Home » News » Technology » IS SIGNAL THE NEW WHATSAPP WHAT IS SIGNAL AND WHY IT IS TRENDING AFTER WHATSAPP POLICY FIASCO VIN GHTA

WhatsApp ஆப்பிற்கு மாற்றாக Signal ஆப் - திடீரென பிரபலம் ஆவது ஏன் தெரியுமா?

உங்கள் ஆண்ட்ராய்டு போன் அல்லது ஆப்பிள் ஐபோனில் (Android phone or Apple iPhone) வாட்ஸ்அப்பிற்கான இருப்பிட அணுகலை உஷாராக ஆப் செய்து வைத்திருந்தாலும், WhatsApp உங்கள் IP முகவரிகளையும் போன் எண் குறியீடுகளையும் பொதுவான ஒரு இடத்தில் சேகரித்து வைத்து பதிவு செய்கிறது.

WhatsApp ஆப்பிற்கு மாற்றாக Signal ஆப் - திடீரென பிரபலம் ஆவது ஏன் தெரியுமா?
உங்கள் ஆண்ட்ராய்டு போன் அல்லது ஆப்பிள் ஐபோனில் (Android phone or Apple iPhone) வாட்ஸ்அப்பிற்கான இருப்பிட அணுகலை உஷாராக ஆப் செய்து வைத்திருந்தாலும், WhatsApp உங்கள் IP முகவரிகளையும் போன் எண் குறியீடுகளையும் பொதுவான ஒரு இடத்தில் சேகரித்து வைத்து பதிவு செய்கிறது.
  • News18
  • Last Updated: January 11, 2021, 1:34 PM IST
  • Share this:
உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் WhatsApp ப்ரைவசி பாலிசி (Privacy Policy) மற்றும் Signal. பேஸ்புக்கிற்கு சொந்தமான பிரபல மெசேஜிங் தளம் WhatsApp (Facebook-owned WhatsApp messenger). பலராலும் பயன்படுத்தப்படும் சேவையாக இருக்கும் இது சமீபத்தில் அதன் ப்ரைவசி கொள்கைகளையும் பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாக அறிவித்தது. பேஸ்புக்கின் பிற ஆப்ஸ்கள் மற்றும் சர்வீஸ்களுடன் சில யூசர் டேட்டாவைப் பகிர்ந்து கொள்ளும் என்று கூறும் வாட்ஸ்அப் புதிய கொள்கையில் யூசர்கள் மகிழ்ச்சியடையாததால் மக்கள் அல்டர்நெட் வழியை தேடி வருகின்றனர்.

இந்த ஒரு முறை மட்டும் இப்படி தனியுரிமை கொள்கைகள் மாற்றப்படுகிறது எனப் யூசர்களுக்கு பாப்-அப் மெசேஜ் தட்டிவிட்டது வாட்ஸ்அப். இதனால் கடந்த சில நாட்களாகவே இந்த ப்ரைவசி பாலிசி அப்டேட்  மக்கள் மத்தியில் பல குழப்பங்களை எழுப்பியுள்ளது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் CEO-வும் சமீபத்தில் உலகின் டாப் பணக்காரருமாக உயர்ந்த எலான் மஸ்க் (Elon Musk) வாட்ஸ்ஆப்பிற்கு மாற்றாக சிக்னல் ஆப்பை முன்வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து பேஸ்புக் சேவைகளின் தனியுரிமை மற்றும் பிற கொள்கைகளைப் பற்றி கேள்வி எழுப்பி மஸ்க், 'Use Signal' என ட்வீட் செய்ய 'Signal Private Messenger' ஆப்பின் டவுன்லோடுகள் தற்போது எகிறியிருக்கிறது. 

அதாவது எந்த அளவுக்கு என்றால் போன் நம்பர் வெரிஃபிகேஷன் ஸ்லோவாகும் அளவுக்கு புதிய வாடிக்கையாளர்கள் சிக்னலில் இணைந்துவருகின்றனர். Signal என்பது Signal Foundation எனப்படும் இலாப நோக்கற்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸ் ஆகும். பிரைவசியை மையமாகக் கொண்ட ஒரு முக்கிய ஆப்ஸ்சாக 2014ல் Signal தொடங்கப்பட்டது. சிக்னலின் முதன்மை நோக்கமே "Say hello to Privacy." தான். சிக்னல் வாட்ஸ்அப் போன்ற எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ட்ஷன் (end-to-end encryption) உடன் வருகிறது.


மேலும் இது ஆண்ட்ராய்டு, ஐபோன், ஐபாட், விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் (Android, iPhone, iPad, Windows, Mac, and Linux) உள்ளிட்ட அனைத்து சாதனங்களுக்கும் கிடைக்கிறது. வாட்ஸ்அப் முன்னாள் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன் (Brien Acton) என்பவரால் சிக்னல் பிரைவேட் மெசஞ்சர் (Signal Private Messenger) உருவாக்கப்பட்டது. இவர் 2017ம் ஆண்டு அவர் வாட்ஸ்அப் நிறுவனத்திலிருந்து வெளியேறினார். Signal வாட்ஸ்அப்பிற்கு ஒத்த அனைத்து அம்சங்களையும் வழங்கும் ஆனால் இந்த ஆப்ஸ் Google டிரைவிலோ அல்லது iCloudடிலோ சாட்களைமீண்டும் காப்புப் பிரதி (Back up) எடுக்க அனுமதிக்காது. 

மேலும், தனிநபர்கள் தங்கள் ஒப்புதலைக் கொடுக்காவிட்டால் க்ரூப்ஸ்கள் தானாக நபர்களைச் சேர்க்க அனுமதிக்காது. அக்கவுண்ட் மற்றும் பேஸிக் ப்ரொபைல் தகவல்களை உருவாக்க எந்த மொபைல் நம்பர் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஸ்மார்ட்போனின் லோக்கேஷன் (யூசர்கள் இதை தங்கள் தொடர்புகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால்), தற்காலிகமாக மற்றும் மறைகுறியாக்கப்பட்டு சென்றடையாத மெசேஜ்கள் அல்லது மல்டிமீடியா பைல்கள், காண்டாக்ட்ஸ் புக் & ஷேர்டு ஸ்டேட்டஸ், மற்றும் பேமெண்ட்ஸ் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை வாட்ஸ்அப் சேகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

Also read... FASTag - ஐ ஈஸியாக வாங்குவது எப்படி? இங்கெல்லாம் ரீசார்ஜ் செய்யலாம்புதிய டர்ம்களில் உள்ளவை ஏற்கனவே அறியப்பட்டிருந்தாலும், வாட்ஸ்அப் இப்போது யூசர் டேட்டா என்பதை தெளிவாக உச்சரிக்கிறது அதோடுகூட பேஸ்புக் மற்றும் பிற பேஸ்புக் ப்ரோடக்ட்களுக்கும் சேவைகளுக்கும் யூசர் டேட்டாவை தொடர்ந்து பகிரப்படும். எல்லா நேரங்களிலும் யூசர் இருப்பிடத் தரவைக் (location data) கண்காணிக்கும் என்றும் வாட்ஸ்அப் கூறுகிறது, 

மேலும் உங்கள் ஆண்ட்ராய்டு போன் அல்லது ஆப்பிள் ஐபோனில் (Android phone or Apple iPhone) வாட்ஸ்அப்பிற்கான இருப்பிட அணுகலை உஷாராக ஆப் செய்து வைத்திருந்தாலும், WhatsApp உங்கள் IP முகவரிகளையும் போன் எண் குறியீடுகளையும் பொதுவான ஒரு இடத்தில் சேகரித்து வைத்து பதிவு செய்கிறது. முன்னர் இருந்ததை போல Encrypted வடிவில்தான் இந்த தகவல்கள் அனைத்தும் சேமிக்கப்படவிருக்கின்றன. அதேபோல் நீங்கள் ஃபார்வேர்டு செய்யும் மெசேஜ்களையும் வாட்ஸ் அப் கண்காணிக்கவிருக்கிறது இந்த மாற்றம் எதற்கென்றால் கண்டறியும் மற்றும் சரிசெய்தல் (Diagnostics and Troubleshooting) என்று WhatsApp கூறுகிறது. உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
First published: January 11, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading