ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஆண்ட்ராய்டு போனை அப்டேட் செய்வதில் இவ்வளவு விஷயம் உள்ளதா?

ஆண்ட்ராய்டு போனை அப்டேட் செய்வதில் இவ்வளவு விஷயம் உள்ளதா?

மாதிரி படம்

மாதிரி படம்

சமீபத்திய புதிய ஆண்ட்ராய்டு அப்டேட்டுகளில், ஆண்ட்ராய்டு யூஸர்கள் பலருக்கும் இந்த யூசர் இன்டர்பேஸில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • New Delhi, India

நம்மில் பலருக்கு ஆண்ட்ராய்டு (Android) இயங்குதளத்தில் வரும் புதிய அப்டேட்டுகளை பற்றிய முழு விவரங்கள் தெரிவதில்லை. புதிதாக வெளியிடப்படும் அப்டேட்டுகளை எதற்காக நாம் டவுன்லோடு செய்ய வேண்டும். அவற்றினால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் பார்ப்போம்.

நீண்ட காலமாகவே ஆண்ட்ராய்டு இயங்கு தளத்திற்கும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓஎஸ் இயங்குதளத்தில் இயங்கும் மொபைல்களுக்கும் மிகப் பெரும் போட்டி நடந்து வருகிறது. ஒவ்வொரு முறை ஐஓஎஸ் இயங்குதளத்தை பற்றி யாரேனும் பெருமையாக பேசும் போதெல்லாம் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் கிடைக்கும் துரித அப்டேட்டுகளும், அதன் இதர வசதிகளையும் ஆண்ட்ராய்டு யூசர்கள் மேற்கோள் காட்டுவார்கள். எதற்காக ஆண்ட்ராய்டு மொபைல்களில் மட்டும் அடிக்கடி அப்டேட்டுகளை வெளியிடுகிறது என்றும் அதனால் நமக்கு என்ன பயன் உண்டு என்றும் அதிகம் பேர் யோசிப்பதில்லை.

ஒவ்வொரு அப்டேட்டின் போதும், குறிப்பிட்ட அந்த ஆண்ட்ராய்டு வெர்ஷனில் உள்ள சில குறைகள் சரி செய்யப்பட்டும், ஏற்கனவே இருக்கும் வசதிகளை இன்னும் மெருகேற்றியும் புதிய அப்டேட் வெளியிடப்படுகிறது. மேலும் ஹேக்கர்களிடமிருந்து அடிக்கடி வரும் மால்வேர்களிலிருந்து தப்பிக்க சில பாதுகாப்பு காரணங்களுக்காகவும் செக்யூரிட்டி அப்டேட்ஸ் கொடுக்கப்படுகிறது. ஒருவேளை நீங்கள் உங்கள் மொபைலை புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்யாமல், பழைய வெர்ஷனிலேயே இயங்க வைத்துக் கொண்டிருந்தால் மிக எளிதில் வைரஸ் தாக்குதலுக்கும், ஹேக்கர்களின் தாக்குதலுக்கும் நீங்கள் ஆளாக கூடும்.

எதற்கு நம்முடைய ஆண்ட்ராய்டு மொபைலை அப்டேட் செய்ய வேண்டும்:

சில பாதுகாப்பு குறைபாடுள்ள செயலிகளை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் நாம் பயன்படுத்தும் போது, அவை உங்கள் தகவல்களை வாழ்நாள் முழுவதும் சேமித்து வைப்பதற்கும் வேண்டுமென்ற நேரத்தில் அவற்றை பயன்படுத்துவதற்கும் ஆண்ட்ராய்டின் முந்தைய வெர்ஷன்களில் அனுமதி இருந்தது. ஆண்ட்ராய்டு 10.௦ வருவதற்கு முன் வரை இந்த வசதி நடைமுறையில் இருந்தது. அதன் பிறகு வெளியான ஆண்ட்ராய்டு 11 வெர்ஷனில் ஒரு செயலியை நீங்கள் எப்போது விரும்புகிறீர்களோ அப்போது மட்டும் உங்களுடைய தகவல்களை பார்ப்பதற்கும், அவற்றை பயன்படுத்துவதற்கும் அனுமதிக்கும் வசதியை அறிமுகப்படுத்தப்பட்டது.

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு செயலியை பயன்படுத்தும் போது அது உங்களிடம், உங்கள் தகவல்களை பயன்படுத்த அனுமதி கோறினால், நீங்கள் தற்காலிகமாக உங்கள் தகவலை பார்க்க அனுமதிக்க “only this time” என்ற தேர்வை பயன்படுத்தலாம். மேலும் உங்கள் வைஃபையை (Wifi) பயன்படுத்தி நீங்கள் இருக்கும் இடத்தை கண்டறியும் வசதிகளிலும் சில மாற்றத்தை ஏற்படுத்தி ஆண்ட்ராய்டு 13 வெர்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் இருக்கும் ஆண்ட்ராய்டு வெர்ஷன்களுடன், பழைய ஆண்ட்ராய்டு வெர்ஷன்களை ஒப்பிட்டு பார்த்தோமென்றால் அதில் பல பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை நாம் கண்டறியலாம். இதனால் தான், நாம் அடிக்கடி நம்முடைய ஆண்ட்ராய்டு வெர்சனை, புதிய வெர்ஷனுக்கு அப்கிரேட் செய்ய வேண்டும். மேலும் தற்போது இருக்கும் வெர்ஷனில் ஏதேனும் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டாலும், கூகுள் நிறுவனம் அதனை சரிப்படுத்தி உடனடியாக வேறொரு புதிய பேட்ச் (patch) கொண்ட அப்டேட்டை வெளியிட்டு விடும்.

செயல்திறன்:

ஆண்ட்ராய்டு 12 வெர்ஷனில் அதன் செயல் திறனை மேம்படுத்தும் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு ஆண்ட்ராய்டின் முக்கிய அம்சங்களை பயன்படுத்துவதற்கு, அதன் சிபியு (CPU) எடுத்துக் கொள்ளும் நேரமானது 22% சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நாம் பயன்படுத்தும் செயலிகள் அதிவேகத்துடன் இயங்குவது மட்டுமல்லாமல், நம் மொபைலின் ஒட்டு மொத்த செயல்திறனுமே வேகமாகவும், அதே சமயத்தில் ஸ்மூத்தாகவும் இருப்பதை உணர முடியும்.

பயனர் இடைமுகம் ( User Interface)

கூகுளின் மிக முக்கிய அம்சமாக இந்த யூசர் இன்டர்பேஸ் என்ற உள்ளது. ஆனால் சமீபத்திய புதிய ஆண்ட்ராய்டு அப்டேட்டுகளில், ஆண்ட்ராய்டு யூஸர்கள் பலருக்கும் இந்த யூசர் இன்டர்பேஸில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. என்னதான் நம் விருப்பத்திற்கு ஏற்றபடி சில டிசைன்களை நம்மால் மாற்றி அமைக்க முடிந்தாலும், கூகுளினால் அளிக்கப்படும் சில டீஃபால்ட் டிசைன்களை நம்மால் மாற்ற முடியாது. முக்கியமாக ஆண்ட்ராய்டின் நோட்டிபிகேஷன் வடிவத்தில் செய்த மாற்றத்தை எந்த ஆண்ட்ராயிட் யூசரும் விரும்பவில்லை. அதே நேரத்தில் யூசர்களுக்கு பிடித்தது போல் சில அம்சங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு தற்போதுள்ள புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷனில், செயலிகளின் ஐகான் நிறமானது நம்முடைய போன் வால்பேப்பருக்கு ஏற்பது போல் மாறிக்கொள்ளும்.

10,000 ஊழியர்களை நீக்க முடிவு.. பணிநீக்க ட்ரெண்டில் இணையும் கூகுள்.. ஷாக்கில் ஊழியர்கள்!

மொபைலை எப்படி லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்வது :

நீங்கள் உங்கள் மொபைலில் வாங்கி இரண்டிலிருந்து மூன்று வருடங்கள் வரை தான் இருக்கும் எனில் அதில் லேட்டஸ்ட் சாஃப்ட்வேர் அப்டேட் சப்போர்ட் ஏற்கனவே இருக்கும். ஆனால் முன்னர் வெளியான ஆண்ட்ராய்டு மொபைல்களில் மிக சொற்பமான அப்டேட்டுகளே கொடுக்கப்பட்டிருந்தது. முன்னர் வெளியான சில ஆண்ட்ராய்டு மொபைல்களில் 5 வருடத்திற்கான செக்யூரிட்டி அப்டேட் மற்றும் 4 ஆண்ட்ராய்டு சிஸ்டம் அப்டேட்டும் கொடுக்கப்பட்டிருக்கும்.

சாம்சங் (Samsung) மொபைல் எப்படி அப்டேட் செய்வது :

ஆண்ட்ராய்டு மொபைல்களின் அரசன் என்றும் சில நேரங்களில் கூகுளையே பின் தள்ளி புதிய அப்டேட்டுகளுடன் அசர வைக்கும் சாம்சங் நிறுவனத்தின் அப்டேட் வெளியிடும் விதம் ஒவ்வொரு மாடல் மற்றும் அதன் one ui வெர்ஷனை பொருத்து மாறுபடுகிறது

Settings > Software update > Download and install

Settings > About device > Software update > Update now

Settings > About device > Software update > Download and install

Settings > Software update > Download updates manually

சாதாரணமாக சாம்சங் மொபைலில் புது அப்டேட்டுகள் வரும்போது, நீங்கள் ஆட்டோ அப்டேட்டை ஆண் செய்து வைத்திருந்தால் அவை தானாகவே உங்களுக்கு நோட்டிபிகேஷன் மூலம் தெரிவிக்கப்படும். ஒருவேளை அவ்வாறு தெரிவிக்கவில்லை எனில் எனில் நீங்கள் மேலே கொடுத்துள்ள ஆப்ஷன்களில் சென்று அதனை தேர்வு செய்து கொள்ளலாம்.

நுகர்வோரின் தரவில் பாதுகாப்பு இல்லை என்றால் ரூ 200 கோடி வரை அபராதம்!

சியோமி (Xiaomi) போன்:

தற்போது வரும் சியோமி மொபைல்களில் 3 வருடங்களுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி தரப்படுகிறது. உங்கள் மொபைலுக்கு புதிய அப்டேட்டை செக் செய்ய

Settings > About phone > MIUI version > Check for updates என்ற ஆப்ஷனில் சென்று அப்டேட் செய்து கொள்ளலாம் அல்லது உங்கள் மொபைலிலேயே இருக்கும் இன்ஸ்டால் ஆட்டோமேட்டிக்கலி (Install Automatically) மற்றும் டவுன்லோட் ஆட்டோமேட்டிக்கலி (Download Automatically) என்ற ஆப்ஷனை தேர்வு செய்து வைத்துக் கொள்வதன் மூலம் ஆட்டோமேட்டிக் அப்டேட்டை பெறலாம்.

ஒன் பிளஸ் மொபைல் (One Plus):

ஒன் பிளஸ் நிறுவனம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆக்ஸிஜன் ஓஎஸ் 13 (Oxygen OS 13) வெர்ஷனை சில மொபைல்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

Settings > System > System Updates இந்த ஆப்ஷனுக்கு சென்று உங்கள் மொபைலை அப்டேட் செய்து கொள்ளலாம்.

ஒப்போ மற்றும் விவோ மொபைல்கள் (Oppo and Vivo) :

ஓப்போ மொபைல் போன்களில் கலர் ஓ எஸ் (Colour OS) மற்றும் விவோ மொபைல் போன்களில் ஃபன்டச் ஓஎஸ் (Funtouch os) பயன்படுத்தப்படுகிறது.

Settings > Software update

இவை இரண்டிற்கு மேலே கூறியுள்ள இந்த ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் அப்டேட் செய்து கொள்ளலாம்.

ரியல் மி:

ரியல் மீ யு ஐ 3.0 (Realme U.I 3.0) இல் இருப்பவர்கள் settings> about devices endra ஆப்ஷனுக்கு சென்று click upto date என்பதைதேர்வு செய்வதின் மூலம் நீங்கள் அப்டேட் செய்யலாம்.

மற்றும் 2.0 யூசர்கள் settings> software updates என்ற ஆப்ஷனுக்கு சென்று அப்செட் செய்யலாம்.

மோட்டோரோலா போன் (Motorola)

மோட்டரோலா யூஸர்கள் மிக எளிதாக, செட்டிங்கிற்கு சென்று அங்குள்ள சிஸ்டம் அப்டேட்ஸ் என்ற ஆப்ஷனை செயல்படுத்துவதன் மூலம் அப்டேட்டை பெறலாம்.

Settings>System updates என்ற ஆப்ஷனுக்கு சென்று அப்டேட் செய்ய வேண்டும்.

Published by:Srilekha A
First published:

Tags: Android, Mobile phone