Home /News /technology /

அனுமதியின்றி நமது லொகேஷனை மற்றவருடன் ஷேர் செய்கிறதா இன்ஸ்டாகிராம்.? வெடிக்கும் புதிய சர்ச்சை.!

அனுமதியின்றி நமது லொகேஷனை மற்றவருடன் ஷேர் செய்கிறதா இன்ஸ்டாகிராம்.? வெடிக்கும் புதிய சர்ச்சை.!

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

Instagram | முதலுக்கே மோசம் என்ற வகையில் இன்ஸ்டாகிராம் குறித்த பதிவு ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதில் இன்ஸ்டாகிராம் தன்னுடைய யூசர்-களின் லொகேஷனை அவர்களின் அனுமதி இல்லாமலே மற்றவருக்கு தெரியப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இன்ஸ்டாகிராம் தற்போது அனைவரும் மிகவும் விரும்பி பயன்படுத்தும் ஒரு செயலியாக மாறிவிட்டது அதனுடைய எளிய கட்டமைப்பினாலும் வசதிகளினாலும் பேஸ்புக்கை விட இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சினிமா நடிகர் நடிகைகளும், அரசியல்வாதிகளும், மற்றும் பல பிரபலங்களும் தங்களின் அன்றாட வாழ்கையின் முக்கிய நிகழ்வுகளை பகிர்ந்துகொள்ள இன்ஸ்டாகிராமை தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதற்கு இதனுடைய பாதுகாப்பு அம்சங்களும் மிக முக்கிய காரணமாக உள்ளது.

ஏனெனில் உங்களின் அனுமதி இல்லாமல் உங்களுடைய ஒரு பதிவை கூட மற்றவர் பார்க்கவோ அல்லது அதை ஷேர் செய்யவோ இயலாது. அந்த அளவுக்கு இன்ஸ்டாகிராமின் பாதுகாப்பு மிகுந்த வலிமையாக உள்ளது. இந்த நிலையில் முதலுக்கே மோசம் என்ற வகையில் இன்ஸ்டாகிராம் குறித்த பதிவு ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதில் இன்ஸ்டாகிராம் தன்னுடைய யூசர்-களின் லொகேஷனை அவர்களின் அனுமதி இல்லாமலே மற்றவருக்கு தெரியப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக ஐஓஎஸ்(IOS) இயங்குதளத்தின் புதிய அப்டேட்டுக்கு பிறகு இன்ஸ்டாகிராம் தன்னுடைய யூசர்களின் லொகேஷனை மற்றவருடன் ஷேர் செய்வதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது

இந்த பதிவு வைரலான நிலையில், இது குறித்து இன்ஸ்டாகிராமின் தற்போதைய சி.இ.ஓ ஆடம் மொசேரி கருத்து தெரிவித்துள்ளார். அதில் “அந்தத் தகவல் தவறானது எனவும், இன்ஸ்டாகிராமின் கொள்கைகளில் யூசர்களின் அனுமதியின்றி அவர்களின் லொகேஷன் ஷேர் செய்வது குறித்து எங்குமே குறிப்பிடவில்லை. நாங்கள் அப்படி ஒரு தவறை கண்டிப்பாக செய்யவே மாட்டோம் என தெரிவித்தார்.



மேலும் மொபைலில் லொகேஷன் செட்டிங் ஆன் செய்து வைத்து இருக்கும் போது இன்ஸ்டாகிராம் தன்னுடைய யூசர்-களின் லொகேஷனை சில சமயங்களில் ட்ராக் செய்வது உண்மைதான் எனவும், அவர்கள் பதிவேற்றம் செய்யும் போட்டோக்களையும், வீடியோக்களையும் அவை எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பதை கண்டறிந்து அவற்றை டேக் செய்வதற்காகவே அதை டிராக் செய்வதாகவும் குறிப்பிட்டார். இவ்வாறு லொகேஷனை ஷேர் செய்வது தன்னுடைய மொபைல் செட்டிங் சம்பந்தப்பட்ட விஷயம் என்று குறிப்பிட்டுள்ள அவர், இன்ஸ்டாகிராம் கொள்கைகளுக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Also Read : பாதுகாப்பை பலப்படுத்திய வாட்ஸ்அப்... இனி இதை செய்ய முடியாது.!

அவ்வாறு டிராக் செய்வதை இன்ஸ்டாகிராம் மற்ற எவருடனும் பகிர்ந்து கொள்ளாது, இன்ஸ்டாகிராம் எப்போதும் தன்னுடைய யூசர்-களின் பாதுகாப்பில் மிக அதிக அக்கறை செலுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும் யூசர்கள் விரும்பினால் இந்த செட்டிங்கை ஆப் செய்து வைத்துக் கொள்ளலாம் எனவும் ஆனால் ஊபர், ஸ்விக்கி போன்ற டெலிவரி ஆப்-களை பயன்படுத்த இந்த லொகேஷன் ட்ராக் செய்யும் வசதி மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Also Read : தடை செய்யப்பட்டது VLC மீடியா பிளேயர் - உலக சினிமா விரும்பிகளின் ஆஸ்தான பிளேயர்!

இதற்கிடையில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்காக ‘இன்ஸ்டாகிராம் சென்சிடிவ் கன்டென்ட் கண்ட்ரோல்’ என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை ஆன் செய்து வைத்துக் கொள்வதின் மூலம் அவர்களுக்கு திரையில் தோன்றும் செய்திகளையும், பதிவுகளையும் கட்டுபாடுகள் ஏற்படுத்தி, வன்முறை காட்சிகள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டோர் பார்க்க கூடிய எந்த பதிவும் அதில் தோன்றாத வண்ணம் அவை வடிகட்டப்பட்ட பின்பே திரையில் தோன்றும் படி தங்களின் அல்காரிதம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Instagram, Technology

அடுத்த செய்தி