Home /News /technology /

ரூ.15000-க்கு வரவிருக்கும் ஐபோன் விற்பனை... எப்போது தெரியுமா?

ரூ.15000-க்கு வரவிருக்கும் ஐபோன் விற்பனை... எப்போது தெரியுமா?

ஐபோன்

ஐபோன்

புதிய ஐபோன் மாடல் மார்ச் 8ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சந்தைகளில் எண்ணற்ற செல்ஃபோன் உற்பத்தியாளர்கள் உண்டு என்றாலும், அவற்றில் பெரும்பாலானவை எல்லோரும் வாங்கத் தகுந்த விலையில் ஃபோன்களை விற்பனை செய்யக் கூடியவை ஆகும். ஒன்றிரண்டு மாடல்களை தவிர, பெரும்பாலான மாடல்கள் சாமானிய வடிக்கையாளர்களை குறி வைத்து பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும். ஆனால், ஆப்பிள் ஐஃபோன்களை மட்டும் நீங்கள் அப்படி சொல்லிவிட முடியாது.

    ஆப்பிள் தயாரிப்பு ஃபோனுக்கு என்று தனித்துவமான தரம் மற்றும் வசதிகள் மற்றும் அதி உயர்ந்த செக்யூரிட்டி ஆகியவை உண்டு. இதன் காரணமாக, ஐஃபோன்களின் விலை எப்போதுமே அதிகமாகத் தான் இருக்கும். சுருக்கமாக சொல்வதானால், ப்ரீமியர் வகை என்று சொல்லக் கூடிய உயர் ரக பொருட்களை வாங்கும் சக்தி படைத்தவர்கள் மட்டுமே ஆஃபிள் ஐஃபோன்களை அதிகம் வாங்குவார்கள்

    Also read : உங்கள் iPhone-ல் இருந்து பிறருக்கு அனுப்பும் மெசேஜ்களை மறைப்பது எப்படி?

    இத்தகைய சூழலில், மற்ற நிறுவனங்களை போலவே வாடிக்கையாளர்களை கொத்தாக அள்ளும் நோக்கில், ரூ.20 ஆயிரம் மதிப்புக்கு குறைவான விலையில் ஐஃபோனை அறிமுகம் செய்ய உள்ளது ஆப்பிள் நிறுவனம். இந்நிறுவனம் புதிதாக தயாரித்துள்ள எஸ்இ 2022 அல்லது ஐஃபோன் எஸ்இ 3’எஸ் என்ற புதிய மாடலின் விலை குறித்த தகவல் மீண்டும் வெளியாகியுள்ளது. இந்த ஃபோன் மார்ச் 8ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐஃபோனின் விலை 200 டாலர்களாக இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனத்தின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வரும் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது இந்திய மதிப்பில் இது ரூ.15,100 ஆகும்.

    ஆண்டிராய்டு ஃபோன்கள் அதிகமாக பயன்படுத்தப்படும் ஆப்ரிக்கா, தென்னமெரிக்கா மற்றும் ஆசியாவின் ஒரு சில பகுதிகளை குறி வைத்து இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. வெளிப்படையாக சொல்வது என்றால், ஆண்டிராய்டு ஃபோனுக்கு எங்கெல்லாம் மார்க்கெட் அதிகமோ, அங்கெல்லாம் இந்த புதிய மாடலை களமிறக்கி விளையாட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    also read : அமேசானில் ஐபோன் 13 மினி மீது ரூ.15,250 ஆஃபர்; வாங்குவது எப்படி?

    உதாரணத்திற்கு, இந்திய ஸ்மார்ட்ஃபோன் விற்பனை சந்தையில் ஆப்பிளின் பங்கு 5 சதவீதம் மட்டுமே. இத்தகைய சூழலில், நியாயமான விலையில் ஒரு மாடலை அறிமுகம் செய்தால், அது போட்டியை உருவாக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் கருதுகிறது. இது மட்டுமல்லாவில் சீனாவில் உள்ள தனது உற்பத்தி ஆலைகளை படிப்படியாக இடமாற்றம் செய்து இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக மாற்றிக் கொள்வதற்கான நடவடிக்கையை ஆப்பிள் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

    முன்னதாக, கடந்த 2016ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐஃபோன் எஸ்இ மாடல் 399 டாலர்களுக்கு (ரூ.30,200) விற்பனை செய்யப்பட்டது. கடைசியாக 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட எஸ்இ 2020 மாடலும் அதே விலையில் விற்பனையானது.

     
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Apple iphone, IPhone

    அடுத்த செய்தி