Home /News /technology /

இந்தியாவில் அறிமுகமான புதிய iQOO Z6 Lite 5G ஸ்மார்ட் ஃபோன்.. விலை மற்றும் ஸ்பெசிஃபிகேஷன்கள்.!

இந்தியாவில் அறிமுகமான புதிய iQOO Z6 Lite 5G ஸ்மார்ட் ஃபோன்.. விலை மற்றும் ஸ்பெசிஃபிகேஷன்கள்.!

iQOO Z6 Lite 5G

iQOO Z6 Lite 5G

iQOO Z6 Lite 5G Smartphone | நாட்டில் விரைவில் 5G சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், iQOO நிறுவனம் தனது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போனான iqoo z6 lite 5G-ஐ சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. செப்டம்பர் 14, 2022 முதல் அமேசானில் இந்த போன் விற்பனைக்கு வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நாட்டில் Qualcomm Snapdragon 4 Gen 1 ப்ராசஸரை கொண்டு இயங்கும் முதல் ஸ்மார்ட் போனாக புதிய iQOO z6 lite 5G அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த லேட்டஸ்ட் மொபைலின் சிறப்பம்சங்கள், மற்றும் விலை பற்றி தற்போது பார்க்கலாம்.

iQoo Z6 Lite 5G மொபைலின் விலை: புதிய iQoo Z6 Lite 5G மொபைலின் 4 GB ரேம் + 64 GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.13,999-ஆகவும், 6 GB ரேம் + 128 GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.15,499-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் மிஸ்டிக் நைட் மற்றும் ஸ்டெல்லர் கிரீன் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட் போன் செப்டம்பர் 14 மதியம் 12:15 மணிக்கு இ-காமர்ஸ் தளமான அமேசான் மற்றும் iQoo-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட் வழியே விற்பனைக்கு வரும். SBI கார்டு பயன்படுத்தி இந்த மொபைலை வாங்குவதன் மூலம் ரூ.2500 தள்ளுபடி பெறலாம். இந்த மொபைலுக்கான சார்ஜரை ஸ்மார் ட்போனுடன் சேர்த்து வாங்கும் போது விலை ரூ.399-ஆகவும், தனியாக சார்ஜரை வாங்கினால் அதன் விலை ரூ.600-ஆகவும் இருக்கும்.

iQoo Z6 Lite 5G மொபைலின் ஸ்பெசிஃபிகேஷன்ஸ்: IQOO Z6 Lite 5G மொபைல் 8.25mm தடிமன் மற்றும் 194g எடை கொண்டது. இது 6.58-இன்ச் FHD+(2408×1080) LCD டிஸ்பிளேவுடன் 120Hz ஸ்கிரீன் ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 240Hz டச் சேம்பிளிங் சப்போர்ட்டுடன் வருகிறது. இந்த டிவைஸ் புதிய Snapdragon 4 Gen 1 SoC ப்ராசஸரால் இயக்கப்படுகிறது மற்றும் 6GB வரை LPDDR4X ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மேலும் இந்த ஃபோனில் ஹைப்ரிட் சிம் ஸ்லாட் கொடுக்கப்பட்டு உள்ளது.



எனவே இந்த மொபைல் ஒரே நேரத்தில் 2 சிம் கார்டுகளை பயன்படுத்த அல்லது இரண்டாவது சிம் ஸ்லாட்டில் மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்த அனுமதிக்கும். இந்த மொபைலில் 4 காம்போனென்ட் கூலிங் சிஸ்டம் உள்ளது. இது நீண்ட நேரம் கேமிங் மற்றும் திரைப்படங்களை பார்க்க மொபைலை பயன்படுத்தும் போது டிவைஸ் ஹீட் ஆகாமல் கூலிங்காக இருக்க உதவுகிறது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Funtouch OS 12-ல் இயங்குகிறது. இது ஒரு பாட்டம்-ஃபையரிங் மோனோ ஸ்பீக்கருடன் வருகிறது மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் கொண்டுள்ளது.

Also Read : இந்தியாவிற்கு வரும் ஏர்டெல் 5G.. சேவையை பெற நீங்கள் செய்ய வேண்டியது என்ன.?

கேமராக்களை பொறுத்த வரையில் IQOO Z6 Lite 5G மொபைலானது ஆட்டோஃபோகஸுடன் கூடிய 50MP ஷூட்டரின் ஹெட்லைன் கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இந்த டிவைஸ் போனின் பின்புறத்தில் 2MP மேக்ரோ சென்சாரையும் கொண்டுள்ளது. செல்ஃபிக்கள் மற்றும் வீடியோ கால்ஸ்களுக்கு ஏற்ற வகையில் 8 MP ஃப்ரன்ட் கேமரா உள்ளது. 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள இந்த மொபைல் 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட்டுடன் வருகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Smartphone, Technology

அடுத்த செய்தி