டிக்டாக்-க்கு போட்டியாக வீடியோ ஷேரிங் ஆப்பை வெளியிடுகிறது ஃபேஸ்புக்..?

ஃபேஸ்புக் பயனாளர்களைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்துவதில் தொடர்ந்து அந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

Web Desk | news18
Updated: July 17, 2019, 6:35 PM IST
டிக்டாக்-க்கு போட்டியாக வீடியோ ஷேரிங் ஆப்பை வெளியிடுகிறது ஃபேஸ்புக்..?
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: July 17, 2019, 6:35 PM IST
டிக்டாக் ஆப் போன்றே வீடியோ ஷேரிங் ஆப் ஒன்றை அறிமுகம் செய்ய ஃபேஸ்புக் நிறுவனம் தயாராகி வருவதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

ட்விட்டரில் ‘வைன்’ வீடியோ ஷேரிங் சேவைப் பிரிவின் மேலாளராகப் பணியாற்றிய ஜேசன் டாஃப் என்பவர் சமீபத்தில் ஃபேஸ்புக் குழுமத்தில் இணைந்துள்ளார். புதிய தயாரிப்பு ஒன்றுக்கு தயாரிப்பு மேலாண்மை இயக்குநராக ஜேசன் பொறுப்பேற்று உள்ளார். இதுதொடர்பான அறிவிப்பையும் ஜேசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் பயனாளர்களைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்துவதில் தொடர்ந்து அந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. ஜேசன் டாஃப் எந்தத் தயாரிப்புக்கு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற கேள்விக்கு முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை. ஆனால், அவரது ட்விட்டர் பதிவில் யூஎக்ஸ் டிசைனர்கள், மென்பொறியாளர்கள் வேலைக்குத் தேவை என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Loading...இதனால் ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக ஒரு வீடியோ ஷேரிங் ஆப் ஒன்றை வெளியிடத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஃபேஸ்புக் நிறுவனமும் கடந்த வாரம் ‘வாடிக்கையாளர்களைக் கவரும் புதிய ஆப்- விரைவில் வெளியீடு’ என்றதொரு பதிவை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: இன்று வெளியாகும் Mi A3... இளைஞர்களைக் கவர ஜியோமி அதிரடி!
First published: July 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...