தமிழ்நாட்டில் ரூ.7,000 கோடி செலவில் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி ஆலையை தொடங்கும் டாடா சன்ஸ்!

ஐபோன்

ஆப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் ஒரு உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற வெளிநாட்டு பிராண்டுகளை ஊக்குவிப்பதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி ஏற்கனவே நடைப்வெற்று வருகிறது. சீன உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் ஐபோன் 11 உட்பட ஆப்பிள் நிறுவனத்திற்கான தொலைபேசிகளை தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது ஆலையில் தயாரித்து வருகிறது. இருப்பினும், இந்தியாவில் பெரும்பாலான ஸ்மார்ட்போன் தொழிற்சாலைகள் மற்றும் அதன் வசதிகள் அசெம்பிலி லைனில் அதாவது சில பாகங்களை குறிப்பிட்ட முறையில் சேர்த்துப் பொருத்தும் ஆட்கள் மற்றும் பொறிகளின் வரிசையில் மட்டுமே செயல்பட முடியும். 

இது சீனாவை தவிர்த்து மாற்று உற்பத்தி மற்றும் கூறு ஆதாரங்களை எதிர்பார்க்கும் ஆப்பிள் போன்ற பெரிய பிராண்டுகளுக்கு முன்னால் இந்தியாவிற்கான வாய்ப்பு குறைவதாக தெரிகிறது. இதனை ஈடுசெய்யும் விதமாக, ஆப்பிள் நிறுவனத்தை இந்தியாவில் உற்பத்தி மற்றும் ஆதார மையமாக வழங்கும் முயற்சியில், டாடா சன்ஸ் 1 பில்லியன் டாலர் அதாவது சுமார் 7,000 முதல் 8,000 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுக் கடன்களைக் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தமிழ்நாட்டில் “உலகளவில் அளவிடக்கூடிய” ஸ்மார்ட்போன் மற்றும் கூறு உற்பத்தி வசதிக்காக முதலீடு செய்யப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை தமிழ்நாட்டின் ஓசூரில் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. மாநிலத்தின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பு ஏற்கனவே 500 ஏக்கர்களை புதிய டாடா துணை நிறுவனமான டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கியுள்ளது.

டாடா எலெக்ட்ரானிக்ஸ் சக டாடா அமைப்பான, டைட்டன் இன்ஜினியரிங் மற்றும் ஆட்டோமேஷன் லிமிடெட் (TEAL) ஆகியவற்றிலிருந்து நிபுணத்துவம் பெறும் என கூறப்பட்டுள்ளது. இது டாடாவுக்குச் சொந்தமான வாட்ச் மற்றும் ஆடை பிராண்டான டைட்டனுக்குப் பின்னால் துல்லியமான பொறியியல் பிரிவாக செயல்படுகிறது. மேலும், இது தொடர்பாக வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, டாடா எலெக்ட்ரானிக்ஸ் ஆம்பிட்டியஸ் ஐபோன் உதிரிபாகங்கள் தொழிற்சாலையை நடத்துவதற்கு தமிழகம் மற்றும் கர்நாடகா இரண்டும் வலுவான போட்டியாளர்களாக இருந்தன. 

Also read... கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட் : பயனர்களுக்கு கூடுதல் விவரங்களை வழங்கும் கம்யூனிட்டி ஃபீட்!

ஃபாக்ஸ்கான், சாம்சங், நோக்கியா, டெல் மற்றும் பிற தொழில்நுட்ப ஆலைகளின் காரணமாக இருமாநிலங்களும் ஆதரவை வென்றது. மேலும் தமிழக அரசு ஒரு ஆம்பிட்டியஸ் மின்னணு வன்பொருள் உற்பத்தி கொள்கையையும் கொண்டுள்ளது. அதாவது 2025ம் ஆண்டில் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் அல்லது இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் 25% பங்களிக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் 2017ம் ஆண்டின் ஆரம்பத்தில் காலத்தில் ஆப்பிள் நிறுவனம் பழைய ஐபோன் எஸ்இ பாகங்களை இணைக்க தொடங்கியிருந்தாலும், இப்போது ஐபோன் 11ஐ சேர்க்கும் வாய்ப்பையும் அதிகரித்துள்ளது.

அதேபோல, ஆப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் ஒரு உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற வெளிநாட்டு பிராண்டுகளை ஊக்குவிப்பதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் இதுவரை எடுக்கப்படாத ஒரு தொழிற்துறை தற்போது அமைய உள்ளது. டாடா சன்ஸ் நிறுவனமும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகளைப் பணமாக்குவதையும், ஆப்பிள் நிறுவனத்திற்கு முதன்முறையாக இந்தியாவில் பரந்த உள்ளூர் உற்பத்தி ஆதரவை வழங்குவதையும் அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: