Home /News /technology /

டிக்-டாக்கை காப்பியடிக்கிறதா இன்ஸ்டாகிராம்... ஆடம் மொசெரி விளக்கம்.! 

டிக்-டாக்கை காப்பியடிக்கிறதா இன்ஸ்டாகிராம்... ஆடம் மொசெரி விளக்கம்.! 

Instagram

Instagram

Instagram | சமீபத்தில் கன்டென்ட் கிரியேட்டர்களின் வீடியோவை பார்க்க விரும்பும் யூஸர்கள் இனி பணம் செலுத்த வேண்டும் என்ற அம்சத்தை கொண்டு வர இன்ஸ்டாகிராம் திட்டமிட்டுள்ளது. மேலும் யூஸர்களுக்கு பாலோயர்களைத் தவிர பிறரது வீடியோக்களையும் காட்டும்படி அல்காரிதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்கள் உலக அளவில் பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இளம் தலைமுறையினர் இடையே இன்ஸ்டாகிராம் தளத்திற்கு மட்டுமே அதிக மவுசு உள்ளது. லைவ் வீடியோ, ரீல்ஸ் வீடியோ மற்றும் போட்டோக்களை பகிர்ந்து கொள்ள உதவுவதால் இன்ஸ்டாகிராம் யூஸர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதற்கு ஏற்றார் போல் இன்ஸ்டாகிராம் நாளுக்கு நாள் தனது யூஸர்களுக்கான ரீல்ஸ் சேவையில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் கன்டென்ட் கிரியேட்டர்களின் வீடியோவை பார்க்க விரும்பும் யூஸர்கள் இனி பணம் செலுத்த வேண்டும் என்ற அம்சத்தை கொண்டு வர இன்ஸ்டாகிராம் திட்டமிட்டுள்ளது. மேலும் யூஸர்களுக்கு பாலோயர்களைத் தவிர பிறரது வீடியோக்களையும் காட்டும்படி அல்காரிதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இன்ஸ்டாகிராம் டிக்-டாக்கைப் போலவே தன்னை மாற்றிக்கொண்டு வருவதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைக் கொண்ட பிரபல மாடலான கைலி ஜென்னர் மற்றும் ஹாலிவுட் நடிகையான கிம் கர்தாஷியன் ஆகியோர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்கள் டிக்-டாக்கை பிரதிபலிப்பதாக குற்றம்சாட்டியது பெரும் விவாதமாக மாறியது.

கிம் கர்தாஷியன் மற்றும் கைலி ஜென்னர் ஆகியோர் இன்ஸ்டாகிராம் டிக்டோக்கைப் போல இருக்க முயற்சிப்பதாக விமர்சித்ததைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராமின் தலைவர் ஆடம் மொசெரி இன்ஸ்டாகிராமின் மாற்றங்களை விரிவாக விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.



அந்த வீடியோவில் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவதை யூஸர்கள் ஒரு சிறந்த அனுபவமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பணியாற்றி வருவதாகவும், இன்ஸ்டாகிராமில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது தனக்குத் தெரியும் என்றும் மொசெரி தெரிவித்துள்ளார்.

Also Read : வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு... வெளியானது புதிய எச்சரிக்கை.!

சமீபத்தில் போட்டோக்களை ரீல்ஸ் வீடியோக்களாக மாற்றுவது குறித்து பேசியுள்ள ஆடம் மொசெரி, இன்ஸ்டாகிராமில் போட்டோக்களுக்கான ஆதரவு தொடர்ந்து நீடிக்கும், ஆனால் அனைத்தையும் விரைவில் வீடியோவாக பார்க்கலாம் என்றார், மேலும் மக்களும் அதையே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read : செய்தித்தாள்கள், டிவி தேவையில்லை - டிக்டாக்கில் செய்திகளில் ஆர்வம் காட்டும் இளைய தலைமுறை

அதேபோல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ ஸ்கீரினில் கொண்டு வரப்பட உள்ள மாற்றங்களும் சோதனை முயற்சி மட்டுமே என சுட்டிக்காட்டியுள்ள அவர், யூஸர்களின் பக்கங்களில் அவர்கள் பின்தொடராத கணக்குகளில் இருந்து தோன்றும் பதிவுகள், பரிந்துரைகள் குறித்தும் நிறைய புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.



ஆனால் இதன் மூலமாக பரிந்துரைகள் புதிய உள்ளடக்கத்தைக் கண்டறிய யூஸர்களுக்கு உதவுவதாகவும், மேலும் படைப்பாளிகள் அதிகமான மக்களைச் சென்றடைய உதவும் எனக்கூறியுள்ள ஆடம், ஒருவேளை யூஸர்களுக்கு அவை பிடிக்காவிட்டால், அவற்றை மூடலாம் அல்லது ஒரு மாதம் வரை அவர்களுடைய வீடியோக்கள் பரிந்துரையில் காட்டாத வண்ணம் முடக்கலாம் என பரிந்துரைத்துள்ளார்.

Also Read : தினசரி 10 லட்சம் போலி கணக்குகளை அகற்றி வரும் ட்விட்டர்.!

இன்ஸ்டாகிராமில் போட்டோ ரீல்ஸ், ஸ்கிரீன் மாற்றம் உள்ளிட்ட புதிய அம்சங்களை கொண்டு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஏராளமான யூஸர்களை கவரவில்லை. அந்த அம்சங்கள் அனைத்தும் டிக்-டாக்கை நினைவூட்டுவதால், இன்ஸ்டாகிராமை இன்ஸ்டாகிராமாக மீண்டும் உருவாக்குங்கள் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Instagram, TikTok

அடுத்த செய்தி