தொழில்நுட்பம்

  • associate partner

ஐபிஎல் 2020 : ஏழு மொழிகளில் ஒன்பது ஈமோஜிகளை அறிமுகப்படுத்திய ட்விட்டர்

ஐ.பி.எல் போட்டிகள் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், புதிய எமோஜிக்களை ட்விட்டர் அறிமுகம் செய்துள்ளது.

ஐபிஎல் 2020 : ஏழு மொழிகளில் ஒன்பது ஈமோஜிகளை அறிமுகப்படுத்திய ட்விட்டர்
மாதிரிப் படம்
  • News18 Tamil
  • Last Updated: September 15, 2020, 4:17 PM IST
  • Share this:
ஐபிஎல் போட்டிகள் வரும் 19ம் தேதி தொடங்க உள்ளது. எனவே அனைத்து அணி வீரர்களும் ஐக்கிய அமீரகத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோத உள்ளதால் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. ஐ.பி.எல் போட்டிகளின்போது ட்விட்டர் டைம்லைனிலிருக்கும் க்ரௌட் லைவ்வின் மூலம் நீங்கள் அனைவரும் ஒரு இடத்தில் உட்கார்ந்து போட்டியைப் பார்ப்பது போல் உணர முடியும்.

ஆறு மாதங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் மற்றும் நேசத்துக்குரிய கிரிக்கெட் போட்டிகள் திரும்ப வருகிறது. கொரோனோவால் இந்த ஆண்டு அரங்கத்தில் அமர்ந்து பார்வையாளர்கள் விளையாட்டு போட்டிகளை பார்க்க அனுமதி கிடையாது. எனவே இந்த ஆண்டு வீட்டிலிருந்து பார்வையாளர்கள் கிரிக்கெட் விளையாட்டை பார்க்க ட்விட்டர் ஏற்பாடு செய்துள்ளது.

ஈமோஜிகள் மூலம்உற்சாகத்தை அதிகரிக்க ட்விட்டர் சிறப்பு குழு ஈமோஜிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆங்கிலம் மற்றும் ஆறு இந்திய மொழிகளில் ஹேஷ்டேக்குகளாக வெளியிடப்பட்டுள்ளது அனைத்து அணி ஈமோஜிகள் ஹேஷ்டேக்குகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது: #OneFamily, #WhistlePodu, #PlayBold, #KorboLorboJeetbo, #SaddaPunjab, #OrangeArmy, #HallaBol, மற்றும் #YehHaiNayiDilli.


இந்த ஒன்பது ஈமோஜிகள் மூலம் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணிக்கு உடனடி ஆதரவைக் கொடுக்க முடியும். ரசிகர்கள் நேரடி உரையாடல்களை பின்பற்றவும், பங்கேற்கவும் முடியும்.


மேலும் புதுப்பிப்புகளுக்கு காத்திருக்க மற்றும் தொடக்க விளையாட்டு #MIvCSK ஐ ஈமோஜிகள் மூலம் ஆதரவு தெரிவிக்கலாம். இந்த ஈமோஜிகள் தற்போது ஐபிஎல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பலரும் ஈமோஜிகள் மூலம் தங்கள் விருப்ப அணிக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
First published: September 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading