வனத்தில் அவ்வப்போது புதிதாக ஏதாவது தென்படும் அதன் வானியல் உலகின் ஒரு புதிய அதிசயம் வெளிப்படும் . ஜனவரி 18 அன்று இரவு வானில் எப்போதும் நட்சத்திரங்கள் மட்டும் அல்லது புதிய ஒரு ஒளியும் தென்பட்டுள்ளது.
அந்த சுழல் வடிவ நீல ஒளியை ஹவாயில் உள்ள மௌனா கீ வான்காணகத்தில் உள்ள கண்காணிப்பு மையத்தால் இயக்கப்பட்ட சுபாரு-அசாஹி ஸ்டார் கேமராவால் படம் பிடித்தனர். வானியலாளர்கள் அந்த வித்தியாச நிகழ்வை ட்விட்டர் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்களிலும் பதிவிட்டனர்.
தொலைநோக்கியில் பதிவு செய்யப்பட்ட அந்த டைம்லேப்ஸ் வீடியோவின் இடது மூலையில் ஒரு பிரகாச ஒளி புள்ளியைப் போல சுழல்வதைக் காட்டியது. விரைவிலேயே புள்ளி ஒரு வில் போன்ற அம்சத்தை வெளியேற்றி, வானத்தில் ஒரு சுழலாக வளர்ந்து சற்று பெரியதாக மாறியது.
அதை பார்த்த அனைவரும் சுழலும் அந்த ஒளி என்னவாக இருக்கும் என்று சிந்தித்து வருகின்றனர். வேற்று கிரக வாசிகள் அனுப்பிய விண்கலம் முதல் பிரபஞ்சத்தின் மற்றொரு பால்வெளி மண்டலம் வரை தங்களது கற்பனைக்கு எட்டிய அனைத்து பதில்களையும் இணையத்தில் பகிர்ந்து வந்தனர் .
உண்மை என்ன?
அதே நாளில் அமெரிக்க விண்வெளிப் படைக்கு உதவும் உலகளாவிய நிலைப்படுத்தல் செயற்கைக்கோளை (ஜிபிஎஸ்) ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஃபால்கன் 9 என்ற விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது. அது அனுப்பிய சிறிது நேரத்திற்குப் பிறகு, ஹவாயில் இருந்து சுபாரு தொலைநோக்கி மூலம் சுழல் வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது.
சுபாரு-அசாஹி ஸ்டார் கேமரா, ஹவாய் - மௌனகேயா பகுதியின் மீது கண்டா மர்மமான பறக்கும் சுழல் இந்த ஸ்பேஸ்எக்ஸ் செயற்கைக்கோள் ஏவியதுடன்ன் தொடர்புடையதாகத் தெரிகிறது. விண்ணில் செலுத்தப்பட்ட ஃபால்கன் 9 பூமியை நோக்கி திரும்பும் போது தனது எடையை குறைப்பதற்காக தேவையற்ற எரிபொருளை வெளியேற்றும்.
இதையும் படிங்க: ஆண்டுதோறும் குறைந்துவரும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை - காரணம் இதுதான்!
அப்படி அன்றைய இரவு விண்கலத்தின் திசையை நிலைப்படுத்த, அதன் மிக நீளமான அச்சில் சுழன்று கொண்டிருந்த நேரம் வெளியிடபட்ட எரிபொருள் பூமியின் வளிமண்டலத்துடன் கலந்து வினை புரியும் போது அது சுழலும் ஒளியாக தெரிந்துள்ளது என்று Spaceweather.com என்ற இணையதளம் விளக்கியுள்ளது.
SpaceX ஒவ்வொரு வாரமும் சராசரியாக ஒரு ஏவுதலை குறைந்த புவி சுற்றுப்பாதையில் நடத்தி வருகிறது. எலான் மஸ்க் தலைமையிலான இந்த நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் பால்கன்-9 மற்றும் பால்கன்-ஹெவி ராக்கெட்டுகளின் 61 ஏவுதல்களை நடத்தியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.