வேர்ஸ் மூலம் உங்கள் கம்ப்யூட்டர் பாதிக்கப்படாமல் இருக்க, நீங்கள் அதற்கு கட்டாயம் antivirus protection-ஐ அளிக்க வேண்டும். உங்கள் சிஸ்டமில் வைரஸ் இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால் சற்றும் தாமதிக்காமல் ஆன்லைனில் இலவசமாக அல்லது பணத்திற்கு கிடைக்கும் நம்பகமான ஆன்டிவைரஸ் ஸ்கேனர் மற்றும் ரீமூவல் டூலை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்கள்.

டிரைவர்ஸ் அப்டேட் :

உங்கள் சிஸ்டமுடன் இணைக்கப்படும் கீபோர்ட், மவுஸ் உள்ளிட்ட ஒவ்வொரு டிவைஸும் செயல்பட டிரைவர் (driver) தேவைப்படுகிறது. இந்த drivers-ல் அப்டேட் வரும்போது அதை கவனித்து சரியாக செய்து விட வேண்டும். இல்லை என்றால் குறிப்பிட்ட டிவைஸ்கள் சரியாக செயல்படாமல், கம்ப்யூட்டரை ஸ்லோவாக்கி விடும்.

டெம்ப்ரவரி ஃபைல்ஸை கிளியர் செய்யவும் :

கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பிரவுஸரில் இருக்கும் டெம்ப்ரவரி ஃபைல்ஸை கிளியர் செய்வது அவற்றை ஸ்பீடாக்க உதவும் எளிய வழிகள். உங்கள் சிஸ்டமில் இருக்கும் தற்காலிக சேமிப்பை கிளியர் செய்ய ஸ்டார்ட் மெனுவில் காணப்படும் Disk Cleanup ஆப்ஷனை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

First published:

Tags: Computer