விரைவில் வெளியாகும் ஐபோன் 9... ஒன்பிளஸ் 7Tஐ விட விலை குறைவு..!

64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இரண்டு வகையான மெமரியுடன் ஐபோன் 9 வெளியாக உள்ளது.

விரைவில் வெளியாகும் ஐபோன் 9... ஒன்பிளஸ் 7Tஐ விட விலை குறைவு..!
  • Share this:
ஆப்பிள் நிறுவனம் மார்ச் அறிமுகம் படுத்தவுள்ள ஐபோன் 9, ஒன்பிளஸ் 7 T-யை விட குறைவான விலையில் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு முறையும் புதிய ஐபோன் மாடல்களை வெளியிடுவதற்கு முன்பும், புதிய மாடலின் பல சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டு, வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை மேலோங்க வைப்பதை ஒரு வியாபார தந்திரமாகவே செய்து வருகிறது. இதனாலேயே புதிய மாடல் ஐபோன்கள் வரும்போது, உலகம் முழுவதும் உள்ள ஆப்பிள் நிறுவன கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும்.

கடைசியாக ஐபோன் 11 மாடலை வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம், வரும் மார்ச் மாதத்தில் ஐபோன் எஸ் இ 2 என்ற மாடலை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தது. அந்த மாடலை எதிர்பார்த்து, வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நிலையில், அது ஐபோன் 9 என அழைக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இந்த மாடல், 2017ஆம் ஆண்டு வெளியான ஐபோன் 8ல் உள்ள அம்சங்களை அடிப்படையாக கொண்டிருக்கும் என்றும், புதிய மாடலுக்கான சோதனை முடிந்துவிட்டதால், விரைவில் சந்தைக்கு வரும் என்றும் ஆப்பிள் நிறுவனத்தினர் தகவல்களை கசிய விட்டுள்ளனர். ஐபோன் 9ன் விலை நேற்று வரை மர்மமாக இருந்த நிலையில், அது ஒன்பிளஸ் 7டி-யை விட விலை குறைவாக இருக்கும் என்ற தகவலையும் ஆப்பிள் நிறுவனத்தினர் வெளியிட்டிருப்பதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இரண்டு வகையான மெமரியுடன் வெளியாக உள்ள ஐபோன் 9ன் விலை, 28 ஆயிரம் ரூபாய் மற்றும் 32 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ஐபோன்களை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்தால், விலை இன்னும் குறையும் என்றும் கூறப்படுகிறது.
First published: January 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading