ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஐபோன் யூஸர்க்ளுக்கு வெளிவரும் 5G சாஃப்ட்வேர் அப்டேட் - எப்படி ஆக்டிவேட் செய்வது.?

ஐபோன் யூஸர்க்ளுக்கு வெளிவரும் 5G சாஃப்ட்வேர் அப்டேட் - எப்படி ஆக்டிவேட் செய்வது.?

ஐபோன் 5G

ஐபோன் 5G

iPhone 5G Software Update In India | உங்களிடம் இணக்கமான 5G-எனேபிள்ட் ஐபோன் இருந்தால் மற்றும் பீட்டா வெர்ஷனை முயற்சிக்க விரும்பினால் எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் கடந்த மாதம் முதல் 5G சர்விஸ் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ, நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் தங்களது 5G சர்விஸை அறிமுகப்படுத்தி இருக்கின்றன.

தற்போது பெரும்பாலான யூஸர்கள் பயன்படுத்தி வரும் 4G நெட்வொர்க்கை விட புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 5G -யானது 10 மடங்கு இன்டர்நெட் ஸ்பீடை வழங்கும் என கூறப்படுகிறது. எனினும் 5G மொபைல் வைத்திருக்கும் யூஸர்கள் கூட தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய அம்சத்தை பயன்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள். இதற்கு காரணம் பெரும்பாலான மொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் அவற்றின் 5G டிவைஸ்களில் புதிய நெட்வொர்க்கிற்கான சாஃப்ட்வேர் அப்டேட்டை இன்னும் வழங்கவில்லை.

முக்கியமாக ஆப்பிள் நிறுவனம் நாட்டில் உள்ள தனதுஅனைத்து 5G ஐபோன் மாடல்களிலும், அதற்கான சாஃப்ட்வேர் அப்டேட்டை ரிலீஸ் செய்ய தீவிரம் காட்டி வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் ஐபோன்களில் 5G நெட்வொர்க்கை இயக்க, iOS 16.2 சாஃப்ட்வேர் அப்டேட்டில் ஆப்பிள் நிறுவனம் செயல்படுகிறது. இந்நிலையில் இறுதி வெளியீட்டிற்கு முன்னதாக டெவலப்பர்கள் டெஸ்ட் செய்ய பீட்டாவில் சாஃப்ட்வேரை வெளியிட்டிருக்கிறது.

தற்போது Beta வெர்ஷனில் டெவலப்பர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அப்டேட், விரைவில் Public Beta-வில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அப்டேட் ஐபோன் 12, ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 ஆகியவற்றை உள்ளடக்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன்களில் 5G சப்போர்ட்டை கொண்டு வருகிறது.

Also Read : ரூ.15,000 பட்ஜெட்டிற்கும் கீழ் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியல்..!

இந்தியாவில் 5G-யை சப்போர்ட் செய்யும் ஐபோன்கள்:

ஐபோன் எஸ்இ 2022, ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்.

இந்தியாவில் உள்ள அனைத்து ஐபோன்களும் டிசம்பர் இறுதிக்குள் இந்திய 5G பேண்டுகளை சப்போர்ட் செய்யும் என்று ஆப்பிள் நிறுவனம் உறுதியளித்துள்ளது. உங்களிடம் இணக்கமான 5G-எனேபிள்ட் ஐபோன் இருந்தால் மற்றும் பீட்டா வெர்ஷனை முயற்சிக்க விரும்பினால் எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.

Also Read : பார்ப்பதற்கு ஐபோன் 14 ப்ரோவை போலவே இருக்கும் சியோமி நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன்.!

- உங்களது ஐபோனில் beta.apple.com/profile என்ற ஆப்பிள் பீட்டா சாஃப்ட்வேர் ப்ரோகிராம் வெப்சைட்டிற்கு செல்லவும்

- ஆப்பிள் நிறுவனம் வழங்கும் சாஃப்ட்வேர் அப்டேட் பேக்கேஜை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்

- பின் உங்களது ஐபோனின் Settings-க்கு சென்று Mobile Data ஆப்ஷனை டேப் செய்யவும்

- அங்கு காணப்படும் Voice & Data-விற்குள் 4G On, 5G On மற்றும் 5G Auto என்ற 3 ஆப்ஷன்கள் காணப்படும்.

- உங்களது டெலிகாம் ஆப்ரேட்டர் வழங்கும் 5G சேவையை அனுபவிக்க 5G On அல்லது 5G Auto ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். 5G Auto ஆப்ஷன் என்பது 5G அல்லது 4G என்ன நெட்வொர்க் கிடைக்கிறது என்பதை பொறுத்து இரண்டு நெட்வொர்க்ஸ்களுக்கு இடையே மாற யூஸர்களை அனுமதிக்கும்.

Published by:Selvi M
First published:

Tags: 5G technology, Apple iphone, Tamil News, Technology