ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

வணிக செயல்பாடுகளை இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு மாற்றப்போகிறதா Xiaomi நிறுவனம்.? உண்மை என்ன.!

வணிக செயல்பாடுகளை இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு மாற்றப்போகிறதா Xiaomi நிறுவனம்.? உண்மை என்ன.!

MI

MI

Xiaomi | சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி நிறுவனம் தனது வர்த்தக செயல்பாடுகளை இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு மாற்ற போவதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி நிறுவனம் தனது வர்த்தக செயல்பாடுகளை இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு மாற்ற போவதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பான போஸ்ட் பிரபல சோஷியல் மீடியாவான ட்விட்டரில் வைரலாகியது.

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) விதிகளை மீறியதாக கூறி, இந்திய அதிகாரிகளால் சியோமி நிறுவனத்தின் கோடிக்கணக்கான நிதி அண்மையில் முடக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Xiaomi, இந்தியாவில் தனது வர்த்தக செயல்பாடுகளை நிறுத்தி விட்டு நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு மாற்ற உள்ளதாக வெளியான தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டது.

இந்த தகவல் உண்மையா அல்லது பொய்யா என்ற குழப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில் தங்களது செயல்பாடுகள் பாகிஸ்தானுக்கு மாற்றப்படும் என்று வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையல்ல என்று Xiaomi நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்த தகவலுக்கு சமீபத்தில் Xiaomi தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட்டில் இருந்து பதிலளித்தது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்க இயக்குனரகத்தால் Xiaomi-யின் கிட்டத்தட்ட ரூ.5,500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டது. நிறுவனம் ராயல்டி செலுத்துவதற்காக சட்டவிரோதமாக பணத்தை வெளிநாட்டுக்கு மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட நிதியை விடுவிக்க கோரிய மேல்முறையீட்டை கர்நாடகா உயர் நீதிமன்றம் சமீபத்தில் நிராகரித்தது. இருப்பினும் எந்த தவறும் செய்யவில்லை என்று Xiaomi மறுத்துள்ளது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த சூழலில் தான் Xiaomi இந்தியாவில் இருந்து தனது வர்த்தக செயல்பாடுகளை நிறுத்தி கொண்டு, பாகிஸ்தானிற்கு செல்ல உள்ளதாக தகவல் பரவியது.

Also Read : ரூ.15,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் பட்டியல்.! 

இந்தநிலையில் குறிப்பிட்ட ட்வீட்டிற்கு பதில் அளித்துள்ள நிறுவனம், " இந்த தகவல் முற்றிலும் பொய்யானது மற்றும் ஆதாரமற்றது" என கூறி இருக்கிறது. மேலும் விளக்கம் அளித்துள்ள Xiaomi, 'கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்திய மார்க்கெட்டில் நுழைந்த பிறகு, அரசின் மேக் இன் இந்தியா முயற்சியில் தாங்களும் இணைந்ததாக கூறியுள்ளது. தொடர்ந்து நிறுவனத்தின் 99 சதவீத ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் அனைத்து டிவி மாடல்களும் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட்டன. தவறான மற்றும் துல்லியமற்ற குற்றச்சாட்டுக்களை பொய்யாக்கி எங்கள் நற்பெயரைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்' என்று கூறி இருக்கிறது.

Also Read : நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் கேமிங் மானிட்டர் - விலை, அம்சங்கள்.!

இதனிடையே Xiaomi india-வின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், நிறுவனத்தின் வணிக செயல்பாடுகளை இந்தியாவிலிருந்து வேறு நாட்டிற்கு மாற்றுவதாக வெளியாகும் எந்தவொரு அறிக்கையும் முற்றிலும் யூகங்கள் அல்லது வதந்திகளே தவிர உண்மையல்ல. எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டுகளுக்கு சட்ட ரீதியாக தீர்வு காண்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தவோம் என்று கூறி இருக்கிறார்.

Published by:Selvi M
First published:

Tags: India, Technology, Xiaomi