Home /News /technology /

ஐபோன், ஐபேட் யூஸர்களுக்கு முக்கிய அப்டேட்... தொழில்நுட்பத்துறை அமைச்சர் வெளியிட்ட எச்சரிக்கை.! 

ஐபோன், ஐபேட் யூஸர்களுக்கு முக்கிய அப்டேட்... தொழில்நுட்பத்துறை அமைச்சர் வெளியிட்ட எச்சரிக்கை.! 

iPhone

iPhone

Apple | ஐபோன், ஐபேட் ஆகியவற்றின் மென்பொருள் பாதிக்கப்படலாம் என அதன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் வெளியிட்ட செய்தியை அடுத்து, இந்தியத் தொழில்நுட்பத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களுக்கான ஒரு முக்கியமான புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ஆப்பிள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், iOS 15.6.1 ஐபோன் பயனர்களுக்கு முக்கியமான பாதுகாப்பு புதுப்பிப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் ஐபோன் 6 மற்றும் அதற்கு பின் வெளியான மாடல்கள், ஐபேட் 5ஜி மற்றும் ஐபேட் ப்ரோ போன்றவற்றை ஹேக்கர்கள் ஹேக் செய்ய வாய்ப்புள்ளதால் உடனடியாக தங்களது மென்பொருளை அப்டேட் செய்யும் படி வாடிக்கையாளர்களை ஆப்பிள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஐபோன் பயன்படுத்துவோர் சமீபத்தில் வெளியாகியுள்ள புதிய OS-யை அப்டேட் செய்து கொள்ளுமாறு தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "ஆப்பிள் iOS, iPadOS மற்றும் macOS ஆகியவற்றிகான பாதுகாப்பு திருத்தங்களை வெளியிட்டுள்ளது. ஹேக்கர்களால் தகவல் திருட்டுக்கு ஆளாகும் முன்பு உங்கள் ஐபோன்களை 15.6.1 உடன் புதுப்பிக்கவும்” என பதிவிட்டுள்ளார்.



மேலும், CERT-IN, அரசாங்கத்தின் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவும் ஆப்பிள் பயனர்கள் ஐபோன்கள், மேக்புக்ஸ் மற்றும் ஐபேட்களுக்கான லேட்டஸ்ட் மென்பொருளை அப்டேட் செய்து கொள்ளும் படி ஐபோன் யூஸர்களை வலியுறுத்தியுள்ளது. ஐபோன்கள், ஐபாட்கள் மற்றும் மேக் மென்பொருளில் ஹேக்கர்களால் அணுகக்கூடிய இரண்டு பாதுகாப்பு பாதிப்புகளை ஆப்பிள் நிறுவனம் கண்டறிந்ததை அடுத்து, ஐபோன் வாடிக்கையாளர்களுக்கான புதிய OS-யை கடந்த புதன்கிழமை அன்று வெளியிட்டுள்ளது.

Also Read : அனைத்து போன்களுக்கும் ஒரே சார்ஜர்.. விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்.! 

ஆப்பிள் சாதனங்களில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் என்ன.?

ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ஐபோன் 6எஸ் மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்களை பயன்படுத்தும் அனைத்து யூஸர்களுக்குமான மென்பொருள் அப்டேட்டை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, iOS 15 இன் முந்தைய பதிப்புகளைப் பயன்படுத்தும் யூஸர்கள் யாராக இருந்தாலும் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஐபோன்கள், ஐபாட்கள் மற்றும் மேக் மென்பொருளில் இரண்டு விதமான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.  ‘ஹேக்கர்கள் ரிமோட் ஆக்சஸ் முறையில் தன்னிச்சையாக ஆர்பிடரி குறியீடுகளை இயக்க முடியும், Safari மற்றும் பிற ஆப்களுக்குள் நுழைந்து தகவல்களை திருட முடியும் ’ஆகிய இரண்டு பாதுகாப்பு குறைபாடுகள் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.



உங்கள் iPhone, iPad ஐ சமீபத்திய iOS, iPadOS பதிப்பிற்கு எவ்வாறு புதுப்பிப்பது.?

சமீபத்திய iOS பதிப்பைப் பெற, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்டெப்களை பின்பற்றவும்,

- iCloud அல்லது உங்கள் கணினியைப் பயன்படுத்தி உங்கள் சாதனத்தில் உள்ள தகவல்களை பேக்அப் எடுக்கவும்.

- உங்கள் iPhone, iPad எதுவாக இருந்தாலும் அப்டேட் செய்வதற்கு முன்னர் சார்ஜர் மற்றும் இன்டர்நெட் உடன் இணைக்கவும்.

- அமைப்புகளில் (Settings) > பொது (General) என்பதற்குச் சென்று, மென்பொருள் புதுப்பிப்பு (Software Update) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

- அதில் இரண்டு OS- அப்டேட்கள் இருப்பின், அதில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.

-அதன்பின்னர் நிறுவு (install) என்பதை கிளிக் செய்யவும். ஒருவேளை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் என்ற இரு ஆப்ஷன்கள் இருப்பின், அதில் புதிய மென்பொருளை பெறுவதற்காக டவுன்லோடு என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதன் பின்னர் பாஸ்வேட்டை டைப் செய்து, இன்ஸ்டால் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

Also Read : தடை செய்யப்பட்டது VLC மீடியா பிளேயர் - உலக சினிமா விரும்பிகளின் ஆஸ்தான பிளேயர்!

உங்கள் மேக்புக்கில் macOS பதிப்பை புதுப்பிப்பது எப்படி.?

- உங்கள் திரையின் மூலையில் உள்ள ஆப்பிள் மெனுவிலிருந்து (Apple menu), கணினி விருப்பத்தேர்வுகளைத் தேர்ந்தெடுக்கவும்.

- கணினி விருப்பத்தேர்வுகள் (System Preferences) சாளரத்தில் மென்பொருள் புதுப்பிப்பு (Software Update) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

இதற்கு பின்னர் உங்கள் மேக்புக்கில் புதிய சாப்ட்வேர் அப்டேட் செய்யப்பட்டிருக்கும்.
Published by:Selvi M
First published:

Tags: Apple ipad, Apple iphone, Technology, Union minister

அடுத்த செய்தி