Home /News /technology /

IRCTC பயணிகள் தகவல்களை பயன்படுத்தி ரூ.1000 கோடி வருமானம் ஈட்ட ரயில்வே துறை திட்டம்

IRCTC பயணிகள் தகவல்களை பயன்படுத்தி ரூ.1000 கோடி வருமானம் ஈட்ட ரயில்வே துறை திட்டம்

ஐ.ஆர்.சி.டி.சி

ஐ.ஆர்.சி.டி.சி

IRCTC பயணிகளின் தகவல்களை தனியார் நிறுவனங்களிடம் விற்று அதன் மூலம் ரூ.1000 கோடி வருமானம் ஈட்ட திட்டமிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    இந்நிய ரயில்வே சேவையின் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் IRCTC செயலியில் சேகரிக்கப்பட்ட தகவல்களை விற்று வருமானம் ஈட்ட ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

    IRCTC பயணிகளின் தகவல்களை தனியார் நிறுவனங்களிடம் விற்று அதன் மூலம் ரூ.1000 கோடி வருமானம் ஈட்ட திட்டமிட்டுள்ளது. அதன்படி அதற்கான டெண்டர் வெளியான நிலையில், அது பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.  IRCTC வெளியிடப்பட்ட அறிக்கையில், ரயில் பயணிகள், பார்சல் சேவை பயன்படுத்துவோரின் பெயர், வயது, தொலைபேசி எண், பாலினம், முகவரி, மின்னஞ்சல், பயணிப்போர் எண்ணிக்கை, பேமெண்ட் மோட், லாக் இன், பாஸ்வோர்ட் உள்ளிட்ட தகவல்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    Also Read : ஐ-போன்களில் பாதுகாப்பு குறைபாடு.. உடனடியாக இதை செய்யவும் - ஆப்பிள் நிறுவனம்

    இதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் IT Act 2000, GDPR (General Data Protection Regulation) மற்றும் தனிமனித தகவல் பாதுகாப்பு சட்டம் 2018 ஆகிய விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் தகவல்கள் பயன்படுத்தப்படும் என ரயில்வே துறை உறுதியளித்துள்ளது. மேலும் இந்த தகவல்களை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய மட்டுமே தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், பயனாளிகளின் தகவல் நிச்சயம் பாதுகாக்கப்படும் என ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.

    இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியான உடனே, IRCTCயின் பங்குகள் உயர தொடங்கிவிட்டன. நேற்று ஒரே நாளில் 5% சதவீத உயர்வும், கடந்த 2 நாட்களில் 10.5% உயர்வையும் எட்டியுள்ளது. மேலும் IRCTC செயலி மற்றும் இணையதளத்தை 10 கோடி பயணாளிகள் பயன்படுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. 
    Published by:Siddharthan A
    First published:

    Tags: IRCTC

    அடுத்த செய்தி