வெடித்துச் சிதறிய iPhone XS Max! ஆப்பிள் மீது முதல் குற்றச்சாட்டு

ஐ-போன் வெடித்துச் சிதறியப் புகாருக்கு இதுவரையில் ஆப்பிள் பதிலளிக்காமல் உள்ளது.

Web Desk | news18
Updated: December 31, 2018, 11:37 AM IST
வெடித்துச் சிதறிய iPhone XS Max! ஆப்பிள் மீது முதல் குற்றச்சாட்டு
ஐ-போன் வெடித்துச் சிதறியப் புகாருக்கு இதுவரையில் ஆப்பிள் பதிலளிக்காமல் உள்ளது.
Web Desk | news18
Updated: December 31, 2018, 11:37 AM IST
ஆப்பிள் iPhone XS Max ஒன்று வெடித்துச் சிதறியதாகப் புகார் எழுந்துள்ளது. உலகளவில் ஆப்பிள் போன் ஒன்று வெடித்ததாக புகார் வருவது இதுவே முதல்முறை.

அமெரிக்காவின் ஓஹியா மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரின் ஐ-போன் அவரது பாக்கெட்டிலேயே வெடித்துச் சிதறியுள்ளது.

ஜோஷ் ஹில்லர்டு என்ற அமெரிக்கர் ஆப்பிள் மீது வழக்குத் தொடர உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “வாங்கி மூன்று வாரங்களே ஆன ஐ-போன் XS Max என்னுடைய பின் பாக்கெட்டில் வைத்திருந்த போது வெடித்தது. வெடித்ததில் என் பேன்ட் முழுவதும் தீ பரவியது. அலுவலகத்தில் நான் இருந்ததால் எனது அலுவலக நண்பர்கள் என்னைக் காப்பாற்றினர்.

Loading...
எனது பின்பக்கம் முழுவதும் காயமடைந்துள்ளது. மிகுந்த எரிச்சல் உள்ளது. நான் ஆப்பிள் நிறுவனத்தில் புகார் அளித்துள்ளேன். புகாருக்கு ஆப்பிள் கஸ்டமர் சேவைப் பிரிவில் தகுந்த பதிலும் மரியாதையும் கிடைக்கவில்லை. ஐ-போன் XS மேக்ஸ் மொபைல் வெடித்ததாக சர்வதேச அளவிலேயே பதிவான முதல் புகாராக உள்ளது

ஸ்மார்ஃபோன்களில் ஜியோமி, மோட்டரோலா போன்ற ஃபோன்கள் வெடித்ததாகப் புகார்கள் பதிவாகியுள்ளன. ஆனால், ஐ-போன் வெடித்துச் சிதறியதாக முதல் புகார் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. மோசமான லித்தியம்- ஐயான் மூலம் செய்யப்பட்ட பேட்டரிகளாலே ஸ்மார்ஃபோன்கள் வெடிக்கின்றன எனக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: 2018-ம் ஆண்டில் ரசிகர்களை ஏமாற்றிய படங்கள்
First published: December 31, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...