கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மொபைல் நிறுவனங்கள் இந்திய சந்தையில் அறிமுகம் ஆகி, காலூன்றி மிகப்பெரிய அளவில், தவிர்க்க முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளன. தொழில் நுட்ப வளர்ச்சி, வசதியான அம்சங்கள் என்று தேவைகள் மாறி வரும் போது, அதற்கு ஏற்றார் போல நிறுவனங்களும் தங்களின் பொருட்களை மேம்படுத்தி வந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணியில் இருந்த ஹானர் மொபைல் நிறுவனம், தற்போது இந்தியச் சந்தையில் இருந்து வெளியேறப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆண்டிராய்டு ஃபோன்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகத் தொடங்கிய காலத்தில், மொபைல் போன்களை அறிமுகம் செய்து சந்தையில் முன்னணியில் இருந்தது ஹானர் நிறுவனம். அதைத் தொடர்ந்து, வேரபில்ஸ், டேப்லட்ஸ் மற்றும் லேப்டாப்களை அறிமுகம் செய்தது. கடந்த சில ஆண்டுகளாக ஹானர் நிறுவனத்திடம் இருந்து புதிதாக எந்த தயாரிப்பும் அறிமுகம் ஆகவில்லை. இதனாலேயே இந்தியாவில் இருந்து ஹானர் நிறுவனம் வெளியேறுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அது உண்மையல்ல என்று ஹானர் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. நிறுவனம் இந்தியாவில் தனது வணிகத்தை தொடர விரும்பவில்லை என்ற அறிக்கை செக்யூரிட்டீஸ் டைம்ஸ் வெளியிட்ட போது, ஹானர் பதில் அறிக்கையை வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்தியாவில் இருந்து முழுவதுமாக வெளியேறவில்லை என்றும், ‘பிசினஸ் ஆபரேஷன்’ தொடர்ந்து இயங்க இருக்கிறது என்றும் நிறுவனம் தெரிவித்தது. மேலும், நிறுவனம் மிகவும் பாதுகாப்பான அணுகுமுறையுடன் செயல்படும் என்று கூறியது.
மேலே கூறியது போல, இந்தியாவின் ஸ்மார்ட்ஃபோன் விற்பனையில் ஹானர் ஃபோன்கள் பெறவில்லை. சீனாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு, அமெரிக்க வர்த்தகத் தடைகள் விதித்ததில் இருந்து, தன்னுடைய பிரச்சனைகளை தானே கையாள வேண்டும் என்று Huawei நிறுவனம் விற்பனையான பிறகு, ஹானர் தன்னிச்சையாக இயங்குகிறது.
Also Read : ரூ.30,000 க்குள் பெஸ்ட் ஸ்மார்ட் டிவி வேணுமா! உங்களுக்கான சாய்ஸ் இதோ..
நுகர்வோருக்கான தனது வணிகத்தை நீட்டிக்க முடியாமல் திணறிய போது, ஹுவாய் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் ஹானரின் ஸ்மார்ட்ஃபோனின் சொத்துக்களை, சீனாவை அடிப்படையாக வைத்து இயங்கி வரும் Shenzhen Zhixin New Information Technology Co Ltd என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்தது.
Also Read : இந்தியாவில் Xiaomi புதிய மாடல் தயாரிப்புகள் வெளியானது.!
ஹானர் மொபைல்ஸ் விற்பனை உச்சத்தில் இருந்த போது, அதன் இந்திய மொபைல் பிரிவில் 3 சதவீத வளர்ச்சி பெற்று, வளர்ந்து வரும் தயாரிப்புகளின் பட்டியலில் உறுதியான இருப்பைப் பெற்றிருந்தது. அதன்பிறகு தான் ஹானர் நிறுவனம் அணியக்கூடிய கேட்ஜட்களான வேரபில்ஸ் என்று கூறப்படும் தயாரிப்புகளை வழங்கியது. பின்னர், லேப்டாப்களையும் அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், ஹானர் வெளியேறப் போகிறது என்ற தகவல், இந்தியாவில் உள்ள அதிகாரிகளுக்கு ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. இதற்குக் காரணம், சீன நிறுவனங்களான Xiaomi, Oppo மற்றும் Vivo போன்ற பிராண்டுகள் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிறுவனங்கள், தங்களை காத்துக்கொள்ளவே வெளியே வந்துள்ளன, மற்றும் பணம் செலுத்தும் முறைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், குற்றமற்றவர்கள் என்றும் கூறுகின்றனர்.
Also Read : ஸ்பேம் அழைப்புகளை நிரந்தரமாக தடுக்க உங்கள் போனில் ஒரே ஒரு செட்டிங்ஸ் மாற்றினால் போதும்.!
எவ்வாறாயினும், ஹானர் மொபைல் பிரிவில் பின்வாங்கிய நிலையில், Oppo மற்றும் Vivo நிறுவனங்களுக்கு சாதமாக மாறியது என்பதை மறுக்க முடியாது. முழுவதுமாக இந்தியாவில் இருந்து வெளியேறவில்லை என்பதை ஹானர் உறுதி செய்த நிலையில், மீண்டும் ஸ்மார்ட்ஃபோன்கள் பிரிவில் இயங்கத் தொடங்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.