ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

தனியுரிமை சட்ட மீறல்: வாட்ஸ் அப் செயலிக்கு ரூ. 2 ஆயிரம் கோடி அபராதம் விதிப்பு!

தனியுரிமை சட்ட மீறல்: வாட்ஸ் அப் செயலிக்கு ரூ. 2 ஆயிரம் கோடி அபராதம் விதிப்பு!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பல காரணிகளின் அடிப்படையில் முன்மொழியப்பட்ட அபராதத்தை மறுபரிசீலனை செய்ய மற்றும் அதிகரிக்கும்படி அயர்லாந்திடம் கேட்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் 225 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்படுவதாகவும்  டி.பி.சி. தெரிவித்துள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பிரபல தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப் ஐரோப்பிய ஒன்றிய தனியுரிமை சட்டங்களை மீறியதாக கூறி அயர்லாந்து நாடு இந்திய மதிப்பில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

  சர்வதேச அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ் அப் உள்ளது.  கடந்த 2009ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிட்ட இந்த செயலியை 2014ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் கையக்கப்படுத்தியது. தற்போது 200 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

  தனியுரிமையை மீறுவதாக வாட்ஸ் அப் செயலி அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையான ஒன்றாகும். இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தனியுரிமை சட்டங்களை மீறியதாக வாட்ஸ் அப் செயலிக்கு 225 மில்லியன் யூரோ ( இந்திய மதிப்பில் 1947 கோடி ஆகும்) அபராதத்தை அயர்லாந்து நாடு விதித்துள்ளது.

  வாட்ஸ் அப் செயலி தனது பயனர்களின் விவரங்களை பேஸ்புக் நிறுவனத்தின் பிற செயலிகளுடன் பகிர்ந்துகொள்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. எனினும் இந்த அபராதம் மிகவும் குறைவாக இருப்பதாக ஐரோப்பிய ஒழுங்குமுறையாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அயர்லாந்து நாட்டின் தகவல் பாதுகாப்பு ஆணையம் (டி.பி.சி)  இந்த அபராதத் தொகையை அதிகரித்துள்ளது.

  மேலும் படிக்க: இந்தியர்களின் 30 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கம் - காரணம் என்ன?

  பல காரணிகளின் அடிப்படையில் அதன் முன்மொழியப்பட்ட அபராதத்தை மறுபரிசீலனை செய்ய மற்றும் அதிகரிக்கும்படி அயர்லாந்திடம் கேட்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் 225 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்படுவதாகவும்  டி.பி.சி. தெரிவித்துள்ளது.  இந்த  அபராதம் ஒப்பிட்டளவில் மிகவும் அதிகமானது என்றும் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் வாட்ஸ் அப் அறிவித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Facebook, Ireland, WhatsApp